Loft
ஒரு அடுகும்மாடி குடியிருப்பில் ஒரு நண்பர்கள் தங்கள் மனைவிக்கு தெரியாமல் தவறு செய்வதற்காக அவர்கள் அதை பயன் படுத்துகிறார்கள் அந்த வீட்டுக்கு செல்ல அந்த நண்பர்கள்க்கு மட்டுமே சாவி இருக்கிறது.ஒரு நாள் காலை அந்த வீட்டுக்கு வரும் ஒரு நண்பன் அங்கே ஒரு பெண் கொலை செய்ய பட்டு இருப்பதை பார்க்கிறான். பின் அந்த நண்பர்களில் யார் கொலயை செய்தது யார் அவர்கள் என்ன ஆனார்கள் என்பதை படம் ஆரம்பித்த முதல் நிமிடத்தில் இருந்து கடைசி வரை படு த்ரில்லிங்கா கொட்டுத்திருகிறார் இப்படத்தின் இயக்குனர் எரிக் வான் லூய.
"ALWAYS MAKE THE AUDIENCE SUFFER AS MUCH AS POSSIBLE"
-ALFRED HITCHCOCK
ஒரு த்ரில்லர் படம் எப்போ நமக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்துமனா அந்தப் படத்துல வர கதாபாத்திரங்கள் நம்மளோட ஒருத்தர் மாறி நாம உணரனும். அப்படி இந்த படத்துல வர 5 நண்பர்கள்(1.Cheat,2.one who wants love,3.pervert,4.angry man,5.funny guy) நம்ம ஒவ்வொருவரோட மனசுல இருக்கிற உணர்வுகள உணர்த்துற மாறியான கதாபாத்திர அமைப்புத் தான் இந்தப் படத்தோட மிக பெரிய வெற்றி.
நாம எதிர்பார்க்க முடியாத திருப்பங்களும், படத்தோட முடிவும் மட்டும் இந்த படம் நல்ல இருக்கறதுக்கு காரணம் கிடையாது, ஒவ்வொரு நண்பர்கள் கதையில வர டிராமா, அத படத்தோட சுவாரஸ்யத்த குறைக்காம கொண்டு சென்ற திரைக்கதை , இசை,நடிப்பு எல்லாமும் தான்.
வேற என்ன ஒரு நல்ல மர்டர் மிஸ்ட்ரி பார்த்து ரொம்ப நாள் ஆச்சுனு வருத்த படுறீங்களா உடனே இந்த படாத வாங்கி பாருங்க.
பின் குறிப்பு :
இந்த படத்த இப்போ ஹாலிவுட்ல ரீமேக் செய்றாங்க.
படத்தோட trailer :

No comments:
Post a Comment