7/21/2013

Mariyaan -- Movie Review

மரியான் 

 

இந்த படத்தோட டிரைலர் நமக்கு கொடுத்த உணர்வைக்  கூட  இந்தப் படம் தறவில்லை என்பது தான் உண்மை. டிரைலர் சுவார்சயம்மா இருப்பதற்க்கு எவ்ளோ உழைச்சாங்களோ அந்த அளவுக்குகூட  திரைக்கதைல உழைக்கலைங்கிறது தான் உண்மை.மிக அழகான ஓளிப்பதிவு,இசை இருந்தும் படத்தோட திரைகதைல ஒசோன்ல இருக்கிறத விட பெரிய ஓட்டை இருக்கிறதுனால படம் பெரும்பான்மையான மக்களுக்கு மனதில் ஒட்டாமல் இருக்கிறது.

படத்தோட கதை இது தான். தமிழ் நாட்டுல இருக்கிற கடலோர கிராமமான நீராடில மீனவனா சந்தோஸமா வாழ்க்கையா கழிக்கிறாரு மரியான், அந்த மரியானயே சுத்தி சுத்தி வர அவரோட காதலி பனிமலர் (பார்வதி). முதலில் தன் மனதில் காதல் இருந்தும் அதை பனிமலரிடம் ஒத்துக்கொள்ளாமல் இருக்கும் மரியான், பின் அவளோட காதலை உணர்ந்து(!!!) ஒத்துக்கொள்கிறார். இதன் இடையே பனிமலரை விரும்பும் வில்லன் தீக்குரிசி, பனிமலரின் தந்தை இவனிடம் வாங்கின பனத்திற்க்கு பதிலாக பனிமலரை தனக்கு கல்யானம் செய்து தரும் படி கேக்கிறான். பனிமலரை தீக்குரிசியிடம் இருந்து காப்பாத்துவதற்க்காகவும், இதற்கு இடையில் இலங்கை கடற்ப்படையால தன் நன்பன் சுட்டுக்கொல்லப் படுவதாலும் ஏற்படுகிற விரக்த்தியால் ஆப்பிரிக்காவில் உள்ள் எண்ணெய்க் கிடங்கில் வேலைக்கு செல்கிறார் மரியான். பின் ரெண்டு வருடம் கழித்து ஊருக்கு ஒரு வாரத்தில் திரும்பி வர இருக்கும் நேரத்தில் சூடான் தீவிரவாதிகளால் கடத்த்ப்படுகிறார் , அவர்களிடம் இருந்து மரியான் எப்படி தப்பித்தார் என்பது தான் கதை.

படத்தின் மிகப்பெரிய பிரச்சனை படம் திரைக்கதை அமைப்புத் தான். கதை அருமையான  ஒன்று, படத்தில் பல பிரச்சனைய அலசுவதற்க்கு ஏற்றமாறி  பல வாய்ப்புகள் இருக்கு. மீனவர் பிரச்சனை இருக்கு, வெளி நாட்டில் வேலைப் பார்க்கிறவுங்களோட பிரச்சனை இருக்கு, சூடான் நாட்டுல பல பிரச்சனைகள இருக்கு தெற்கு சூடான் ரெண்டு வருடத்துற்க்கு முன் தான் விடதலை பெற்றது அந்த பிரச்சனை இருக்கு. ஆனா இதுல ஏதாவது ஒரு பிரச்சனையை மையப்படுத்தி இருந்திருந்தாலே படம் நன்றாக இருந்து இருக்கும்.ஆனால் படத்தில் எதுவும் சொல்லப் படவில்லை.

படத்தின் முதல் பகுதி முழுவதும் மரியான் பனிமலர் காதலை சொல்கிறது. நாம் பல முறை பார்த்த தமிழ் சினிமாவோட ஃபார்முலா காதல் காட்சிகள் (குறிப்பா விஜயகாந்த் படத்துல வரும்) , அதனால் இந்த படத்துக்கு வந்து இருக்கக் கூடாதோனு நினைக்கிற அளவுக்கு ரொம்ப தொய்வா இருக்கு படத்தோட முதல் பகுதி. இடைவேளைக்கு ஐந்து நிமிடம் முன்னாடி சூடான் நாட்டு தீவிரவாதிகள் வந்து தனுஸ் அண்ட் கோவ கடத்திட்டுப்போறாங்க.

படத்தோட கதை ரெண்டாம் பகுதில தான் ஆரம்பிக்குது ஆனால் அதுலயும் ஒரு தெளிவு இல்லாமலே படம் நகர்கிறது. ஆப்பிரிக்கா தீவிரவாதிகள் எதுக்கு கடத்துகிறார்கள், அவர்களின் நோக்கமென்ன என்று எதுவும் சொல்லப்படவில்லை.படத்தின் ஒரே ஆறுதல் கடைசி இருபது நிமிடங்கள் தான். 

படத்தை பார்த்துட்டு படத்துல இசை, ஓளிப்பதிவு எல்லாம் சூப்பரா இருக்குனு சொல்றாங்கனா படத்தோட இயக்குனர் தன்னோட வேலையை ஒழுங்கா செய்யலைனு தான் அர்த்தம். எனக்கு ஒரு படம் ரொம்ப பிடிச்சிடிச்சுனா முதல் முறை நான் இசை, ஓளிப்பதிவு இன்னப் பிற விசயங்களை கவணிக்க மாட்டேன், ஆனால் இந்த படத்துல நான் முதல் தடவை பார்க்கும் போதே மார்க் கோனிக்க்ஸோட ஓளிப்பதிவை பார்த்துட்டு படத்தை கவனிக்க மறந்துட்டேன். மார்க் கோனிக்க்ஸ் ஃப்ரேம்களில் கவிதைகள் வடித்து இருக்கிறார். இதில் இயக்குனர் பரத்துக்கும் பங்கு உண்டு என்றாலும் அவர் திரைக்கதையில் கோட்டை விட்டதால் அவரை பாராட்ட முடியவில்லை. ஏ.ஆர்.ரஹ்மானோட இசையில கடல் ராசாவும், நெஞ்சே எழு, ஒரு சில இடங்களில் பின்னனியை தவிர்த்து ஒகே ரகம் தான். யுவன் குரல்ல கடல் ராசா பாட்டு ஏ.ஆர்.ஆரோட பிரில்லியன்ஸ்.

மொத்த படமும் நடிகர்களோட நடிப்பில் தான் பயனிக்கிறது. இது தனுஸோட மிக சிறந்த நடிப்பில வந்தப் படம். படம் முழுக்க மரியான் எப்படி பட்டவன்கிறதுல சிறு பிசுகே இல்லாம செய்து இருக்கிறார், அதுவும் அவரோட ஸ்டைலில். தனுசுடன் சூடானில் மாட்டிக்கொள்ளும் ஜெகனும் நன்றாக நடித்து இருக்கிறார். பார்வதி கண்டிப்பாக தமிழ் சினிமாவில் ஒரு நடிகையாக இந்தப் படத்தின் மூலம் நின்றுவிட்டார். சலீம் குமாருக்கு பெரிதா ரோல் இல்ல மேலும் அவருக்கு குடுத்து இருக்கிற டப்பிங் கேக்கிற மாறி இல்ல.

படத்துல மிகவும் ரசிக்க கூடிய இடங்களும் இருக்கு. தனுஸும், ஜெகனும் பல நாட்கள் சாப்பிடாமல் இருந்து விட்டு சாப்பாடு இருப்பது போல  நினைத்துகொண்டு அவர்கள் சாப்பிடுவது, தனுஸ் தப்பித்துவிட்டு பல நாட்க்களாக சாப்பிடாததால் அவருக்கு வரும் hallucinations.      அந்த hallucinations தான் அவரின் காதலியாக வந்து அவரை காப்பாத்தும், மிக அழகான காட்சியது.இந்த இடங்களில் மட்டும் தான் இயக்குனர் தெறீகிறார்.

இயக்குனர் தவிற மத்த எல்லாரும் நல்லா வேலை செய்து இருந்தாலும் படத்துக்கு மிக முக்கியம் கதையும், இயக்கமும் தான் என்பதை உணர்த்தி உள்ளப் படம்(!!).

மரியான் -- கண்டிப்பா அனைவரின் உழைப்பிற்க்காக ஒரு முறை பார்க்கலாம்.

7/17/2013

Delhi Metro cctv shame....

டெல்லி மெட்ரோ cctv அவலம்.
எட்வர்ட் ச்நோவ்டேன் அமெரிக்க அரசு மக்களை இன்டர்நெட் மூலம் வேவு  பார்கிறது என்று அறிவித்தவுடன் அவரை கைது செய்ய அமெரிக்க அரசு துடித்தது அனால் அவர் அங்கே இருந்து ஹாங்காங் போய் இந்தியாவிடம் அடைக்கலம் கேட்டு இப்போ அவர் ரஷ்யாவிடம் அடைக்கலம்  கேட்டு இருக்கிறார்.

இது ஒரு புறம் இருக்க இத வச்சு நடந்த விவாதங்கள் மிகவும் வருத்ட்ப்படவைத்தது. ச்நோவ்டேன் செய்தது தவறு தான் என்று அமெரிக்க ஊடகங்களே சொன்னது மிகவும் வருத்தத்துக்கு உரியது. அனால் ஒரே சந்தோசம் இங்க்லாந்து மக்கள் இந்த maas surveillance க்கு எதிர்ப்பு தெரிவசச்சது தான்.



இந்தியா ச்நோவ்டேன் க்கு அடைக்கலம் குடுக்கல அது நம்ம நாட்டோட வெளியுறவு கொள்கைக்கு எந்த வித மாதிப்பும் செய்ய கூடாது என்பதற்கு அந்த முடிவை எடுத்து இருக்கலாம். ஆனால் விஷயம் அது இல்ல ஐந்து நாட்களுக்கு முன்னாடி டெல்லி மெட்ரோ ரயில்க் குள்ளே ஒரு ஜோடி யாருமே இல்லாத தனிமையில் முத்தம் இட்டுக் கொள்கின்றனர். அந்த தனிமையை டெல்லி மெட்ரோ ரயில் உள்ளே உள்ள கேமரா வழியாக cctvயில் பார்த்து அதை போர்னோ தளங்களில் வெளியிட்டு உள்ளனர்.

யோசிச்சு பாருங்க எது எவ்ளோ பெரிய அசிங்கம், ஒரு ஜோடி தனிமையில் இருப்பதை ஒரு அரசின் கேமரா வழியாகவே போர்னோ தளங்களில் வெளியுடுவது. இந்த செய்தி வெளியாகி ஐந்து நாள் ஆகியும் பெரிதாக ஒரு தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை, டெல்லி மெட்ரோ  எதிராக எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்  படவில்லை. இதை விட அசிங்கமாக மக்கள் அந்த ஜோடியை கிண்டல் செய்கிறார்கள்.

இங்கே அவர்கள் செய்தது தவறா இல்லையா என்றே பார்க்கிறார்களே தவிற அந்த மெட்ரோவில் வேலை செய்யும் அரசு ஊழியரின் தவறை யாரும் உணரவில்லை. நமது பாதுகாப்பிற்காக ஏற்பட்தப்பட்ட ஒரு பொருளை நமக்கு எதிராகவே பயன்ப்  படுதப்பட்டுளது  என்பதை மக்கள் சரியாக உனராததைத் தான் இது உனர்த்துகிறது.
டெல்லியில் ஒரு பெண் பாலியல் பலாத்கார்ம் செய்யப்ப்ட்ட போது வந்த கோவம் இங்கே ஏற்படாதது மிகவும் வருத்ததுக்குரியது. தனி மணித ஒழுக்கம் என்கிற பெயரில் மக்கள் இங்கே நடந்த அவலத்தை கேள்விக் கேட்க மறுக்கின்றனர்.இந்த மாயையில் இருந்து மக்கள் வெளியே வர வேண்டும். இது நம்மை போன்ற மக்களுக்கு இந்த நாடு எந்த அளவுக்கு சுதந்திரம் அளி(ழி)த்து இருக்கிறது என்பதற்க்கான கேள்வியாகும் இது.இந்த கேள்விக்கு மக்களே தப்பா பதில் சொல்லும் போது தான் ரொம்ப வருத்தமாக இருக்கு.


7/16/2013

Loft - belgium (2008)

Loft

 


ஒரு அடுகும்மாடி குடியிருப்பில் ஒரு  நண்பர்கள் தங்கள் மனைவிக்கு தெரியாமல் தவறு செய்வதற்காக அவர்கள் அதை பயன் படுத்துகிறார்கள் அந்த வீட்டுக்கு செல்ல அந்த நண்பர்கள்க்கு மட்டுமே சாவி இருக்கிறது.ஒரு நாள் காலை அந்த வீட்டுக்கு வரும் ஒரு நண்பன் அங்கே ஒரு பெண் கொலை செய்ய பட்டு இருப்பதை பார்க்கிறான். பின் அந்த நண்பர்களில் யார் கொலயை செய்தது யார் அவர்கள் என்ன ஆனார்கள் என்பதை படம் ஆரம்பித்த முதல் நிமிடத்தில் இருந்து கடைசி வரை படு த்ரில்லிங்கா கொட்டுத்திருகிறார் இப்படத்தின் இயக்குனர் எரிக் வான் லூய.

  "ALWAYS MAKE THE AUDIENCE SUFFER AS MUCH AS POSSIBLE"

                                                                                           -ALFRED HITCHCOCK

ஒரு த்ரில்லர் படம் எப்போ நமக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்துமனா அந்தப்  படத்துல வர கதாபாத்திரங்கள் நம்மளோட ஒருத்தர் மாறி நாம உணரனும். அப்படி இந்த படத்துல வர 5 நண்பர்கள்(1.Cheat,2.one who wants love,3.pervert,4.angry man,5.funny guy) நம்ம ஒவ்வொருவரோட மனசுல இருக்கிற  உணர்வுகள உணர்த்துற மாறியான கதாபாத்திர அமைப்புத்  தான் இந்தப்  படத்தோட மிக பெரிய வெற்றி.

நாம எதிர்பார்க்க முடியாத திருப்பங்களும், படத்தோட முடிவும் மட்டும் இந்த படம் நல்ல இருக்கறதுக்கு காரணம் கிடையாது, ஒவ்வொரு நண்பர்கள் கதையில வர டிராமா, அத படத்தோட சுவாரஸ்யத்த குறைக்காம கொண்டு சென்ற திரைக்கதை , இசை,நடிப்பு எல்லாமும் தான்.

வேற என்ன ஒரு நல்ல மர்டர் மிஸ்ட்ரி  பார்த்து ரொம்ப நாள் ஆச்சுனு வருத்த படுறீங்களா  உடனே இந்த படாத வாங்கி பாருங்க.

பின் குறிப்பு :
இந்த படத்த இப்போ ஹாலிவுட்ல ரீமேக் செய்றாங்க.

படத்தோட trailer :