டிசியின் அனிமேஷன் படங்களுக்கு மிகப் பெரிய ரசிகப் பட்டாளம் உலகம் முழுவதும் உண்டு, மார்வெல்லின் ஆதிக்கம் ஹாலிவுட்டை மட்டும் அல்லாமல் உலகம் முழுவதும் வசூல் வேட்டையை தொடர்ந்து வந்தாலும் டிசி காமிக்ஸ் கதாநாயகர்களுக்கு இந்தியா போன்ற நாடுகளில் இருக்கும் ரசிகர்களுக்கு காரணம் டிசியின் தரமான அனிமேஷன் தயாரிப்புகள். 90களில் வெளிவந்த Batman:The original Animated Series,Justice League,Justice League : Unlimited,Batman Superman:Public enemies போண்ற படங்கள் இன்றும் பலரால் டவுண்லோடிப் பார்க்கப்பட்டுவருகிறது.
டிசி காமிக்ஸ் தன்னுடைய லைவ் ஆக்சன் டிவி சீரிஸ்களை 1950களிலேயே ஆரம்பித்துவிட்டது, ஆடம் வெஸ்டின் Batman சீரிஸ் இன்றும் அமெரிக்காவில் பிரபலாமானது. பிறகு 70களின் பிற்பகுதியில் கிரிஸ்டோவர் ரீவ்ஸின் நடிப்பில் வெளிவந்த அட்டகாசமான் “Superman" திரைப்படம். பல அட்டகாசமான் ஷாட்டுகள் நிறைந்தது அந்தப் படம். இன்றும் சூப்பர்மேன் என்றால் நமக்கு ஞாபகம வரும் அந்த சுழற் கதவில் கோட் சூட்டுடன் நுழைந்து பின் சூப்பர் மேனாக வெளிவரும் காட்சி அந்தப் படத்தில் தான் இருக்கும்.
பின் 80களின் முடிவில் டிம் பர்டனின் இயக்கத்தில் மைக்கேல் கேடன் பேட்மேனாக நடித்தப் படம் வெளிவந்த மீண்டும் காமிக்ஸ் கதாபாத்திரங்களை நிலைப் பெறச்செய்தது. பின் 90களில் பேட்மேன் படங்கள் தோல்வி அடைய மேலும் 90களில் தான் ஹாலிவுட்டில் இண்டிபெண்டன்ஸ் டே,மென் இன் ப்ளாக் போன்ற ஒரிஜினல் படங்களின் வெற்றியாலும் காமிக்ஸ் படங்கள் திரைக்கு வருவது குறைந்தது. இந்த சமயத்தில் தான் டிசி அனிமேஷன் சீரிஸிகளிலும்,படங்களிலும் தன் கவனத்தை திருப்பியது.
அனிமேஷன் சீரிஸ்கள் மூலம் டிசி தனது கதாபாத்திரங்களை அடுத்த தலைமுறைக்கு கொண்டுச்சேர்த்தது.Justice League:Unlimited மூலம் பல சிறு கதாபாத்திரங்களையும் மக்களின் பார்வைக்கு கொண்டு வந்தது. இப்படி டிசி போய்க் கொண்டிருக்கும் பொழுது அட்டகாசமான X-Men,ஸ்பைடர்மேன் படங்கள் மூலம் மார்வெல் தன் ஆதிக்கத்தை ஆரம்பித்து இன்று லைவ் ஆக்ஸ்ன் படங்களில் முழு ஆதிக்கத்தை செலுத்துகிறது. இருப்பினும் டிசியின் சிறந்த படைப்புகள் அனைத்தும் அனிமேஷன் படைப்புகளாக வந்துக் கொண்டேயிருக்கிறது. அதில் குறிப்பிடத்தக்க படங்கள் பல நேரடிபடங்களுக்கு சவால் விடக் கூடியவை குறிப்பாக, Flash point Paradox,Superman ,batman:Public enemies,Green Lantern:First flight,Batman:Man under the red hood போன்ற திரைப்படங்கள். மேலே கூறிய திரைப்படங்கள் அனைத்துக்கும் என்னால் முடிந்த சிறு குறிப்பை சீக்கிரமாகவே எழுதுவேன்.
அந்த வகையில் இப்பொழுது வந்திருக்கும் படம் தான் Justice League: Gods and Monsters. டிசி காமிக்ஸின் மைய்ப்புள்ளியாக இருப்பது The Multiverse theorey.அதாவது நாம் இருக்கும் உலகத்தைப் போலவே பல உலகங்கள் இருப்பது, அந்த உலகத்துக்கும் நமது உலகத்துக்கும் சிறு வேறுபாடுகள் இருக்கும். அதாவது நாம் சூப்பர்மேன்,பேட்மேன்,ஃப்ளாஷ் போன்ற கதாபாத்திரங்கள் இருப்பது பிரைம் எர்த், அதே போன்று பல நகல் உலகங்கள் இருக்கும் சிறு அல்லது பெரிய வேறுபாடுகளோடு. அதே போன்று இந்த gods and monsters படம் நடக்கும் இடம் ஒரு தனிப்பட்ட உலகத்தில் இந்த படத்துக்கும் மற்ற டிசி அனிமேஷன் படத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை.
படத்தின் ஆரம்பதில் சூப்பர்மேனின் தந்தையான Jor-EL, மனைவி சாராவின் ட் dna குறிப்புகளோடு தன் குறிப்பை சேர்க்க நினைக்கும் தருவாயின் ஜெனரல் சாட் (இவர் சூப்பர்மேனின் முக்கியமான வில்லன்களில் ஒருவர், இவர் இல்லாமல் சூப்பர்மேனின் கதையை சொல்ல முடியாது) ஜொர் எல் லை தடுத்து தன்னுடைய குறிப்புகளை வைத்து ஒரு விமானத்தை உலக்கிற்க்கு அனுப்புகிறார். ஜெனரல் சாடின் மகனான சூப்பர்மேன் அமெரிக்காவின் எல்லையில் விழ அவனை ஒரு மெயிக்கோ அகதிகள் தூக்கிச் சென்று வளர்க்கின்றனர். பின் நிகழ் காலத்துக்கு வரும் நாம் Justice leagueஇன் தலைமை இடத்துக்கு வருகிறோம். அங்கே வாம்பயராக இருக்கும் பேட்மேனையும்,bekka என்னும் வொண்டர்வுமனையும் பார்க்கிறோம்.
பின் அந்த உலகத்தில் Justice League இன் மேல் சந்தேகம் வர வைப்பதைப் போல் மூன்று விஞ்ஞானிகளின் கொலைகள் நடக்கிறது. இதனால் ஜஸ்டிஸ் லீக்கின் மீது பலத்த எதிர்ப்பு வலுக்கிறது. ஜஸ்டிஸ் லீகை சட்டத்துக்கு கீழ் கொண்டு வர வேண்டும் என்ற நிபந்தனைகள் வைக்கப்படுகிறது. இந்தக் கொலைகளை செய்தது யார்.என்ன காரணம் என்பதை உலகின் சிறந்த டிடக்டிவ்வான பேட்மேன் கண்டிப்பிடப்பது தான் கதை. சூப்பர்மேனின் முன்கதையை போல் பேட்மேன்,வொண்டர் வுமனுக்கும் முன்கதைகள் இருக்கின்றன ஆனால் அவை கதையின் டிவிஸ்டுகளுக்கு மிகவும் முக்கியம் என்பதால் படத்தை பார்த்து தெரிந்துக் கொள்ளவும்.
டிசி காமிக்ஸ் இன்னும் மார்வெல்லைப்போல் நிலையான சினிமா யுனிவர்ஸை நிலைத்துக்கொள்ளவில்லையென்றாலும் ஒருவேளை அடுத்த வருடம் வரும் Batman v Superman:Dawn of Justice,Suicide Squad போன்றப் படங்கள் வெற்றியடைந்தால் இந்த மாதிரி அட்டகாசமான படங்கள் வெளிவரும் என்பதில் எந்த ஐயமும்மில்லை.
டிஸ்கி :டெக்ஸ்டர் ரசிகப் பெருமக்களே டெக்ஸ்டர் நாயகன் மைக்கேல் சி ஹால் தான் பேட்மேனுக்கு வாய்ஸ் ஆக்ட் செய்திருக்கிறார்.

No comments:
Post a Comment