10/10/2013

12 ANGRY MEN

 நான் சினிமாவை மிக சீரியசாக என்னோட சிறு வயதிலிருந்தே பார்த்துவருகிறேன் ஆனால் அதில் பெரும்பான்மையானது தமிழ் படங்கள் தான் அப்போ அப்போ தெலுகு,மலையாளம், ஹிந்தி படங்கள் குறுக்கே வரும்.ஆங்கிலப் படங்களை பொருத்தவரை எங்க ஊர்ல ரீலிஸ் ஆகுற படங்கள் மட்டும் தான் பார்த்துக்கிட்டிருந்தேன்  அதுக்குப்புறம் டிவிடிக்கள் வந்தது, அதுலையும் நான் ஆங்கிலப் படங்களை வாங்க ஆரம்பிச்சதுனா 2007ல தான்.இதுலையும் ஒரு பிரச்சனை இருந்துச்சு ரொம்ப ஆக்சன், கமெர்சியல் ஹிட் போன்றவை தான் கிடைக்கும்.

இது தான் என்னோட நிலைமை ஆனா இது மாற ஆரம்பிச்சது 2010ல.இதுக்கு முன்னாடி நான் கிட்டதட்ட  தமிழ் அல்லா பிற மொழிகள் பார்க்கிறதையே தவிர்த்திட்டேன்னு சொல்லலாம்( ஹாரி பாட்டரை தவிர).இப்படி இருந்தப்போ தான் ஒரு நாள் தியேட்டர்ல இன்செப்ஷன் பார்க்க நேர்ந்து.அந்த படம் ஏற்படுத்துன பாதிப்பு எதோ என்னை கட்டிபோட்டுட்டு இந்தப் படத்தை போட்டாக்கூட நான் எதை பத்தியும் கவலை படாம பார்ப்பேன் அப்படி ஒரு மாய வலையில சிக்கிக்கிட்டேன்.இதுக்கு பிறகு எனக்கு புரிந்த விடயம் என்னன்னா சினிமா என்பதுலயும் ஒரு தேடல் அவசியம்.நல்ல படங்கள் தவறவிடக் கூடாது என்பது தான் அது.

இந்த சமயத்தில தான் நான் ஒரு லேப்டாப்பும் வாங்க, என் ரூம்ல இருந்த ப்சங்களும், பக்கத்து ரூம்ல இருக்கிற பசங்க கிட்ட இருந்த ஹார்ட் டிஸ்கிலிருந்து பல பல்கான படங்களை நான் பார்க்க ஆரம்பிச்சேன், அதுக்கு பிறகு பதிவிறக்கம் முலம் சினிமாக்கள் பார்க்க ஆரம்பிச்சேன்.அப்படி என் நன்பன் எனக்கு கொடுத்த படம் ஒரு முறை பார்த்துவிட்ட வச்சிருந்தப் படத்தை நான இப்போ மீண்டும் ஒரு முறை திரும்ப பார்த்தேன்.ஒரு சிலப் படங்கள் என்ன தான் முதல் தடவை படு வேகமா,விறுவிறுப்பா இருந்தாலும் இரண்டாம் தடவை நம்மால் முழுதாலாம் பார்க்க முடியாது ஆனா இந்தப் படம் இரண்டாம் முறை பார்க்கும் போதும் விறுவிறுப்பும் குறையாம இருந்தது.அந்த படம் தான்,

12 ANGRY MEN


வழக்காடு மன்றத்தை பற்றி வரும் படங்கள் பெரும்பாலும் சில வகைகளுக்குள் பிரிக்க இயலும்.அதுல அடிக்கடி நாம பார்க்கும் வகைகள் 2. தீர்க்க முடியாத வழக்கை கதா நாயகர் தீர்த்து வைப்பதாகவும் இல்லை தோத்துக்கொண்டிருக்கும் ஒரு வழக்கில் கடைசி நொடியில் கதா நாயகர் ஜெய்பதாகவும் வரும். இதிலும் பல மாதிரியான வழக்கமான (!!) காட்சிகள் வேறு இருக்கும். எதிர் தரப்பு வக்கீல் தன் பிரம்மாஸ்திரமான ஒரு சாட்சியை வைப்பார் குழம்பி போயிருக்கும் நம்மாள் அவர் ஆழ்மனதில் சருட்டென்று ஒரு பொறி தட்டும் அதை வைத்து அந்த பிரம்மாஸ்திரத்தையே பொடியாக்கிவிடுவார். இது போன்று பல காட்சிகள் இருந்தும் அவ்வகைப் படங்கள் கூட சுவாரஸ்யத்துக்கு குறைவில்லாமல் இருக்கும். ஆனால் இந்த மாதிரி எதுவும் இல்லாமலும் சுவாரஸயத்துக்கும் குறைவில்லாமல் வந்தப் படம் தான் 12 Angry men.

படத்தின் ஆரம்பமே வழக்காடி முடித்திவிட்டு நீதிபதி வழக்கின் தீர்ப்பை ஒருவருக்கு ஒருவர் அறிமுகம் இல்லாத 12 ஜூரர்கள் கையில் ஒப்படைப்பதாகத் தான் ஆரம்பமே. அதாவது இதற்கு முன் நாம் பார்த்த இனி பார்க்க போகும் வழக்காடு மன்ற திரைப்பட்ங்களிலிருந்து இது முற்றிலும் மாறுபட்டது என்பதற்கு இதைவிட வேற விடயம் தேவை இல்லை.

வழக்கு என்ன வெனில் நியுயார்கின் சேரி பகுதியில் கொலை நடக்கிறது, அதில் குற்றவாளியாக சொல்லப்படுவது கொலைய செய்யப்பட்டவரின் 18 வயது மகன். கிட்டதட்ட வழக்கு முடிவுடைகிறது. இனி வழக்கின் முடிவு இந்த 12 ஜுரிகளின் கையில் தான். இவர்கள் அந்தப் பையனை குற்றவாளி என்று ஒத்துக்கொண்டால் அந்த பையனுக்கு மரணதண்டனை உறுதி. இனி அவன் குற்றவாளியா இல்லையா என்று இவர்கள் தான் தீர்மாணிக்க வேண்டும்.

அந்த பையன் தான் குற்றவாளி என்பதற்கு சொல்லப்படும் ஆதாரங்கள் யாவெனின், 1. அந்த சிறுவன் கொலை செய்ததை பார்த்தாக சொல்லும் அவன் வீட்டிற்கு எதிர் வீட்டில் தங்கி இருக்கும் பெண்.

2. அந்த பையன் தங்கியிருக்கும் குடியிருப்பில் அவன் வீட்டிற்கு கீழே தங்கியிருக்கும் பெரியவர் , கொலை நடக்கும் பொழுது அச்சிறுவனின் சத்தத்தை கேட்டதாகவும் சில நொடிகளுக்கு பிறகு அவன் கீழே ஓடுவதை பார்த்ததாகவும் கூறுகிறார்.

3. கொலை செய்யப்பட உதவிய கத்தியை அச்சிறுவன் என்னிடம் தான் வாங்கியதாக ஒப்புக்கொள்ளும் கடைகாரர்.

இது தான் அந்த மூன்று முக்கிய ஆதாரங்கள். இதை அந்த 12 நபர்களும் ஒரு மனதாக ஏற்றுக்கொண்டனரா இல்லையா, அச்சிறுவனுக்கு தண்டனை கிடைத்ததா இல்லையா என்பதுதான் மிதீ கதை.

கதாபாத்திர வடிவங்கள் :

 நாம் வெறுமனே உக்கார்ந்து எப்படி ரஜினி,எம்.ஜி.ஆரால் தொடர்ந்து பல வெற்றிப் படங்களை கொடுக்க முடிந்தது என்று யோசித்தால்  நமக்கு தெரியும அதற்கு முக்கிய காரணம் அவர்களின் கதாபாத்திரம் தான். அவர்களுக்கு என்று ஒரு கதாபாத்திரம் எப்பொழுதோஅமைந்துவிட்டது அது அவர்களின் பெரும்பாலான படங்களில் ஒருமாதிரியாகவே வரும். ஒரு ரசிகனாக அவர் படத்தை பார்க்க ஆரம்பித்தால் கதாபாத்திர அமைப்புக்கென்று மிகச் சிரமம் பட வேண்டியிருக்க தேவையில்லை, நம் மனதில் ரஜினி,எம்.ஜி,ஆர்னா இப்படி தான் நமக்கு தெரியும் அதனால நமக்கு அந்த கதாபத்திரத்தின் செய்கையோ அல்லது முடிவுகளுக்கோ தனியாக பல காட்சிகள் அமைக்க வேண்டும் என்று அவசியம் இல்லை.ஆனால் இது மற்ற நடிகர்களுக்கு ஒத்துவராது. கதாபாத்திரம் எவ்வாறானது என்பது மிகச் சீக்கிரம் நமக்கு தெரிய வேண்டும், அப்படியானால் தான் நமக்கு கதாபாத்திரத்தின் நோக்கம் நமக்கு வெளிப்படும்.

கதாபாத்திரங்களின் நோக்கம் நமக்கு எவ்வுளவு சீக்கிரம் தெரியவருகிறதோ நம்மால் மிக வேகமாக கதையிலும்,கதாபாத்திரங்கள் கிட்டையும் ஒரு நெருக்கத்தை அடைய முடியும். அந்த நெருக்கம் தான் கதையை சுவாரஸ்யமாக இட்டுச் செல்லும், அப்படி நெருக்கமான கதாபாத்திரம் கொலை செய்தால் கூட நீங்கள் அவன் பக்க நியாயத்தை தான் உணர்வீர்கள்.அதாவது ஒரு bondஐ நீங்கள் அந்த கதாபாத்திரதும் ஏற்படுத்திக்கீட்டீங்க.

ஆக இந்த மாதிரி சுவாரஸ்யத்தை தீர்மாணிப்பது முக்கிய கதாபாத்திரங்களின் வடிவங்கள் தான்.இந்தப் படத்தை பொறுத்தவரை ஒரு முக்கிய கதாபாத்திரம் என்று யாரையும்சொல்ல முடியாது, இதில் வரும் 12 கதாபாத்திரங்களும் முக்கியகதாபாத்திரங்கள் தான். அனைத்து கதாபாத்திரங்களும் படம் முழுக்க வருகிறது.
ஆனாலும் இந்தக் கதாபாத்திரங்களின் இடையே ஒரு மாற்றத்தை விதைப்பது   ஹென்றி வோண்டாவின் கதாபாத்திரம். மத்த கதாபாத்திரங்களை காட்டிக்கொண்டே காமரா நகரும் பொழுது அது முதல் முறையாக வோண்டாவை காட்டும் போதே நமக்கு புலப்பட்டுவிடும் அவர் குழப்பத்தில் உள்ளார் என்பது. இவ்ளவவு தான் இந்த ஒரு ஷாட்டிலேயே நமக்கு அவர் கதாபாத்திரத்தின் நோக்கமும் புலப்பட்டுவிட்டது. அவருக்கு இந்த வழக்கு நடந்த விதத்திலும்,குற்றவாளி இவன் தானா என்ற சந்தேகம் இருக்கிறது அதை இவர் தான் மற்றவர்களிடம் இந்தக் கேள்வியை எடுக்கபோகிறார் என்பதும் நமக்கு முதல்லயே தெரிந்திருச்சு. ஏன்னா நாம மத்தக் கதாபாத்திரங்களை முதல் தடவை பார்க்கும் பொழுதே அவர்களுக்குள் இருக்கும் களைப்பும், இவன் தான் குற்றவாளி என்பதில் அவர்கள் தீர்கமாக இருப்பதாகவுமே நமக்கு தெரிந்துவிடுகிறது, எப்படியாவது இதை முடிச்சிட்டு போனா போதும் அளவில் தான் அவர்களின் செயல்பாடும் இருக்கிறது,

வோண்டாவின் கதாபாத்திரம் மத்த  11 கதாபாத்திரத்திலிருந்து மாறுபட்டிருந்தாலும் அந்த 11 கதாபாத்திரங்களும் சிறப்பானவையே.இந்த 12 நபர்களையும் நாம் தனியா சிந்திச்சி பார்த்தோம்னா அது எல்லாமே நாம தான் தெரியும்.  நாம பல்வேறு சூழ் நிலைகளில் எப்படி இருப்பமோ அப்படி தான் இந்த 12 பேர்களும் இருக்கிறார்கள்.

கல்லூரிக்கு பரீட்சை எழுத போயிருப்பீங்க ஆனாலும் உங்க மனசு மதியம் நடக்க போகும்  கிரிக்கட் மேட்ச் மேல தான் இருக்கும். எப்படியாவது தப்பிச்சி போயிடாலாம்னு நினைப்பீங்க, பரீட்சைய 1 மணி நேரத்தில் முடுச்சிட்டு கூட ஒடிருவீங்க.  இது எதுக்காக போறீங்க என்பதில் மாற்றம் வரலாம் ஆனாலும் எல்லாருக்கும் இந்த மாறி ஒரு அவசரம் கருதி நாம் செயல்படுவது வாழ்க்கையில் நடப்பதே. இந்த மாதிரி கதாபாத்திரமும் இப்படத்தில் இருக்கிறது. எப்படியாவது இந்த வழக்கை முடிச்சிட்டு இரவு நடக்கும் பேஸ் பால் மேட்ச் போகுறது தான் அவணோட குறிக்கோள். இதை அவன் மேல் தப்பும் நம்மால சொல்லமுடியாது ஏன்னா அது நாம தான்,ஒரு சில நேரங்களில்.

இது ஒரு கதாபாத்திரம் தான் மீதி இருக்கும் 11 கதாபாத்திரங்களும் இது போலவே நமக்குள் ஒரு தொடர்பை ஏற்படுத்திக்கொள்ளும். அது தான் இப்படத்தின் சிறப்பு.

இதில் இன்னொறு விசயம், இங்க  யாருக்கும் இங்கே மற்றவரின் பெயர் தெரியாது அதனால் அவர்களூக்கு வழங்கப்பட்ட ஜுரர் எண்கள் படியே அழைத்துக் கொள்கின்றனர்.

மேலும் இந்தக் கதாபாத்திரங்கள் தங்களுக்குள் பேசிக்கொள்ளும் சில வசனங்களும் செமையாக இருக்கும். அதில் நான் கவனித்த சில..

Juror #10: Bright? He's a common, ignorant slob. He don't even speak good English.
(அந்தச் சிறுவன் சேரியை சேர்ந்தவன் என்பதால அவன் ஒழுங்காக ஆங்கிலம் பேச மாட்டான் என்று ஒருவர் சொல்கிறார்)
Juror #11: [looking up] He *doesn't* even speak good English.

Juror #3: That business before when that tall guy, what's-his-name, was trying to bait me? That doesn't prove anything. I'm a pretty excitable person. I mean, where does he come off calling me a public avenger, sadist and everything? Anyone in his right mind would blow his stack. He was just trying to bait me.
Juror #4: He did an excellent job.

மற்ற விடயங்கள்


படத்தின் மிகப் பெரிய பலம் நடிகர்கள் வோண்டா, ஒரு அமைதியான பெரியவர், கோவப்படும் ஒருவர் என அனைவரும் அவர்களின் கதாபாத்திரத்தின் வடிவத்தை பூர்த்தி செய்யும் விதமாகவே நடித்துள்ளனர். 

இந்தப் படம் ஒரு மேடை நாடக் செட்டப் போலவே இருக்கும், ஒரு அறைக்குள் நடக்கும் கதை அது மேடை நாடகமா இருந்தா ஓகே ஆனா சினிமா ஒளிப்பதிவுனு வரும் பொழுது ரொம்ப கஸ்டம்.இந்தப்படத்தின் ஒளிப்பதிவு கண்டிப்பாகவே அந்த கால கட்டத்திலிருந்து முன்னோடியாக இருந்திருக்கும். டாப் ஆங்கிளில் முதல் சாட்டாக இருக்கட்டும், அதுக்கப்புறம் ரூம்ல நல்லா அகலமா எல்லா கதாபாத்திரங்கள் தெரிகிற மாறி இருக்கும் அது கொஞ்சம் கொஞ்சமா படம் உச்ச நிலைஅடைகிறப்போ எல்லா கிளோசப் காட்சிகளாக மாறியிருக்கும். படம் முழுக்க ஒரு சின்ன ரூமில் வேறு நடக்கிறது. அதுவே மிகவும் கஸ்டமான விசயம்.

இது என்னோட ALL TIME FAVORITEல கண்டிப்பா இந்தப் படம் இருக்கும். வித்யாசமான் முயற்சி மட்டும் இல்லாம இது நல்ல விறுவிறுப்பான வித்யாசமான படம். இந்தப் படமும் வெளிவந்த காலத்தில பெருசா விருதுகளைலாம் வாங்கலை ஆனால் இப்போ இது பல பத்திரிக்கைகளின் சிறந்த 100 படங்கள்ல இது ஒரு இடத்தில கண்டிப்பாக இருக்கு. அது தான் ஒரு சிலப் படங்கள் ஒரு காலக் கட்டத்துக்கானது ஆனா இது எல்லா காலக் கட்டதுக்கும் ஏத்த திரைப்படம்.


//*** இதை பல் பேர் பார்த்திருப்பீங்க பார்க்காதவங்க உடண்டியா பார்த்திருங்க...ஆங்...**//