7/30/2014

பிடித்த இயக்குனர்கள் – 1---கிரிஸ்டோபர் நோலண்


கிரிஸ்டோபர் நோலண்

நண்பர்களுக்கு வணக்கம்.ரொம்ப நாள் அப்புறம் திருப்பியும் எழுதலாம்னு இருக்கேன், பார்ப்போம் இந்தவாட்டியாவது கண்டுனியூவாவுதானு. இதை எழுதுறதுக்கு முன்னாடி சமூக வலைதளங்கள் மூலம் எனக்கு கிடைத்த நண்பர்களுக்கு ஒரு நன்றியை தெரிவிச்சிக்கிறேன், ஏன்னா நான் பெருசா சினிமா ஆர்வமோ,கலை ஆர்வமோ இல்ல வாழ்க்கை மீது கலைப் பார்வையோ இருக்கிற ஆள் கிடையாது, லட்சியமற்ற வாழ்க்கையை லட்சியமென் செய்துக் கொண்டிருந்தேன். கிட்டதட்ட காகித மலர்கள்ல வர செல்லப்பா மாதிரி.


தமிழ்,ஹிந்தி சினிமாக்களைத் தாண்டி எனக்கு பரிச்சியமில்லை பரிச்சியம் ஏற்படுத்திக் கொள்ளவும் முயற்சியும் செய்யவில்லை. 18,19 வயதுகளில் இருப்பது போலவே என்னைப் பற்றியும்,புற  உலகைப் பற்றியும் சினிமா பற்றியும் முன் முடிவுகளோடு இருந்துவந்தேன்.தமிழ், ஹிந்தியைத் தாண்டி அயல் மொழிகளில் நான் பார்த்த குறிப்பிடத்தக்க படங்களெல்லாம் அரைமணி நேரப் படங்கள் மட்டுமே. அதைத் தாண்டி நான் தேடவும் இல்லை.

இப்படி இருந்துட்டு இருக்கும் போது தான் ஒரு நாள் செம் பிராக்டிக்கல்ஸ்க்கு பயிற்சித் தேர்வு.பயிற்சித் தேர்வுனா தான் உங்களுக்கு தெரிஞ்சிருக்குமே ஒரு மணி நேரத்துலயே வகுப்புகள் முடிஞ்சிடும், ஒன்பது மணிக்கு உள்ள போய் 10 மணிக்கு வெளியா வந்தாச்சு நானும் என் நண்பர்கள் இருவரும். அப்ப சல்மானோட தபாங் ஓடிக்கிட்டு இருந்துச்சு. அந்த இரண்டு நண்பர்கள்ல ஒருத்தன் சல்மானோட தீவிர விசிறி இன்னொருத்தன் அந்த படம் பார்த்துட்டு சூப்பர் வேற சொல்லிக்கிட்டுருந்தான் உடனே முடிவு பன்னி ஆவடில இருந்து தேவி தியேட்டருக்கு வந்தோம் டிக்கட் இல்லைனு சொல்லிட்டான்.
அதோட நாங்க கட் பன்னிட்டு போயொருந்த நான் இப்ப இதை எழுதிக்கிட்டிருக்க மாட்டேன், கட் பண்ணாம் சத்யம் போனோம் தேவிலயே டிக்கட் இல்ல சத்யம்ல எப்படி இருக்கப்போகுதுனு நினைச்சுக்கிட்டே போனோம் தபாங் மதியம் மூனறைக்கு தான் காட்சி, என்ன தான் ரசிகர்களா இருந்தாலும் 3 மணி நேரம் காத்திருக்க முடியாது. அப்ப இரண்டு படம் 5 நிமிசத்துல ஆரம்பிக்கற மாதிரி இருந்துச்சு ஒன்னு விஸ்னு-ஸ்ரீகாந்த் நடிச்சப் படம் இன்னொன்னு INCEPTION.

இந்த INCEPTION படம் மீது எனக்கு ஏதோ ஒரு ஆர்வம், இதோட தமிழ் டப்பிங் தலைப்பு வேற “கனவு வேட்டை”னு வைச்சிருந்தாங்களா அதுவும் ஒரு காரணம். சரினு எடுத்தோம் அன்னைக்கு என்ன ஷ்பெசல்னு தெரியலை சப் டைட்டிலோட படங்கள் போட்டாங்க நல்லது தானே நாங்க மூனு பேரும் போய் உட்கார்ந்தோம்.

உண்மைய சொல்லனும்னா இது வரைக்கும் அவ்வுளவு வேகமான ஒரு திரைக்கதையை நான் அனுபவிச்சதில்லை அப்படி ஒரு வேகம், ஆரம்பிச்ச 10 நிமிசம் கழிச்சு வாயைத் திறந்தவன் தான் கடைசி வரைக்கும் மூடவே இல்லை, சும்மா கட்டிப் போட்டு வைச்சிடுச்சு. இதுக்கு முன்னாடி நான் அப்ப அப்ப ஆக்‌ஷ்ன ஆங்கிலப்படங்கள் பார்ப்பதுண்டு அதில் மொக்கயாக ஆங்கிலத்தில் ஒரு ஜோக் வரும் எனக்கு அந்த ஜோக் புரிந்துவிட்டது என்று காட்டுவதற்காகவே கைத்தட்டி ஒரு சிரிப்பை சிரித்து வைப்பேன் இதில் அதுக்கு கூட வாய்ப்பே வழங்காமல் கட்டி போட்டு வைத்திருந்தார் இயக்குனர்.

படம் முடிந்தது படத்தின் பெயர் போட்டவுடம் DIRECTED BY CHRISTOPHER NOLAN என்று தலைப்பு வந்தது, இதற்கு முன் அந்தப் பெயரை கேட்டிருக்கேன் என்றாலும்,அதை மனதில் நினைத்து கொள்ளும் அளவுக்கு பெரிய பெயரோ இல்லை இவரை வைத்து தான் பின் சமூக தளங்களில் எனக்கு நண்பர்கள் கிடைப்பார்கள் என்று எனக்கு அப்ப தெரியாது.

அந்த நாள் பிறகு நான் முடிவு எடுத்த ஒன்று ஒரு லேப்டாப் வாங்குவது என்று, எப்படியோ பிராஜக்ட் அது இது என்று சொல்லி வாங்கியாச்சு. நண்பர்கள்க் கிட்ட கொஞ்சம்,பின் நான் பதிவிறக்கம் செய்த்து கொஞ்சம்னு செஞ்சு ஒரு மினி கலக்‌ஷ்னை ரெடி பன்னிக்கிட்டேன் அதுல முதல பார்க்க ஆரம்பிச்சது க்ரிஸ் நோலன் படங்களைத் தான்.
“ப்ரெஸ்டிஜ்”, “டார்க் நெளைட் வரிசை”,”மெமண்டோ” என அவரின் படங்களை பார்த்து முடித்தேன். ஒவ்வொன்றும் ஒவ்வொறு விதத்தில் தனித்துவமான, வேகமான,விவேகமானப் படங்கள். அவரது படங்களில் நான் முதலாக அவதானித்தது கூர்மையான வசனங்கள். வசனங்கள் எப்படி ஹீரோயிசத்துக்கு முக்கியமென்பதை நன்கு அறிந்து வைத்திருந்தவர் க்ரிஸ் நோலன். நண்பர் சிவராஜ் அவர்களின் பிளாக்கில் அதைப் பற்றி குறிப்பிட்டிருப்பார் பேட்மேன் பிகின்ஸில் நாயகி ப்ருஸைப் பார்த்து  நக்கலாக அவனது நடவடிக்கைகளை கண்டணம் செய்துவிட்டு போவாள் அப்பொழுது அவள் பேசிய அதே வார்த்தைகளை இறுதி காட்சியில் ப்ருஸ் பயன்படுத்திக்கொள்வான்.

இது போன்ற உதாரணங்கள் எல்லாப் படங்களிலும் வரும் டார்க் நெளைட்டில் “Very poor choice of words”, பிரெஸ்டிஜில் அந்த மேஜிக்கின் மூன்று நிலைகளை படத்தின் ஆரம்பத்திலும் முடிவிலும் பயன்படுத்தியிருப்ப்பது போன்ற விசயங்கள்.

மேலும் அவர் படங்களில் எனக்கு பிடித்த இன்னொரு விசயம் கதையை எவ்வுளவு சீக்கிரம் ஆரம்பிக்க முடியுமோ அவ்வுளவு சீக்கிரம் ஆரம்பிப்பார். இந்த விசயத்தில தான் எனக்கு தமிழ் சினிமாவின் மீது எனக்கு மிகவும் கோவம் தருகிறது கதையை இடைவேளைக்கு பிறகு ஆரம்பிப்பதி இப்பொழுது ஒரு டிரெண்டாக உள்ளது (சமீபத்தில் வந்த் வேலையில்லா பட்டதாரி ஒரு எ.கா.,).

விறுவிறுப்பான திரைக்கதைக்கு அவருக்கு உறுதுனையாக இருப்பவர் அவர் தம்பி ஜொனத்தன் நோலன், இருவரும் சேர்ந்து படு வேகமான நல்ல சினிமாக்களை எடுத்து வருகிறார்கள். என்னை சினிமாவின் மீது ஆர்வத்தை ஏற்படுத்தியது போல் பலர் மீது தங்களுது பாதிப்பகளை விட்டு சென்றுக்கொண்டிருக்கிறார்கள். அவர்களின் பனி தொடரட்டும்.



MORAL: மூனு பேர் சேர்ந்து போன காரியம் உருப்படாதுனு சொல்றது ஒரு      பொய் நாங்க மூனு பேர் போய் பார்த்தப் படம் தான் என் ரசனையை மாத்திடுச்சு.