3/12/2013

பியட்டா -- சமுகத்தின் சாட்டை


ஒரு சில படங்களை விமர்சனமோ,நியாய தராசிலோ வைக்க முடியாது அதை விவாதத்துக்கு மட்டுமே வைக்க வேண்டும் ஏனென்றால் அந்த படத்தை விமர்சிபதை விட அதை விவாதிப்பதில் நெறைய விடயங்கள் நமக்கு கிடைக்கலாம் . அப்படி பட்ட ஓர் படம் தான் பியட்டா . கிம் கி டுக் இயக்ககத்தில் 2012 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம்.இந்த படம் எனக்குள் பல கேள்விகளையும் , சமுகத்தை பற்றிய பார்வையையும் எழுப்பியருக்கிறது . நான் புரிந்து கொண்ட விஷயங்கள் குறைவாக இருக்கலாம் ஆகாயல்தான் இதை விவாதக்கு வைக்கிறேன். முதலில் கதைக்குள் போவோம்.

காங் டூ என்பவன் கொரியா நாட்டில் கந்து வட்டி போன்ற குரூப்பில்  வசூல் ராஜா வாக வேலை செய்கிறான். அந்த கடன் கொடுக்கும் அமைப்பு கடனுக்கு பத்து சதவீதம் வட்டி  போட்டு அப்படி கொடுக்க முடியாத பட்சதில் அவர்களிடம் insurance  பாலிசி ஒன்று போட்டுகொள்கிறது  அதன்படி கடனை கொடுக்க முடியாதவர்கள்  தங்களை கை கால்களை உடைத்து விட்டு அந்த இன்சூரன்ஸ் பணத்தை இவர்கள்  எடுத்துகொள்வார்கள். கங் டூ அப்படி கொடுக்க முடியாதவர்களின் பலரை ஊனமாக்கி அந்த பணத்தை எடுத்து கொள்கிறான்.இப்படி  சென்று கொண்டுஇருக்கும் காங் டூவின் வாழ்க்கையில் மி சூன் என்ற மத்தியஸ்தர வயதில் இருக்கும் ஒரு பெண் தன்னை அவனுடைய தாய்  என்றும் தான் தான் உன்னை சிறு வயதில் விட்டு சென்று விட்டேன்  என்று கூறுகிறாள் . இதன் பின் காங் டூவின் வாழ்க்கையில் என்ன நடந்தது  அதை நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள் .

இந்த படம் முழுவதும் தென் கொரியாவின் சீரற்ற பொருளாதார வளர்ச்சியை நமக்கு  கிம் கி டுக் கால் காட்ட படுகிறது.எனக்கு தென் கொரியா மீது ஒரு நல்ல  அபிப்ராயம் உண்டு, அவர்கள் நாட்டின் வளர்ச்சியும் electronics இல் அவர்கிளின் முன்னேற்றமும் என்னை எப்பொழுதும் வியப்பில் வைக்கும், ஆனால்  கிம் கி டுகின் பார்வையில் ஒரு சாரரின் வளர்ச்சி நம்மை அறியாமல் எப்படி மற்றவர்களை பாதிக்கிறது . இந்த படம் முழுவதும் கடன் வாங்குவோர் அனைவரும் hardwares வேலை செய்பவர்கள், எப்படி இந்த சமூகம் ஒரு சாரரை மிக எளிதாக ஒதுக்கி கொள்கிறது என்பதை மிக நன்றாக கிம் கி டுக் காட்டி இருக்கிறார்.இதை மிக எளிதாக நம் ஊர்களிலேயே பார்க்க்கலாம் ஒரு பத்து  பதினைந்து  வருடங்களுக்கு முன்பு கட்டிடம் வேலை செய்பவரோ, பிற ஹர்ட்வறேஸ்  வேலை செய்பவர்களோ சென்னையின் உள்  புறத்தில் இருந்து இருப்பர்கள்  அனால் இன்று பூந்தமல்லி தாண்டி தான் இடம் கிடைக்கும், ஏன் அவர்களுக்கு வாழ்க்கையில் பெரிதாக பொருளாதார மாற்ற ம் வர வில்லை ஆனால் அவர்களை சுற்றி மாற்றங்கள் வந்து  விட்டன.இதை இந்த படத்தில் பல் வேறு காட்சிகளில் சொல்கிறார் .

கங் டூ ஒரு வயதானவரிடம் பணம் வசூல் செய்ய செல்கிறான் ( இப்பொழுது கங் டூ வாழ்க்கையில் அவன் அம்மா வந்ததால் அவன் செயலிலும் மென்மையகிவிடுவான்) அங்க அவனிடம் தன்  வாழ்க்கையை பற்றி சொல்லிவிட்டு நம்ம ஊரை வானத்தில் இருந்து பார்த்து இருக்கியா என்று கூறி ஒரு கட்டிடதின் மேல் இருந்து பார்க்கிறார்கள் அதில் அந்த நகரின் பெரிய கட்டிடங்களும் அதன் அருகேயே உள்ள சிறு சிறு தெருக்களையும் காட்டுகிறது . பின்பு அந்த பெரியவர் " நான் இந்த ஊர்ல 50 வருஷம் இருந்துதேன் ஆனா நான் இறந்த அப்றோம் என் பேருக்கு இங்க ஒன்னும்  இல்லை" என்று சொல்லிவிட்டு தற்கொலை செய்து கொள்கிறார் .கங் டூ மனம் உடைந்து        ஒரு படியில் அமரும் பொழுது அவன் அருகில் " HAPPY LOANS " என்று விளம்பர அட்டை ஒன்று கிடக்கிறது.

மேலும் இந்த சமூகமும் மனிதனும் எப்படி பின்னப்பட்டு இருக்கிறார்கள் என்பதை  கோழி,மீன்,முயல் என்ற மூன்று உயிரினங்கள் மூலம் கிம் கி டுக் நமக்கு காட்டுகிறார். காங் டூ கோழி வாங்கி வரும் பொழுது அவன் கிரீசால் வழுக்கி விழுக அந்த கோழி அவனிடம் இருந்து  தப்பி பின் அது மி சூனால் பிடிக்கப்பட்டு கங்  டூ விடம் கொடுக்க அவன் அதை சமைத்து உண்கிறான்,மி சூன் தன மகனான கங் டு வை பார்க்க வரும்பொழுது ஒரு மீனை கொடுக்கிறாள், அந்த மீனை கங் டூ ஒரு தொட்டியில் போட்டு பாதுகாக்கிறான் , பின் மி சூன் அவன் வீட்டுக்குள் வந்தபின்  அதை சமைத்து கொடுக்கிறாள் ,  ஒரு முறை பணம் வசூலிக்க செல்லும் கங் டூ அங்க பணம் கொடுக்க வேண்டியவன்  தற்கொலை செய்ததை பார்த்து அவன் வீட்டுக்கு போய் ஏதாவது இருக்கா என்று பார்த்து அவன் வீட்டில் உள்ள முயலை தூக்கி வந்து வீட்டில் வைக்கிறான் பின் ஒரு இரவில் அந்த முயலை மி சூன் வீடு வெளிய விட அது ஒரு காரில் அடிபட்டு சாகிறது.இந்த மூன்று காட்சிகளும் படத்தில் வெவேறு இடங்களில் வந்தாலும் அது   உணர்த்துவது இந்த சமூகத்திலிருந்து நாம் தப்பிக்க (கோழி), பாதுகாக்க (மீன்), சுதந்திரம் (முயல்) அடைய முடியாது என்பதை உணர்த்துகிறது. இதை விட கேபிடலிசம் பற்றி ஒரு சாட்டை அடிக்க முடியுமா என்று தெரியவில்லை.

இந்த படத்தின் கதையில் இது ஒரு 45 சதவீதம் தான்,மீதி 55 சதவீதம் கதை வேறு தளத்தில் பயணிக்கும் அந்த கதையை சொல்ல கூடாது அதை படத்தில் பார்க்கவும் . இந்த படத்திலும் கிம் கி டுக்கின் signature காட்சிகள் இருக்கு, வன்முறை,நல்ல இசை என எல்லாம் இருக்கிறது.

படத்தில் மிக முக்கியம்மான இரண்டு கேரக்டரஇல் நடித்த இருவரின் நடிப்பும் சூப்பர்.அதிலும் காங் டூவாக நடித்த லீ ஜுங்கின்  நடிப்பு , படம் முழக்க ஒரு கோவத்தையும், தவிப்பையும் காட்டும்  அவர் நடிப்பில் அந்த கேரக்டர் முழுமை அடைய வைத்து இருக்கிறார்.

பியட்டா -- பார்க்க வேண்டிய படம் மட்டும் அல்ல படிக்க வேண்டிய படம்.

No comments:

Post a Comment