நாம நம்ம வாழ்க்கையில தினமும் பல அபத்தமான அவமானங்களை சந்திச்சிக்கிட்டே தான் வாழ்க்கையை நடத்துறோம் உதாரணத்துக்கு நமக்கு பின்னாடி இருக்குற பையனுக்கு ஒரு பொன்னு சிக்னல் கொடுக்கும் போது அது நமக்கு வர சிக்னல்னு நினைச்சு ஹாய்னு பல்லை இளிக்கும் போது பின்னாடி இருந்து ஒரு கை வந்து “என்ன பாஸ்” அப்படினு கேக்கும், இல்ல ஜிம்ல புதுசா சேர்ந்திருக்கேன் அதான் கையை ரிலாக்ஸ் பன்னுனேன் சொல்லிட்டு எஸ்கேப் ஆயிருப்போம், இது போல நம்ம வாழ்க்கையில பல அபத்த நகைச்சுவைகள் நிரம்பியிருக்கும். இதோட ஸ்பெஷலே அது கடைசி வரைக்கும் ஒரு ஆர்வத்தை கொடுத்து இறுதில தான் நம்மளை மொக்கை செய்யும். ஜிகர்தண்டா ஒரு அபத்த நகைச்சுவைப் படம்.
நாளைய இயக்குனர் நிகழ்ச்சி அரை இறுதிச் சுற்று வரைக்கும் வந்த கார்த்திக் (சித்தார்த்) படத்தை பார்த்த நடுவரான முன்னனி இயக்குனர் ( நாசர்) அவரது குறும்படத்தை குப்பை என திட்ட, அதை கேட்ட இன்னொரு நடுவரான முன்னனி தயாரிப்பாளர் கார்த்திக்கை பாராட்ட,கடைசியில் இயக்குனர் கார்த்திக்கை போட்டியில் இருந்து தூக்குகிறார், தயாரிப்பாளர் அவரை வைத்து படம் பன்ன ஒத்துக்கொள்கிறார்.
அடுத்த நாள் கார்த்திக் தயாரிப்பாளரிடம் கதை சொல்லி முடித்தவுடன் அந்தக் கதைப் பிடிக்காமல் ஒரு கேங்க்ஸ்டர் படம் தான் வேனும் என சொல்லி அனுப்புகிறார். உயிரோடு இப்பொழுது உச்சத்தில் இருக்கும் ஒரு ரவுடியின் கதையை எடுக்க வேண்டும் என முடிவு செய்து மதுரையில் இருக்கும் சேதுவை(சிம்ஹா) பற்றி படம் எடுக்கலாம் என முடிவி செய்து மதுரை வருகிறான் கார்த்திக்.பின் சேதுவின் கதை தெரிந்து கொள்ள குரங்கு பல்சி அடித்து கடைசியில் சேதுவே தன் கதையைச் சொல்லி எல்லாம் சுமூகமாக போகும் போது சேது தானே அந்தப் படத்தில் நடிப்பதாக ஷாக் கொடுக்க கார்த்திக் என்ன பன்னுகிறான்.இது தான் கதை.
கதை என்னமோ ஒரே இரவுல எழுதுனக் கதை மாதிரி இருந்தாலும், படத்தின் பலமே அதன் திரைக்கதை தான். சேதுவை கொலை செய்வதற்காக ஒருவன் தியேட்டரில் இருக்கும் கழிவறையில் பதுங்கியிருக்கிறான் சேது கழிவறையை நோக்கிச் செல்லும் போது கழிவறையை சுத்தம் செய்யும் தொழிலாளி அவனை முதல் கழிவறைக்கு போ நல்லா சுத்தமா இருக்குனு சொல்லி அனுப்ப இடையில் இன்னொருத்தன் சேதுக்கு முன்னாடி சென்று அதுக்குள் நுழைந்து சாகும் பொழுது பின்னாடி இருந்து சிம்ஹா பார்க்கும் சீன் சூப்பர்.அதே மாதிரி சேதுவை ஒரு 5 பேர் சுத்திக் கொலை செய்ய வரும் போது காரில் ஒரு பக்கம் நுழைந்து 5 பேரையும் சுட்டு விட்டு மறுபக்கம் வெளிவரும் போதும் விசில் தான்.
முதல் பாதியில் ஒவ்வொரும் இடமும்,காட்சியும் ரொம்ப ஸ்டைலாவும் அதே சமயத்துல யதார்த்தமாவும் இருந்துச்சு. இசை அது தான் படத்தோட முக்கியமான அம்சமே, சினிமா தெரிந்த இசையமைபாளரா சந்தோஷ் நாராயணன் இருப்பது ரொம்ப சந்தோசமாவும் நிம்மதியாவும் இருக்கு.
இரண்டாவது பாதியைப் பத்தி தான் எல்லாரும் நெகடிவ் கருத்து சொல்லியிருப்பதாக கேள்விப்பட்டேன், அதனால கொஞ்சம் தயார் நிலையோட தான் போய் உட்கார்ந்தேன். ஒரு விசயம் சொல்லனும், நான் படம் பார்த்துக்கிட்டிருந்தது ஒரு சின்ன டவுன்ல தான், உண்மையச் சொல்றேன் முதல் பாதியை விட இங்க இரண்டாவது பாதியில தான் தியேட்டரில நல்ல ரெஸ்பான்சும்னு தோனுச்சு. மொத்ததில திருப்தினாலும் முதல் பாதில நமக்கு கொடுத்த நம்பிக்கைக்கு சுத்தமான வித்யாசமான படம் இரண்டாவது பாதி இருந்துச்சு, இது எல்லாருக்கும் பிடிச்சிருக்குமானு சந்தேகம் தான்.
இடைவேளை வரை கதையே சொல்லாமல் , இடைவேளைக்கு பின்னால் கதை சொன்னால் போதும் என்ற ஃபார்முலாவில் பார்த்துக்கொண்டிருந்ததற்கு இது ஒரு நல்ல மாற்றம்.
படத்தோட உண்மையான ஹீரோ சிம்ஹா தான் அவரு இருக்குற சீன்ல அவரு தான் முக்கியமா தெரியுறாரு,பிட்சாவிலே யே டெக்கின்லான விசயத்தில ஸ்கோர் செஞ்சிருப்பாரு கார்த்திக் சுப்புராஜ், இதுலயும் அந்த இடம்லாம் எல்லாம் சரியா செஞ்சிருக்காரு, அதுவும் சிம்ஹாவோட ஸ்கீரின் பிரஸ்னஸ்க்கு ரொம்பவே மெருகு ஏத்திருக்கு. ஆனா சித்தார்தோட நடிப்புல ஒரு சில இடங்கள்ல இன்னும் நல்லா பன்னிருக்கலாம்னுதான் தோனுச்சு.
படத்தோட கடைசி அரைமணி நேரம் மிகபெரிய கோன ஊசி வளைவை எடுத்துச் செல்கிறது இது நான் படத்தின் பலமும் ,பலவீனமும்.படம் எனக்கு பிடித்திருந்தது.
பி.கு: கட்டுரையின் ஆரம்பத்தில் அபத்த நகைச்சுவை என்று நான் போட்டிருப்பதால் யாரும் வந்து உனக்கு சார்ல் சாப்ளின் தெரியுமா, டொரண்டினோவோட சித்தப்பாவைத் தெரியுமானு கேள்வி கேட்க வேண்டாம். சின்ன ரிவ்யுவை படிச்சதற்கு நன்றி..




.jpg)
