2/01/2013

விஷயத்துடன் பேசு விஷமாக பேசாதே ...!!!!

விஷயத்துடன் பேசு விஷமாக பேசாதே ...!!!!

இது விஸ்வரூபம்  பிரச்சனையய்  பற்றிய கட்டுரை தான் ..!! ஏற்கனவே இதை பற்றி பல முறை படித்தவர்களும்  இதை தொடர்ந்து படிக்க..

விஸ்வரூபதுக்கு தடை , இஸ்லாமிய அமைப்புகள் போராட்டம் என்ற செய்தி வந்த உண்டனேயே இங்க பல ப்லோக்களிலும் , facebook லிலும் பல status  மற்றும் பல விவாதங்கள் நடை பெற்றன. அனால் இந்த விவகாரம் மக்கள்ளிடையே ஒரு விஷத்தை பரப்பியது போல அந்த status களும் , விவாதங்களும் இருந்தன .

மக்களிடயே இருக்கவேண்டிய ஒரு சகிப்பு தன்மை social  media வில் இல்லை என்பது இந்த விவகாரத்தில் தெளிவாக வெளிய வந்தது.அனைவரும் யார் நம்மளை பார்க்க போகிறார்கள் என்ற  நோக்கில் கெட்ட வார்த்தைகளும், மிரட்டல் தொனி விவாதங்களும் இரு தரப்பினர் இடத்தில இருந்தும் இடம் பெற்றன.இவர்கள் பேசுவதில் ஒன்று புலப்பட்டது என்னவென்றால் நாம் செய்வது சரி ,நீ என்ன சொன்னாலும் அதை நான் ஏற்க மாட்டேன் , கேட்க மாட்டேன் என்கிற ரீதியில் தான் இந்த விவாதங்கள் இடம் பெற்றன.விவதங்கள் இரு தரப்பில் இருக்கும் நியாய அநியாயகளை  சரியாக கணித்து தன்  கருத்து  தவறு என்றால் அதை ஒப்புகொள்ள தயார் என்கிறவன் மட்டுமே கருத்து விவாதங்களில் பங்கு கொள்ள வேண்டும் , நல்லது மட்டுமே நாங்கள் சொல்வோம் எங்களை மீறி எவனும் ஒன்னும் சொல்வதற்கில்லை என்ற மணநிலை மிகவும் பின்தங்கிய நிலைமையை நம் சமூகத்தில் உண்டாக்கும் .

கருத்துவேறுபாடு என்பதின் முக்கியத்துவம் பற்றி நான் இதற்கு முன் கட்டுரையில் பார்த்து உள்ளோம் .கருத்து வேறுபாடு இருப்பதில் தவறு இல்லை அனால் உன் கருத்து  எப்பொழுதும் சரியாகவே இருக்கும் என்றும் எண்ணம் வைக்க கூடாது பிற நல்ல ஏற்றுகொள்ள கூடிய கருத்துக்கள்  வரும்பொழுது அதையும் யோசித்து உன்  நிலைப்பாட்டை மாற்றலாமா வேண்டாமா என்று முடிவெடுக்க வேண்டும்.
உங்கள்  கருத்தை சொல்வதில் எந்த தவறும் இல்லை அனால் மற்றவர் மரியாதையை கெடுக்கும்  விதத்தில் உன் கருத்தை வைக்காதே.

நன்றி ...