8/02/2015

சோக நாயகர்கள்

  இவ்வுலகில் படைக்கப்பட்ட பாதிக்கு மேற்பட்ட ஃபாண்டஸி கதை காவியங்களில் இன்றி அமையாமல் இருக்கும் ஒரு அமைப்பு சோக நாயகர்களின் வடிவமைப்பு. அந்த டிராஜிக் ஹீரோக்களே கதையை முழுமைப் படுத்துகிறார்கள். கடைசி வரை வெறுக்கப்பட்டும் முடிவில் ரசிகர்களால் கொண்டாடப்படும் கதாபாத்திரங்களாக உருப்பெற்று நம் மனதில் தங்கி விடுகிறார்கள்.
 அப்படி என் மனதில் இருக்கும் சில காவிய சோக நாயகர்களை பற்றிய ஒரு சின்ன பதிவு.

1. கர்ணன்:

                                     மகாபாரதம் என்னும் மிகப்பெரிய நெடுங்காவியம் பல நாயகர்களைக் கொண்டதாக வடிவமைக்கப்பட்டது. கிருஷ்னன்,அர்சுனன், த்ரெளபதி, தர்மன் என கதை நெடுக பல காவிய நாயகர்களால் மூழ்கிக் கிடந்தாலும் ஒரு கதாபாத்திரம் நம் மனதில் ஆழமாக இடம் பிடித்தது என்றால் அது கர்ணன் தான்.

                                  பாண்டவர்களால் முதலில் அவமானங்களை சந்தித்து அவர்கள் மீது வெறுப்போடு வளர்ந்து, பின் அவர்கள் தன் தம்பிகள் என தெரிந்தும் அவர்களுக்கு எதிராக போர்க்களம் புகுந்து அவர்கள் கைகளாலேயே இறக்கிறான் கர்ணன்.
           
                                  
2. கோலும் :

                                     லார்ட் அஃப் தி ரிங்கிஸ் மற்றும் ஹாபிட் நாவல்களிலும், சினிமாக்களிலும் வரும் கதாபாத்திரம். சக்தி வாய்ந்த ஒற்றை மோதிரத்தால் மனம் பிறழப்பட்டு அதற்கு அடிமையாகப் போய்விடும் கோலும் கதாபாத்திரம் முதலாக ஹாபிட் நாவலில் வருகிறது.
           
                                   ஹாபிட் நாவலில் பில்போவிடம் அந்த மோதிரத்தை கோலும்  இழப்பதாக மட்டுமே வருகிறது, மோதிரத்தை பற்றியோ கோலுமை பற்றியோ ஹாபிட் நாவலில் மேற்க்கொண்டு எதுவும் சொல்லப்படவில்லை. லார்ட் ஆஃப் தி ரிங்கிஸின் முதல் நாவலான “The Fellowship of the Ring" இல் மோதிரத்தின் கதையும் கோலுமின் முன் கதையும் விளக்கப்படுகிறது.

                                 கோலும் மோதிரத்தை திருப்பி பெறுவதற்காகவே ஃப்ரோடோவை பின் தொடர்ந்தது என்றாலும்,ஃப்ரோடோவிடம் இடையில் ஏற்படும் நட்புணர்வு, பின் ஃப்ரோடா ஏமாற்றப்பட்டதாக கருதி அவனை பழிவாங்க வேண்டும் என்றே அவனுக்கு பின்னால் வந்து கதையின் ஸ்வாரஸ்யத்தை கடைசி வரை தக்க வைக்க பெரும் உதவியாக இருந்து மிக முக்கியமான கதாபாத்திரம்.
              
                                  கோலுமின் முன் கதையை பீட்டர் ஜாக்ஸன் மூன்றாம் பாகத்தில் தான் சொன்னது என்பது ஜாக்ஸனின் ஆழ்ந்த சினிமா அறிவு. (ஹாட்ஸ் ஆஃப் பி.ஜே).

3. செவெரஸ் ஸ்நேப்.:


                                  கொஞ்சம் டைம் டிராவல் பன்னி (ஞே..) என்னை நீங்க சந்திக்கிற வாய்ப்பு உங்களுக்கு கிடைச்சு. என்கிட்ட நீங்க உனக்கு பிடிக்காத ஒரு கதாபாத்திரம் சொல்லுனு சொன்னா, நான் யோசிக்காம “ஸ்நேப்”னு சொல்லி இருப்பேன்.
              
                                சந்தேகமே இல்லாம நான் ரொம்ப வெறுத்தது ஹாவ் பிளட் பிரின்ஸ் ‘ஸ்நேப்”ஐ தான். குறிப்பா ஆல்பஸ் டம்புல்டோரை கொலை செஞ்சதுக்கு அப்புறம் வோல்டமோர்டுக்கு முன்னாடி இவனை போட்டுத் தள்ளனும் தான் நினைச்சேன்.

                                என் ஒட்டு மொத்த வெறுப்பையும் காதலாக மாற்றிவிட்டது “deathly hallows"இல வரும் ஸ்நேப்பின் முன்கதை. படிக்கும் போதும் சரி, படம் பார்க்கும் போதும் சரி நான் அதிகம் அழுத இடம்(ஹ்ம்ம்) அது தான். அதுவும் நாம ஸ்நேப் கதையை அப்படியே பின்னோக்கி பார்த்தா ஒவ்வொரு இடத்துலயும் அவர் எப்படி ஹாரியை காப்பாத்தி இருக்காருனு பார்க்கும் போது சான்ஸே இல்ல.. தாங்க்ஸ் ஜே.கே.ரெள.

சரி இந்த மூன்று கதாபாத்திரங்களும் இந்த மூன்று கதைகளின் மூலம் தெரிந்தவர்களுக்கு மிகவும் பிடித்தமான கதாபாத்திரங்கள் அதுக்க என்ன காரணமாக இருக்கும். எனக்கு தெரிந்த ஒவ்வொன்றாக பார்க்கலாம்.

1. மூவருக்கும் இருக்கும் யாருக்கும் தெரியாத சோகக் கதைகள்.

2. அவர்களின் இறப்புக்கு பின்னாலே அனைவராலும் அறிப்படுவது, வாழும் பொழுது அனைவராலும் அவமானப்படுத்தபடுவது, இவ்விரு விசயங்களை நாம நம் வாழ்க்கையோடு ஒன்றாகப் பார்க்கிறோம். நாமே அந்தக் கதாபாத்திரங்களோ என்ற உணர்வை சோக நாயகர்கள் நமக்குள் மிக எளிதாக உருவாக்கிவிடுகிறார்கள்.

3. அவர்கள் செய்யும் தவறுகளும் பின்னால நன்மையாக முடியும். இது நாம ஆசைப் படும் விசயம்.

4.வெற்றியிலிருந்து விரட்டப் படுகிறார்கள். நமக்கு  இப்படி நடக்கிறதோ என

தோன்றும் எண்ணங்களில் இதுவும் ஒன்று,

5. அவர்களுக்குள் இருக்கும் ஒரு ரகசியம்.

கிட்டதட்ட நம்மை ஒற்றுப் படைக்கப்பட்ட கதாபாத்திரங்களாக இவர்கள் உருப்பெற்று நிலைப்பதே இவர்களை அனைவருக்கும் மிகவும் பிடித்துப்போக காரண்மாக இருக்கிறது.

கடைசியாக...

ஜான் ஸ்னோ சோக நாயகனா....

கேம் ஆஃப் த்ரோன்ஸில் வரும் ஜான் ஸ்னோ கதாபாத்திரம் ஒரு சோக நாயகனா. இந்த சந்தேகம் எனக்கு முதல் அத்தியாயத்தை பார்க்கும் போதே வந்துவிட்டது. அதற்கு காரணம் முதல் அத்தியாயத்திலேயே அவன் மேல் வைக்கப் பட்டிருக்கும் ரகசியம். அந்த ரகசியமே கதையின் முடிவுக்கு காரணமாகவும் இருக்கலாம்.. பொறுத்திருந்து பார்ப்போம்...

JUSTICE LEAGUE: GODS AND MONSTERS

டிசியின் அனிமேஷன் படங்களுக்கு மிகப் பெரிய ரசிகப் பட்டாளம் உலகம் முழுவதும் உண்டு, மார்வெல்லின் ஆதிக்கம் ஹாலிவுட்டை மட்டும் அல்லாமல் உலகம் முழுவதும் வசூல் வேட்டையை தொடர்ந்து வந்தாலும் டிசி காமிக்ஸ் கதாநாயகர்களுக்கு இந்தியா போன்ற நாடுகளில் இருக்கும் ரசிகர்களுக்கு காரணம் டிசியின் தரமான அனிமேஷன் தயாரிப்புகள். 90களில் வெளிவந்த Batman:The original Animated Series,Justice League,Justice League : Unlimited,Batman Superman:Public enemies போண்ற படங்கள் இன்றும் பலரால் டவுண்லோடிப் பார்க்கப்பட்டுவருகிறது.


டிசி காமிக்ஸ் தன்னுடைய லைவ் ஆக்சன் டிவி சீரிஸ்களை 1950களிலேயே ஆரம்பித்துவிட்டது, ஆடம் வெஸ்டின் Batman சீரிஸ் இன்றும் அமெரிக்காவில் பிரபலாமானது. பிறகு 70களின் பிற்பகுதியில் கிரிஸ்டோவர் ரீவ்ஸின் நடிப்பில் வெளிவந்த அட்டகாசமான் “Superman" திரைப்படம். பல அட்டகாசமான் ஷாட்டுகள் நிறைந்தது அந்தப் படம். இன்றும் சூப்பர்மேன் என்றால் நமக்கு ஞாபகம வரும் அந்த சுழற் கதவில் கோட் சூட்டுடன் நுழைந்து பின் சூப்பர் மேனாக வெளிவரும் காட்சி அந்தப் படத்தில் தான் இருக்கும்.



பின் 80களின் முடிவில் டிம் பர்டனின் இயக்கத்தில் மைக்கேல் கேடன் பேட்மேனாக நடித்தப் படம் வெளிவந்த மீண்டும் காமிக்ஸ் கதாபாத்திரங்களை நிலைப் பெறச்செய்தது. பின் 90களில் பேட்மேன் படங்கள் தோல்வி அடைய மேலும் 90களில் தான் ஹாலிவுட்டில் இண்டிபெண்டன்ஸ் டே,மென் இன் ப்ளாக் போன்ற ஒரிஜினல் படங்களின் வெற்றியாலும் காமிக்ஸ் படங்கள் திரைக்கு வருவது குறைந்தது. இந்த சமயத்தில் தான் டிசி அனிமேஷன் சீரிஸிகளிலும்,படங்களிலும் தன் கவனத்தை திருப்பியது.

அனிமேஷன் சீரிஸ்கள் மூலம் டிசி தனது கதாபாத்திரங்களை அடுத்த தலைமுறைக்கு கொண்டுச்சேர்த்தது.Justice League:Unlimited மூலம் பல சிறு கதாபாத்திரங்களையும் மக்களின் பார்வைக்கு கொண்டு வந்தது. இப்படி டிசி போய்க் கொண்டிருக்கும் பொழுது அட்டகாசமான X-Men,ஸ்பைடர்மேன் படங்கள் மூலம் மார்வெல் தன் ஆதிக்கத்தை ஆரம்பித்து இன்று லைவ் ஆக்ஸ்ன் படங்களில் முழு ஆதிக்கத்தை செலுத்துகிறது. இருப்பினும் டிசியின் சிறந்த படைப்புகள் அனைத்தும் அனிமேஷன் படைப்புகளாக வந்துக் கொண்டேயிருக்கிறது. அதில் குறிப்பிடத்தக்க படங்கள் பல நேரடிபடங்களுக்கு சவால் விடக் கூடியவை குறிப்பாக, Flash point Paradox,Superman ,batman:Public enemies,Green Lantern:First flight,Batman:Man under the red hood போன்ற திரைப்படங்கள். மேலே கூறிய திரைப்படங்கள் அனைத்துக்கும் என்னால் முடிந்த சிறு குறிப்பை சீக்கிரமாகவே எழுதுவேன்.


அந்த வகையில் இப்பொழுது வந்திருக்கும் படம் தான் Justice League: Gods and Monsters. டிசி காமிக்ஸின் மைய்ப்புள்ளியாக இருப்பது The Multiverse theorey.அதாவது நாம் இருக்கும் உலகத்தைப் போலவே பல உலகங்கள் இருப்பது, அந்த உலகத்துக்கும்  நமது உலகத்துக்கும் சிறு வேறுபாடுகள் இருக்கும். அதாவது நாம் சூப்பர்மேன்,பேட்மேன்,ஃப்ளாஷ் போன்ற கதாபாத்திரங்கள் இருப்பது பிரைம் எர்த், அதே போன்று பல நகல் உலகங்கள் இருக்கும் சிறு அல்லது பெரிய வேறுபாடுகளோடு. அதே போன்று இந்த gods and monsters படம் நடக்கும் இடம் ஒரு தனிப்பட்ட உலகத்தில் இந்த படத்துக்கும் மற்ற டிசி அனிமேஷன் படத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை.


படத்தின் ஆரம்பதில் சூப்பர்மேனின் தந்தையான Jor-EL, மனைவி சாராவின் ட் dna குறிப்புகளோடு தன் குறிப்பை சேர்க்க நினைக்கும் தருவாயின் ஜெனரல் சாட் (இவர் சூப்பர்மேனின் முக்கியமான வில்லன்களில் ஒருவர், இவர் இல்லாமல் சூப்பர்மேனின் கதையை சொல்ல முடியாது) ஜொர் எல் லை தடுத்து தன்னுடைய குறிப்புகளை வைத்து ஒரு விமானத்தை உலக்கிற்க்கு அனுப்புகிறார். ஜெனரல் சாடின் மகனான சூப்பர்மேன் அமெரிக்காவின் எல்லையில் விழ அவனை ஒரு மெயிக்கோ அகதிகள் தூக்கிச் சென்று வளர்க்கின்றனர். பின் நிகழ் காலத்துக்கு வரும் நாம் Justice leagueஇன் தலைமை இடத்துக்கு வருகிறோம். அங்கே வாம்பயராக இருக்கும் பேட்மேனையும்,bekka என்னும் வொண்டர்வுமனையும் பார்க்கிறோம்.

பின் அந்த உலகத்தில் Justice League இன் மேல் சந்தேகம் வர வைப்பதைப் போல் மூன்று விஞ்ஞானிகளின் கொலைகள் நடக்கிறது. இதனால் ஜஸ்டிஸ் லீக்கின் மீது பலத்த எதிர்ப்பு வலுக்கிறது. ஜஸ்டிஸ் லீகை சட்டத்துக்கு கீழ் கொண்டு வர வேண்டும் என்ற நிபந்தனைகள் வைக்கப்படுகிறது. இந்தக் கொலைகளை செய்தது யார்.என்ன காரணம் என்பதை உலகின் சிறந்த டிடக்டிவ்வான பேட்மேன் கண்டிப்பிடப்பது தான் கதை. சூப்பர்மேனின் முன்கதையை போல் பேட்மேன்,வொண்டர் வுமனுக்கும் முன்கதைகள் இருக்கின்றன ஆனால் அவை கதையின் டிவிஸ்டுகளுக்கு மிகவும் முக்கியம் என்பதால் படத்தை பார்த்து தெரிந்துக் கொள்ளவும்.

டிசி காமிக்ஸ் இன்னும் மார்வெல்லைப்போல் நிலையான சினிமா யுனிவர்ஸை நிலைத்துக்கொள்ளவில்லையென்றாலும் ஒருவேளை அடுத்த வருடம் வரும் Batman v Superman:Dawn of Justice,Suicide Squad போன்றப் படங்கள் வெற்றியடைந்தால் இந்த மாதிரி அட்டகாசமான படங்கள் வெளிவரும் என்பதில் எந்த ஐயமும்மில்லை.

டிஸ்கி :டெக்ஸ்டர் ரசிகப் பெருமக்களே டெக்ஸ்டர் நாயகன் மைக்கேல் சி ஹால் தான் பேட்மேனுக்கு வாய்ஸ் ஆக்ட் செய்திருக்கிறார்.

4/03/2015

கெளரவன்-- உருண்டன பகடைகள்

 நான் ஒரு ஐந்தாவது படிச்சிட்டிருப்பேன் நினைக்கிறேன்,முழு ஆண்டு விடுமுறை அப்போ சன் டிவில பி.ஆர் சோப்ராவோட மகாபாரதத்தை திங்கள் முதல் வெள்ளி வரைனு அந்த லீவுக்குள்ள பாக்குற மாதிரி போட்டாங்க, இது தான் மகாபாரத்தோட எனக்கு ஏற்பட்ட முதல் தொடர்பு. நான் அந்த தொடரை முழுசா பார்த்தேன்லாம் சொல்ல முடியாது ஆனா அதோட தொடக்க பாடல் மீது அப்படி ஒரு ஈர்ப்பு.உண்மையை ஒத்துக்கனும்னா 90கள்ல வந்த நிறைய தொடர்களுக்கு பாடல்கள் அருமையா இருக்கும்.



மகாபாரதம் பல்வேறு கதைகளின் கூட்டாக இருந்தாலும் அதன் முக்கிய கதையானது பாண்டவ கெளரவ சண்டையையே அடிப்படையாக இருக்கிறது. மகாபாரதம் என்றால் நம் அனைவருக்கும் நினைவுக்கு வருவதும் அது தான். அந்த மாபெரும் இதிகாசத்தில் கெட்டவனாக சொல்லப்படுபவன் துரியோதனன் ( இந்திய தொலைக்காட்சிகளைப் பொறுத்தவரை வியாசர் எழுதியதை விட அவனைக் கெட்டவனாக காட்ட இவர்கள் நிறைய எழுதியிருக்கிறார்கள்).

மகாபாரதம் பாண்டவர்களின் பார்வையில் எழுதப்பட்டது, அவர்களின் தர்மம் எது என்பதை விவரிக்கிறது. போரில் தோத்த துரியோதனனை கெட்டவனாக சித்தரிக்கிறது. ஆனால் பாரதத்தை தோற்ற கெளரவர்கள் பார்வையில் எழுதினால் எப்படி இருக்கும் என்பதே இந்த கெளரவன் நாவல்.

இந்தப் புத்தகத்தின் ஆரம்பத்தில்,ஆசிரியர் ஆனந்த் நீலகண்டன் கேரளாவின் மண்டலாவில் இருக்கும் துரியோதனன் கோவிலைப் பத்தி சொல்கிறார். துரியோதனன் எப்படி தீயவனாக இருக்க வாய்ப்பு இல்லை என்று சொல்லி துரியோதனின் கதையை சொல்ல ஆரம்பிக்கிறார்.

கேரளாவில் இருக்கும் துரியோதணன் கோவில்


கதையின் தொடக்கமே பீஷ்மர் காந்தாரத்தை திருதிராஸ்டிரனுக்கு மனைவியை தேடுவதற்காக அழித்து, அதில் காந்தாரியையும், ஏழு வயதான சகுனியை அஸ்தினாபுரம் கூட்டிச் செல்வதாக தொடங்குகிறது.அதிலிருந்து அக்கதை துரியோதனன் பிறப்பில் ஆரம்பித்து துரியோதனன் பார்வையில் செல்கிறது.

துரியோதனன் சிறு வயதில் இருந்தே துடுக்கு தனமானவன். அவனுக்கு அவனது நாட்டில் இருக்கும் சடங்கு சம்பிரதாயங்களை வெறுக்கிறான். ஒரு சிலரை உயர்ந்தவனாகவும் சிலரை தாழ்ந்தவனாகவும் பார்க்கும் சமுதாயத்தை வெறுக்கிறான். தன்னைப் போலவே வளரும் துரியோதனன் மீது அளவு கடந்த பாசத்தை வைக்கிறார் பீஷ்மர்.

காட்டில் பாண்டு இறந்த பின் குந்தி தன் ஐந்து மகன்களோடு அஸ்தினாபுர அரியனையை பிடித்தே ஆக வேண்டும் என்ற நோக்கோடு உள் நுழைகிறாள். அவளுக்கு அரசியல் ரீதியாக உதவுவதற்கு தெள்மியன் எனற தலைமை பிராமணன் திருதிராஸ்டிரர் அவையில் இருக்கிறான். அவன் துரியோதனைப் பற்றி அவதூறுகளைப் பரப்புவதில் கில்லாடியாக இருக்கிறான்,

வேதங்கள் அனைத்தையும் கற்றவரான கிருபரும் துரியோதனன் போல சடங்குகளை எதிர்கிறார்.தெளமியனிடம் இருந்து துரியோதனனை காப்பாற்றுகிறார். சடங்குகளையும், பிரோகிதர்கள் சொல்லும் விதிகளையும்,தர்மத்தையும் தட்டிக்கேக்காத பாண்டவர்களை எல்லாருக்கும் பிடித்து போகிறது. பின் இவர்கள் இருவருக்கும் குருவாகும் துரோனருக்கும் பாண்டவர்களே விருப்பமானவர்கள் ஆகிறார்கள். அஸ்வத்தாமன் துரியோதனனின் நண்பனாகிறான்.

துரோனரால் நிராகரிக்கப்பட்ட கர்ணனை கிருபரும், துவாரகையின் நாயகனான பலராமனும் தெற்கில் இருக்கும் பலராமரிடம் அனுப்புகிறார்கள்.பாரதத்தின் தெற்கானது முன்னால் பெருமையுடன் விளங்கிய அசுரர்கள் அழிந்து பரசுராமரின் கைப்பாவை அரசுகளால் இயங்கப்படுகிறது. அங்கே தன்னை பிராமணன் என்று சொல்லி சீடனாக சேர்கிறான் கர்ணன்.

இது வரைக்கும் சொன்னது கதையோட சின்ன ஆரம்பம் மட்டும் தான் ஆனா இந்தக் கதை இன்னும் பல அடுக்குகள்ல செல்லும். குறிப்பா இதுல வர ஜரன் கதாபாத்திரம். ஏகலைவனோட கூட இருக்கும் அந்த கதாபாத்திரம் இந்த கதை முழுவதும் எல்லா அத்யாயங்கள்லயும் வரும். கர்ணன் வள்ளலாவதற்கு காரணமாக ஜரன் கதாபாத்திரத்தை பயண்படுத்தியிருப்பது ஆசிரியரின் நேர்த்தி என சொல்லலாம்.

கதையை முடிந்த அளவுக்கு எதார்த்த பாணியில் சொல்லியிருக்கிறார் ஆணந்த், இதில் தேவர்கள் இல்லை இந்திரன் வெறும் வயதான அரசன் தான், கர்ணனுக்கு கவசக் குண்டலங்கள் ஒரு போட்டியில் கிடைக்கின்றது, திரெளபதி துருபதனுக்கு மகளாக பிறந்து வளர்கிறாள் யாகத்தில் உதிக்கவில்லை,கிருஷ்ணன் கடவுள் இல்லை அவன் வசீகரமான ஒரு அரசியல் தந்திரி மட்டுமே.


கதையின் முக்கிய வில்லன்களாக சித்தரிக்கப்படுவது சகுனியும் கிருஷ்னனும்,இருவரும் தங்களால முடிந்த அரசியல் விளையாட்டுகளை விளையாடுகிறார்கள். கிருஷ்னண் தன்னை கடவுளின் அவதாரமாக மக்களின் முன் நிறுவுகிறான் ஆனால் அவனது உண்மையான குனம் மேல்தட்டில் இருப்பவர்களை குளிரச் செய்து தன்னை கடவுள் அந்தஸ்த்துக்கு உயர்த்துவதில் தான் இருக்கிறது என்று இந்தக் கதையில் வருகிறது. தீவிர மதப்பற்றாளர் என்றால் இந்த நூலை வாங்காமல் இருப்பது நல்லது.

கதைகளை விதுரன்,துரியோதனன்,அர்ஜூனன்,கர்ணன்,ஏகலைவன்,ஜரன் பார்வைகளில் எழுதியிருக்கிறார்,இதனால் இக்கதாபாத்திரங்கள் மீது ஒரு வித ஈர்ப்பும்,அவர்களின் செயல்களில் நியாமமும் இருப்பதாக நம் மனதுக்கு தோண்றுகிறது.

நாவலின் இன்னொரு நேர்த்தி கதை எந்த இடத்திலும் மகாபாரதத்தில் வரும் சம்பவங்களை மறைக்கவில்லை, அரக்கு மாளிகை,சூதாட்டம் என எல்லாமும் வருகிறது ஆனால் இதில் எப்படி துரியோதனண் சூழ்ச்சியால் விழுந்தான் என்பதே கதையின் ஓட்டம்.

இரண்டாம் பாகத்தை ஆணந்த் போன வருடமே எழுதி முடித்தாலும் இன்னும் வெளிவராமல் நீண்டுக் கொண்டிருக்கிறது, நான் மிகவும் எதிர்பார்கும் நாவல்களில் அது இருக்கிறது.