11/13/2013

Mad Detective (San taam) [2007] -- Hong kong

Mad Detective

பைத்தியக்கார துப்பறிவாளன்.


Mad Detective (2007) on IMDb


           

புலனாய்வு, தடயவியல் போன்றவைகள் எல்லாம் 20ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலிருந்துதான் வளர்ச்சி பெற ஆரம்பித்தன. அதற்கு முன் நமது உலகத்தில் கொலை, கொலையை பற்றி ஆராய்வதில் பெரிய அறிவியல் கோட்பாடோ, கண்களோ யாரும் செலுத்தியதில்லை. அதாவது மிக எளிமையாக சொல்லுனும்னா ஒரு கொலை முடிந்தபின் காவல் துறை இரண்டு விடயங்களை மட்டும் தான் தேடும். ஒன்னு மோட்டிவ், இரண்டு கொலைக்கருவி.

இதில் ஒன்னு சரியா கிடைச்சிட்டா போதும். கைது செய்தவனை அடிச்சாவது வாக்குமூலம் வாங்கி கோர்ட்ல ஆஜர் செய்துவிடுவார்கள். அவ்வுளவு தான். அதாவது ஒரு எ.கா. க்கு இன்னைக்கு காலையில நீங்க ஒருத்தர்க்கிட்ட சண்டை போடுறீங்க அவர் மாலை நேரத்தில இறந்து கிடந்தா போலிஸ் நேரா உங்களைத் தான் கைது செய்யும். பின் உங்க கிட்ட எப்படியாவது ஒரு வாக்குமூலத்தையும் வாங்கிடுவாங்க. இது தான் 20ஆம் நூற்றாண்டுக்கு முன்னாடி நடந்துக்கிட்டிருந்த விசயம். இந்த மாறி சரியான் மோட்டிவும் கிடைக்காம, தடயவியல் எனும் அறிவியல் வளராதக் காரணத்தாலும் கண்டுப்பிடிக்க முடியாமல் போன பல வழக்குகள் உண்டு, லண்டைனையே கலக்கிய ஜாக் தீ ரிப்பர் கொலைகளும் கூட அப்படியே தான். ஒரு 20 வருடங்கள் தள்ளி ஜாக் தி ரிப்பர் கொலைகளை செய்ய முன்பட்டிருந்தால் அவன் போலிசிடம் மாட்டிருக்க வாய்ப்புகள் அதிகம்.

இப்படி இருந்த ஒரு உலகத்தையே மாற்றியது ஆர்தர் கொனான் டோயிலின் ஷெர்லாக் ஹோம்ஸ் என்று சொல்லாம். ஏன்னென்றால் அது உண்மையும் கூட. நான் மேலே சொன்ன விசய்ங்களை கவனிங்க 19ஆம் நூற்றாண்டுல யாரும் கொலை நடந்த இடத்திலிருந்து ஆதாரங்களை தேட மாட்டார்கள். அப்படி இருந்த  பொழுது தான் ஷெர்லாக் வந்தார் ஷூ பிரிண்ட்ஸ், சிகரட் துகள்கள், இரத்த மாதிரிகள், துப்பாக்கிகள் பற்றிய ஆய்வு, ஃபிங்கர் பிரிண்ட்ஸ் என பல விசயங்களை அறிமுகம் செய்த்தார். துப்பறிவதை ஒரு அறிவியலாக மாற்றினார் கொனான் டோயில். இப்படி ஒரு அறிவியலை கதைகளில் படித்தவர்கள் நேரில் புலனாய்வதை பார்த்த போது தான் கண்டுபிடித்தார்கள் இன்னும் புலனாய்வுத் துறை வளரவில்லை என்பதை. அதன் பின் ஷெர்லாக்கின் விசிறிகளால் வளர்க்கப்பட்டதே இந்த புலனாய்வு துறை.

ஷெர்லாக் வரவுக்குப் பின் உலகமெங்கும் துப்பறிவு பற்றிய நாவல்கள், திரைப்படங்களிலும் பெரும் மாற்றங்கள் உருவாகின. கதையின் நாயகன் கிட்டத்தட்ட ஷெர்லாக்கின் வடிவிலிருந்தே உருவாக்கப்பட்டார்கள். ஷெர்லாக்கை போன்றே அறிவியல் காரணங்களோடு துப்பறிவதுதான் இவ்வகை புனைவுகளின் அடிப்படை விதியானது. ஆனால் ஷெர்லாக்கை எல்லையை மீறி துப்பறியும் ஸ்டைலைக்கொண்டவன் ஆனால் லாஜிக்கைவிட மனித என்னங்களை நம்பும் ஒரு துப்பறிவாளன் தான் மேட் டிடக்டிவ் படத்தின் நாயகன் முன்னாள் இன்ஸ்பெக்டர் பன்.

இன்ஸ்பெக்டர் பன் ஹாங் காங்கின் மிகச் சிறந்த டிடக்டிவ்ஆனால அவர் ஒரு மன் நேயாளி. தனது சீஃப் ஆபிசர் பனி ஓய்வின் போது அனைவரும் பரிசுப் பொருட்களை தந்துக்கொண்டிருக்க பன் தன் காதை அறுத்து தருகிறான். இப்படிப்பட்டவரை காவல் துறை விலக்கி விடுகிறது, மனைவியும் அவரைவிட்டு போய்விடுகிறாள் ஆனாலும் அவர் மனைவியுடனே இருப்பதாக கற்பனை செய்துக் கொள்கிறார். இது மட்டும் இல்லாமல் இவருக்கு ஒரு சக்தியும் இருக்கிறது ஒவ்வொரு மனிதனின் உள்ளே இருக்கும் அவனது குனங்களை (personalities) இவரால் பார்க்க முடியும். அதாவது ஒருவர் சாதரணமாக இருக்கும் பொழுது ஒருவர், பயப்படும் போது ஒருவர், கோவப்படும் போது ஒருவர் என இவர் கண்களுக்குத் தெரிவார்கள்.

இப்படிப்பட்ட பன் தனது வேலையை விட்டு விலகி ஐந்து வருடங்களுக்குப் பிறகு அவரிடம் இரண்டு நாட்கள் வேலை செய்த இன்ஸ்பெக்டர் ஹோ சந்தித்து இரண்டு வருடங்களாக தீர்க்க முடியாமல் இருக்கும் ஒரு வழக்கில் உதவுமாறு கேட்க. இத்தணை நாள் அடைந்திருந்த பன் அந்த வழக்கை விசாரிக்க ஒத்துக்கொள்கிறார். இது தான் Mad detective படத்தின் கதைச் சுருக்கம்.


மேலோட்டமாக பார்க்கும் பொழுது இது மிகச் சாதரணமானக் கதை தான். பல வருடங்களாக சும்மா இருக்கும் ஒரு அதிகாரியை ஒரு ரூக்கி வந்து தனக்கு உதவுமாறு கேட்ப்பது. இதை நிறைய ஆங்கிலப் படங்களிலும், தமிழ் படங்களிலும் கூட நாம் பார்க்கலாம். ( இதை அப்படியே டிடக்டிவ்வைமாத்தி இசைக் கலைஞர், நாட்டியக் கலைஞர் அப்படி போட்டு பார்த்தீங்கனா நிறைய தமிழ் சினிமா கையில கிடைக்கும்). அப்படிப் பட்ட மாமூலான கதைக்களம். ஆனாலும் இந்த படத்தை ரசிக்க வைப்பது இன்ஸ்பெக்டர் பன்னின் கதாபாத்திரம் தான்.

இந்தக் கதாபாத்திரத்தை புரிந்து கொள்வதற்கே நமக்கு நேரம் பிடிக்கும். இவர் வெறும் மன நோயாளியா, இல்லை இவர் செய்வதற்க்கெல்லாம் எதாவது காரணம் இருக்கானு நாம் சில நிமிடங்கள் ஒரு குழப்ப நிலையில் இருக்கும் பொழுதுதான் தானாகவே இவரின் கதாபாத்திரம் அவரின் செயல்பாடுகளை விளங்கச் செய்யும். இவரின் செயல்பாடுகளை சீக்கிரம் புரிய வைக்க வேண்டும் என்பதற்காக எந்தவித முட்டாள்தனமான விளக்க காட்சிகளை போடாமல் தானாகவே நமக்கு புரிய வைத்திருப்பது மிகப் பெரிய ப்ளஸ்.பன்னாக நடித்திருப்பது சிங் வாங் லு புல்லட் வேனிஸஸ் படத்தில் டிடக்டிவா வருவார்ல அவரே தான், இதுலயும் கலக்கிறுக்கார்.

படம்  ஒரு வித அமைதியான வேகத்தில் செல்கிறது. படம் எந்த நேரத்திலும் தனது வேகத்தையும் குறைக்காமலும் ஒரு நல்லப் படத்தை பார்க்கும் அமைதியையும் தருகிறது. இது இந்த மாறியான வகைப்படங்களில் மிக அரிதாகவே கிடைக்கும். படத்தை இயக்கியது ஜானி டோ மற்றும் கா வே வாய் என்னும் இரட்டையர்கள்.  ஹாங் காங் சினிமா உலகிலிருந்த வந்த சிறந்த இயக்குனர்களின் இந்த இரட்டையருக்கு ஒரு தனி இடம் உண்டு. இவர்களின் படங்கள் அனைத்தும் ஒரு கல்ட் ஸ்டேடஸ் அடைந்தவை.. இந்த இரட்டையர்கள் ஆரம்பித்த தயாரிப்பு குழுமம் தான் “Milkyway Image", ஹாங் காங்கிலிருந்து வரும் இண்டிபெண்டண்ட் படங்களில் பெரும்பாலனவை இந்த குழுமத்திலிருந்து வருபவை தான்.

இந்தப் படத்தை முழுமையான சிறந்தப் படம் என்றெல்லாம் சொல்ல முடியாது. ஏனென்றால் பன்னும் ஹோவும் விசாரிக்கும் வழக்கு பெரிய வித்யாசமான வழக்கென்றெல்லாம் சொல்ல முடியாது. பன் அரை மனி நேரத்திலேயே வழக்கை கிட்டத் தட்ட முடித்து விடிகிறார். இது போன்ற விசயங்கள் வெளிப்படையாகவே இருந்தாலும் இந்தப் படம் கண்டிப்பாக பார்க்க வேண்டியப் படைப்பு. அமைதியான் வேகம் சிலப் படங்களில் மட்டுமே நம்மால் உணரமுடியும் , அதை இந்தப் படம் கண்டிப்பாக உணர்த்தும் என்று நான் நம்புகிறேன்.

படத்தின் முன்னோட்டம்