1/21/2013

கருத்து வேறுபாடு

கருத்துவேறுபாடு 

என்ன எழுதலாம் .எதை பற்றி எழுதலாம் என்று யோசித்து இதோ இந்த கருத்து வேறுபாடு பற்றி எழுதலாம் என்று முடிவேடுதிரிக்றேன்.

அது என்ன கருத்து வேறுபாடு ?

பொதுவான ஒரு விஷயத்தின் மேலோ, சம்பவத்தின் மேலோ, மனிதனின் மேலோ இரண்டு அல்லது மேற்பட்ட மனிதர்களுக்கோ அல்லது பிரிவினற்கோ வெவ்வேறு விதமான கருத்துகள் உண்டு என்றால்  அவை கருத்து வேறுபாடு என்று சொல்லலாம்.

இந்த கருத்து வேறுபாடுக் கென்று தனியாக ஒரு கட்டுரை எழுத வேண்டுமா  , அது அவ்வுளவு பெரிய விஷயமா  என்று கேக்கலாம் . இதை நானும் யோசித்து பார்த்தேன் அப்படி யோசிகையிலும் இந்த கட்டுரையை எழுதும் பொழுதும், ஆம் இதை பத்தி எழுதியே ஆக வேண்டும் என்ற முடிவுக்கு வந்து இருக்கிறேன் . ஏன் என்றால் இதை நான் முழுக்க யோசித்து இந்த கட்டுரை எனக்கும் படிக்கும் உங்கள்ளுகும் ஒரு நல்ல விஷயத்தை கொடுக்கும் என்று நம்புகிறேன் .

இந்த கருத்து வேறுபாடு என்ற சொல்லை படித்த உடன் அனைவர் மனதிலும் நம் வாழ்க்கையில் நடந்த ஏதோ ஒரு சம்பவம் ஞாபகத்துக்கு வரும் அது நீங்கள் கிரிக்கெட்டில் அவுட் ஆக வில்லை என்று நண்பனிடம் சண்டை போட்டதாக இருக்கலாம், உங்கள் பெற்றோர்கள் இடையே வந்த சண்டைகளாக இருக்கலாம், எந்த கல்லூரியில் எந்த பிரிவில் சேரவேண்டும் என்பதில் உங்களுக்கும் உங்கள் பெற்றோருக்கும் இடையே இருந்து இருக்கலாம் ,சில சமயங்களில் நம் நம் நண்பர்கள் இடம் நீ இதை செய்யாதே என்று சொல்லி இருப்போம் அதை அவர்கள் செய்ததால் இருக்கலாம் ,அரசியலில் இருக்கலாம் , பால்  தாக்கரே இறந்த பொழுது மும்பையில் அந்த இளம் பெண்ணை  கைது செய்த விசயத்தில் இருக்கலாம், டெல்லி பாலியில் வன்முறை  சம்பவிதில் ஈடுபட்டவர்களுக்கு தூக்கு தன்டனை கொடுக்க வேண்டும் என்வதில்  என நாம் கேக்கும் , பார்க்கும் எல்லா விசயங்களிலும் அனைவர்க்கும்  வெவ்வேறு வித மான கருத்துகளும் ,தீர்வுகளும் இருக்கும்.

இந்த கட்டுரையை ஆரம்பித்த பொழுது நீங்கள் நினைத்ததை போல் கருது வேறுபாடு என்பது  சாதாரண விஷயம் அல்ல என்பது புரிந்து இருக்கும் என்று நம்புகிறேன் .ஏன் எனில் இந்த கருத்து வேறுபாடு இருப்பது  அவசியம் அப்படி இருந்தால் மட்டுமே நம்மால் , ஏன்  அரசுகளால் கூட முடிவகளை எடுக்க முடியும் .

சரி முதலில் பால் தாக்ரே இறந்த பொழுது அந்த பெண்ணை கைது செய்தது ஒரு தவறான செயல் தானே , அதை யாரால் நியாய படுத்த முடியும் ? இப்படி தான் நானும் நினைத்து வந்தேன் யாருக்கும் இந்த விஷயத்தில் கருத்து வேறுபாடு இருக்காது என்று தான் நினைத்தேன். ஆனால் இந்த விஷயத்தை பற்றி எனது ஆசிரியர் சொ ன்ன கருத்து எனக்கு விவாதிக்க பட வேண்டிய கருத்தாக தோன்றியது .இந்த கருத்து நாங்கள் ARTICLE 19(a ) பற்றி விவாதிக்கும் பொழுது வந்தது . அதாவது ARTICLE 19(a ) படி நாம் நமது கருத்தை சொல்வதற்கு சுதந்திரம் கொடுக்க பட்டு உள்ளது , அனால் இதை முடிக்கும் பொது இப்படி வருகிறது , THE STATE CAN IMPOSE CERTAIN REASONABLE RESTRICTIONS ON THE EXERCISE OF THE FREEDOM OF SPEECH AND EXPRESSION ON THE GROUNDS OF SOVEREIGNTY AND INTEGRITY OF INDIA, SECURITY OF THE STATE , FRIENDLY RELATIONS WITH FOREIGN STATES , PUBLIC ORDER , DECENCY OR MORALITY, CONTEMPT OF COURT , DEFAMATION AND INCITEMENT TO AN OFFENCE.

இப்படி ஏன் RESTRICTIONS  கொடுக்க வேண்டும் என்பது எங்கள் கேள்வி . அதற்கு அவர் மும்பை  இளம் பெண் கைது விவகாரம் பற்றி எங்களிடம் கேக்கிறார் , நாங்கள் ஒருமித்தமாக தவறு என்கிறோம் .அதற்கு அவர் அவர்க்கு உரிய  பொறுமையான குரலுடன் இப்படி விவரிக்கிறார் " பால் தாக்ரே அந்த பெண்ணுக்கு பிடிக்குதோ பிடிக்கவில்லையோ அவர் மும்பை நகரை பொறுத்த மட்டில்  ஒரு பெரிய தலைவர் , அவர் இறந்த அன்று மும்பை போலீஸ் முழுவதும் பாதுகாப்பு வேலையில்  இருகிறார்கள் , அந்த நேரத்தில் இந்த பெண்  இப்படி ஒரு STATUS  போடும் பொழுது கண்டிப்பாக அது எங்கே முடியும்  என்பது நமக்கு தெரியாது , அந்த பெண்ணை தாக்கும் அளவுக்கு கூட அவர்களிளின் எண்ணம் போயிருக்கலாம் , அதே போல் இப்படி பலரும் STATUS  போட்டால்  அவர்களின் பாதுகாப்பும் கேள்விகுறியகலாம்  ,அதனால் மும்பை போலீஸ்  அப்படி ஒரு முடிவு எடுத்திருக்கலாம், அனால் ஒரு பெண்ணை கைது  செய்ததது அவர்கள் செய்த தவறு தான் ஆனால் அவர்கள் இந்த கைதின் மூலம் மக்களுக்கு  இந்த இக்கடான் நிலையை உணர்த்த நினைத்திருக்கலாம் ஆனால்  அதை உணர்த்துவதற்கு ஒரு பெண்ணை கைது செய்தது தவறு தான் ." என்று முடித்தார்.

அவர் சொன்ன போதும் எனக்கு முழுமையாக அந்த கருத்து என்னால் ஒப்பு கொள்ள முடிய விட்டாலும் , அவரின் கருத்திலும் தவறு இல்லை என்று தான் தோன்றியது  , மேலும் எல்லா விசயம்களிலிம் ஒரு மாற்று கருத்து எவளவு அவசியம் என்பதும்  விளங்கியது...

இந்த பதிவில் உங்கள் கருத்துக்களையும் பதிவு செய்யும்  மாறு கேட்டுக்கொள்கிறேன்.
நன்றி .

1/20/2013

3-IRON

3-iron


இந்தப் படத்தை நீங்கள் பார்த்து இருப்பீர்கள் , ஒருவேளை பார்க்கவில்லை  என்றல் உடனே பார்த்துவிடுங்கள்  .இது இயக்குனர் kim-ki duk கின் காவியம் . கிம் கி டுக் பல படங்கள் எடுத்து இருக்கிறார் , அதில் அனைத்துமே அருமயாண  படங்கள்  3-iron  மட்டும் எந்த விதத்தில் சிறந்த படம் என்று நீ சொல்கிறாய் என்று நீங்கள் கேக்கலாம் . நான் அதற்கு சொல்லும் பதில் எனக்கு தெரியாது ஏன்னோ  இந்த படம் என் மனதை விட்டு அகலவே இல்லை. நான் இந்த பதிவை படம் பார்த்த உடனே போடுகிறேன் என்று எண்ண  வேண்டாம் , நான் இந்த படம் பார்த்து பல நாட்கள் கழித்து  தான் இந்த பதிவை எழுதுகிறேன்.இதை நான் சொல்வதருக்கு காரணம் இந்த படம் உங்கள் மேல் கொடுக்கும் பாதிப்பு அந்த அளவுக்கு இருக்கும்...

கதை :
Tae -suk  என்பவன் பகல் முழுவதும் தன்னுடைய பைக்கில் சுத்தி கொண்டு பூட்டி இருக்கும் வீடு கதவுகளில் தான் வேலை செய்யும் ஹோட்டல் லின் விளம்பரத்தை ஒட்டி வைப்பான், பின் இரவுகளில் எந்த வீட்டில் விளம்பரம் கிழிக்க படவிலையோ அந்த வீட்டுக்குள் நுழைந்து அந்த இரவை கழித்து  விட்டு மீண்டும் தன்  வேலை (?) யை தொடங்குவான். இப்படி ஒரு நாள் ஒரு வீட்டுக்குள் நுழையும் tae -suk  அங்கே ஒரு பெண்(Sun-hwa) இருப்பதையே  தெரியாமல் அந்த வீட்டுக்குள் அந்த வீட்டின் உரிமையாளர் போல் இருக்கிறான். அந்த பெண் தன்னுடைய கணவனால் சித்ரவதை செய்யப்பட்டு வாழ்க்கையே முடிந்து விட்டது என்று என்னும் பொழுது இந்த tae -suk  கின் carefree  வாழ்க்கை யை பார்த்து பொறாமை கொள்கிறாள் . Tae -suk  தன் தனிமையை முழுதாக அனுபவிக்கும் (!!) பொழுது அவன் Sun-hwaவிடம் மாட்டி கொள்கிறான் . அவன் வீட்டை விட்டு வெளியேரும் பொது அந்த பெண்ணும் ஒரு வலியோடு தான் அந்த வீட்டில் இருக்கிறாள் என்று புரிந்துகொள்கிறான் , இருந்தும் வீட்டில் விட்டு வெளியேறும் tae -suk  மனம் கேக்காமல் மீண்டும் அந்த வீட்டுக்கு வருகிறான் அவன் வரும் பொழுது Sun-hwa  குழித்து கொண்டு இருக்கிறாள் அப்பொழுது tae -suk  தனக்கு பிடித்த பாடலை play செய்து விட்டு அவள் வீட்டின் lawn இல் போய் கோல்ப் விளையாடிகிறான் . அந்த நேரம் Sun-hwa வின் கணவன் வருகிறான் எபோழுதும் போல் அவர்கள் இருவருக்கும் சண்டை வருகிறது அதை பார்க்கும் tae -suk  அவனை தாக்கி விட்டு Sun-hwa வை உடன் கூட்டி  செல்கிறான் . இதன் பின் இவ்விருவரும் பல வீடுகளுக்குசெல்கிறார்கள்  காதல்மெதுவாக மலர்கிறது , ஒரு பிரச்னையில் மாட்டுக்கிறார்கள்  ,tae -suk  ஜெயிலுக்கு போகிறான் , ஜெயில் இல் மனித கண்கள்ளிடம் இருது மறைவது என்னும் திறமையை வளர்கிறான். அந்த திறமையுடன் Sun-hwa வீட்டுக்கு வந்து அவன் கணவனுக்கு தெரியாமல் இருபதோடு இப்படம் முடிகிறது.

இந்த படம் முழுவதும் Kim ki -duk  கே சொந்தம் . இந்த படம் பெரும்பாலான கிம் கி டுக் கின் படங்களை போலவே இதிலும்  வசனங்கள்  கம்மி எந்த அளவுக்கு கம்மி என்றால் படத்தில் tae -suk  க்கு வசனமே கிடையாது , Sun-hwa வுக்கு ஒரே ஒரு வசனம் உண்டு அதுவும் படம் முடியும் பொழுது வருகிறது ,எனக்கு தெரிந்து நான் இப்படி வசனங்களே இல்லாத ஒரு காதல் படம் பார்த்ததே இல்லை அப்புடி இருந்து இந்த படத்தை கிம் கி-டுக்  நம்மளை  ரசிக்க வைக்கிறார் , உணர வைக்கிறார் . கிம் கி-டுக்கின் படங்கள் மனித வாழ்கையின் உணர்சிகள் பற்றி  பேசும். இந்த படமும் அதை பற்றியதே. இந்த படம் எத்தனை முறை பார்த்தாலும் ஒரு புது உணர்வை கொடுக்கும். 

3-iron  படத்தின் trailer  :


இந்த படத்தில் ஒரு அருமையன ஒரு அரபி பாடல் ஒன்று வருகிறது இந்த படம் பிடித்து போக அதுவும் ஓர் காரணம்  . அந்த பாடலின் link  அதையும் ஒரு முறை பார்த்துவிடுங்கள் ..



மிஸ் பண்ணாம பாத்துடுங்க ...
நன்றி 


  

கடல் - KADAL

கடல் - KADAL  TRAILER  என்ன சொல்கிறது ?


மேலே உள்ள TRAILER ஐ ஒரு முறை பார்த்த பின் இந்த கட்டுரையை தொடரவும்.

இந்த TRAILER  YOUTUBE இல் இரண்டு வாரத்துக்கு முன் UPLOAD செய்யப்பட்டது. இந்த லிங்கை FACEBOOK  இல் MYSTIC TAMIL என்ற PAGE இல் ஷேர் செய்யப்பட்டு விவாதங்கள் செய்யப்பட்டன. அந்த விவாததில் இந்த TRAILER  சாதாரணமான தமிழ் படம் போல் உள்ளது , வில்லனால் கெடுக்க படும் ஹீரோ காதலியால் திருதபடுவான் என்றாலும் மணி ரத்னம் மேல் நம்பிக்கை உள்ளது எனவும் இந்த படம் நன்றாக இருக்கும் எனவும் அந்த PAGE இன் அட்மின் கூறியிருந்தார்.
அந்த PAGE இல் இருந்த அந்த லிங்கை கிளிக் செய்து நான் அந்த பL  TRAILER  பார்த்தேன் எனக்கு அப்பொழுது ஒரு பொறி தட்டியது. அது என்ன வென்றால் இந்த படம் பைபிளில்  வரும் ஆடம்-ஈவா வின் கதையாக இருக்குமோ என்பதுதான்.அந்த யோசனை ஓடு மீண்டும் அந்த TRAILER  பார்த்தேன் அப்போது என்னோடைய எண்ணம் சரி என நினைபதுற்கு ஏற்ற சில காரணங்களும் கிடைத்தன....
அவை..
1. தாமஸ் ( ஹீரோ ) சிறுவயதில் அவனை எல்லாரும் திட்டுவது போன்றும் அவனை சாமி ( அரவிந்த் சாமி) என்ற பாதிரியார் நம்பிக்கை கொடுத்து வளர்ப்பது போலவும் கட்ட படுகிறது .( இந்த RELATIONSHIP  GOD -MAN )
2.பின் தாமஸ் பெர்ச்மான்ஸ் (அர்ஜுன்) உடன் சேர்வது  ( MAN -SATAN )
3. அர்ஜுன்  தன்னை SATAN  என்று சொல்வது.
4.இந்த ஆடம்-ஈவா கதையை தாண்டியும் பல பிப்லிகல் கதாபாத்திரங்கள் இந்த படத்தில் உள்ளது போன்ற காட்சிகள்
  1. லக்ஷ்மி மஞ்சு  கல்லால் அடிவாங்கும் காட்சி .
  2. அரவிந்த் சாமியை மக்கள் அடிக்கும் காட்சி.
நான் பொதுவாக படத்தின் PREVIEW  என்பதை கொடுக்க மற்றும் படிக்கச் வேண்டாம் என்று நினைப்பேன் ஏன் என்றல் பெரும்பாலும் அது தவறாகவும் தேவையற்ற ஒரு HYPE உருவாகும் என்பதால். நான் எழுதிய இந்த TRAILER கதை உண்மையாக இருக்க வாய்ப்பு மிக கம்மியே..எனவே இந்த ப்ளாக்ஐ பார்க்கும் நண்பர்கள் உங்களின் பின்னூட்டத்தையும் கொடுத்து நான் எழுதிய இந்த கட்டுரை தவறு என்றால் அது எந்த விதத்தில் என்று சொல்ல வேண்டும்  என்றும் கேட்டுக்கொள்கிறேன் ..
நன்றி 


A PROPHET

A PROPHET (Un prophèt  )

DIRECTED BY : Jacques Audiard

MUSIC BY : Alexandre Desplat


கதை :

மாலிக் என்ற 19 வயதான ஓர் இஸ்லாமிய சிறுவன் போலிசீரை  அடித்த குற்றத்திற்காக பிரெஞ்சு போலிசால்  கைது செய்ய பட்டு 6 வருடம் சிறை தண்டனை பெறுகிறான். இதன் பின் படம் முழுவதும் அவனது ஆறு வருட சிறை தண்டனை பற்றி சொல்கிறது.
        . பிரான்ஸ் நாட்டில் உள்ள சிறைகள் பற்றி லேசாக பார்த்துவிட்டு மீண்டும் கதைக்குள் செல்வோம். பெரும்பாலும் பிரான்ஸ் நாட்டில்லுள்ள சிறைகள்  corsiccans  மற்றும் முஸ்லிம்கள்  உள்ள கருத்து  வேறுபாடினால் இவர்கள் இடையே இரண்டாக பிரிந்து இருக்கும். அதாவது corsiccans  என்பவர்கள் தனி கூட் டம்மாகவும்  முஸ்லிம்கள் தனியாகவும் இருப்பர். corsicanns  என்பவர்கள் பிரான்ஸ் நாட்டின் கீழ் இருக்கும் ஒரு கோர்சிச்க்கன் தீவை சேர்ந்தவர்கள்.
சிறையில் உள்ளே உள்ள corsiccans  அந்த சிறையை ஆட்சி செய்யும் அளவுக்கு அந்த சிறையில் உள்ள அனைத்து அதிகாரிகளையும் தங்கள் கையில் வைத்து உள்ளனர்.
இப்படி உள்ள பிரான்ஸ் நாட்டின் சிறைக்குள் அடைக்க படும் மாலிக் பெரும்பாலும் தனிமையில் இருக்க ஆசைபடுகிறான்.சிறையில் உள்ள முஸ்லிம்களுடன் இருந்தும் இவன் தனிமையிலே 
இருக்கவே இவன் ஆசை படிக்கிறான்.இந்த சமயத்தில் சிறையில் உள்ள  corsicanns  தலைவனான cesar என்பவனுக்கு சிறையில் முஸ்லிம் பிரிவை சேர்ந்த ரேயப் என்பவனை 1 வாரத்துக்குள் கொல்ல சொல்லி அவனது boss இடம் இருந்து ஆணை வருகிறது. ரேயப் என்பவனை கொல்வதுக்காக எந்த பிரிவிலும் சேராத மாலிக்கை  மிரட்டி ரேயப்பை கொலை செய்ய வைக்கிறார்கள். இதன் பின் corsiccans  இடம் வேலையாள்  போல் இருக்கும் மாலிக் அவனுடைய சிறை வாசம் முடிவதற்குள் எப்படி corsciccans , இத்தாலியர்கள், முஸ்லிம்கள் என அனைவரையும் வென்று ஒரு gangsterஅ  வெளிய வருகிறான் என்பது தான் கதை.

REVIEW :
 A PROPHET  ஒரு அருமையான திரைப்படம் . ஒரு படத்திற்கு DIRECTION ,எடிட்டிங், இசை அனைத்தும் நன்றாக அமைந்தால் எப்டி இருக்கும் என்பதற்கு இந்த படம் நல்ல ஒரு உதாரணம். இந்த படத்தின் இரண்டு முக்கிய கதாபாத்திரங்கள் முறையே மாலிக் மற்றும் CESAR . மாலிக்காக  நடித்திருக்கும் ரஹீம்மின் நடிப்பு மிகவும் அருமை , 19 வயது சிறுவன் முதல் 25 வயது இளைஞன் வரை அந்தந்ந்த வயதுக்குஏற்ற  முதிர்ச்சியையும் நன்றாக வெளிப் படுத்தி இருப்பார் . முதல் முறையாக ரேயபை கொலை செய்ய சொல்லும்போது அதில் இருந்த தப்பிக் க செய்ய இவர் செய்யும் காரியங்களும் ,ரேயபை கொலை செய்ய பயிற்சி எடுக்கும் போதும், CESAR இடம் அடி வாங்கும் போதும் இவரது நடிப்பின் ஆற்றல் நமக்கு தேய்கிறது, cesar  ஆக வரும் arestrup   french  நடிகர் நடிப்பு இந்த படத்தின் ஒரு தூண் என்றே சொல்லலாம் .


A  PROPHET  - நல்ல நடிப்பு+இசை+cinematography +இயக்கம் சேர்ந்த நல்ல ஒரு கலவை.
கண்டிப்பாக பார்க்க வேண்டிய ஒரு திரைப்படம்.

வணக்கம்

வணக்கம் ...


இப்போ எதுக்கு இந்த BLOG .!!!
அதான் தமிழ்ல MOVIES பத்தி தான் ஏற்கனவே BLOGS  மற்றும் WEBSITE களும் இருக்குதே அப்றோம் எதுக்கு இன்னொரு BLOG  .!!!
இதே கேள்வி எனக்குளும் இருக்கு..தமிழ்ல நான் நினைச்சு பார்த்ததைவிட நல்ல நல்ல ப்ளாக்கள் சினிமாவ பத்தி இருக்குஅப்டி இருந்தும் நான் இந்த BLOG   ஆரம்பிக்க காரணம் உலகத்துல பல விதமான மனிதர்கள் இருகாங்க பல வித மான ரசனைகள் இருக்கு , அப்புடி எனக்கு நான் இதுவரைக்கும்  பார்த்து ரசிச்ச படங்கள பத்தி எழுதணும் ஒரு ஆசை அவ்ளோ தான்...
நான் ஒன்னும் பெரிய எழுத்தாளர் கிடையாது என்னால  முடிந்த  அளவு இந்த BLOGல  நல்ல எழுத முயற்சி செய்யுறேன்...

நன்றி...

TAMIL HOBBIT