1/20/2013

A PROPHET

A PROPHET (Un prophèt  )

DIRECTED BY : Jacques Audiard

MUSIC BY : Alexandre Desplat


கதை :

மாலிக் என்ற 19 வயதான ஓர் இஸ்லாமிய சிறுவன் போலிசீரை  அடித்த குற்றத்திற்காக பிரெஞ்சு போலிசால்  கைது செய்ய பட்டு 6 வருடம் சிறை தண்டனை பெறுகிறான். இதன் பின் படம் முழுவதும் அவனது ஆறு வருட சிறை தண்டனை பற்றி சொல்கிறது.
        . பிரான்ஸ் நாட்டில் உள்ள சிறைகள் பற்றி லேசாக பார்த்துவிட்டு மீண்டும் கதைக்குள் செல்வோம். பெரும்பாலும் பிரான்ஸ் நாட்டில்லுள்ள சிறைகள்  corsiccans  மற்றும் முஸ்லிம்கள்  உள்ள கருத்து  வேறுபாடினால் இவர்கள் இடையே இரண்டாக பிரிந்து இருக்கும். அதாவது corsiccans  என்பவர்கள் தனி கூட் டம்மாகவும்  முஸ்லிம்கள் தனியாகவும் இருப்பர். corsicanns  என்பவர்கள் பிரான்ஸ் நாட்டின் கீழ் இருக்கும் ஒரு கோர்சிச்க்கன் தீவை சேர்ந்தவர்கள்.
சிறையில் உள்ளே உள்ள corsiccans  அந்த சிறையை ஆட்சி செய்யும் அளவுக்கு அந்த சிறையில் உள்ள அனைத்து அதிகாரிகளையும் தங்கள் கையில் வைத்து உள்ளனர்.
இப்படி உள்ள பிரான்ஸ் நாட்டின் சிறைக்குள் அடைக்க படும் மாலிக் பெரும்பாலும் தனிமையில் இருக்க ஆசைபடுகிறான்.சிறையில் உள்ள முஸ்லிம்களுடன் இருந்தும் இவன் தனிமையிலே 
இருக்கவே இவன் ஆசை படிக்கிறான்.இந்த சமயத்தில் சிறையில் உள்ள  corsicanns  தலைவனான cesar என்பவனுக்கு சிறையில் முஸ்லிம் பிரிவை சேர்ந்த ரேயப் என்பவனை 1 வாரத்துக்குள் கொல்ல சொல்லி அவனது boss இடம் இருந்து ஆணை வருகிறது. ரேயப் என்பவனை கொல்வதுக்காக எந்த பிரிவிலும் சேராத மாலிக்கை  மிரட்டி ரேயப்பை கொலை செய்ய வைக்கிறார்கள். இதன் பின் corsiccans  இடம் வேலையாள்  போல் இருக்கும் மாலிக் அவனுடைய சிறை வாசம் முடிவதற்குள் எப்படி corsciccans , இத்தாலியர்கள், முஸ்லிம்கள் என அனைவரையும் வென்று ஒரு gangsterஅ  வெளிய வருகிறான் என்பது தான் கதை.

REVIEW :
 A PROPHET  ஒரு அருமையான திரைப்படம் . ஒரு படத்திற்கு DIRECTION ,எடிட்டிங், இசை அனைத்தும் நன்றாக அமைந்தால் எப்டி இருக்கும் என்பதற்கு இந்த படம் நல்ல ஒரு உதாரணம். இந்த படத்தின் இரண்டு முக்கிய கதாபாத்திரங்கள் முறையே மாலிக் மற்றும் CESAR . மாலிக்காக  நடித்திருக்கும் ரஹீம்மின் நடிப்பு மிகவும் அருமை , 19 வயது சிறுவன் முதல் 25 வயது இளைஞன் வரை அந்தந்ந்த வயதுக்குஏற்ற  முதிர்ச்சியையும் நன்றாக வெளிப் படுத்தி இருப்பார் . முதல் முறையாக ரேயபை கொலை செய்ய சொல்லும்போது அதில் இருந்த தப்பிக் க செய்ய இவர் செய்யும் காரியங்களும் ,ரேயபை கொலை செய்ய பயிற்சி எடுக்கும் போதும், CESAR இடம் அடி வாங்கும் போதும் இவரது நடிப்பின் ஆற்றல் நமக்கு தேய்கிறது, cesar  ஆக வரும் arestrup   french  நடிகர் நடிப்பு இந்த படத்தின் ஒரு தூண் என்றே சொல்லலாம் .


A  PROPHET  - நல்ல நடிப்பு+இசை+cinematography +இயக்கம் சேர்ந்த நல்ல ஒரு கலவை.
கண்டிப்பாக பார்க்க வேண்டிய ஒரு திரைப்படம்.

No comments:

Post a Comment