1/20/2013

3-IRON

3-iron


இந்தப் படத்தை நீங்கள் பார்த்து இருப்பீர்கள் , ஒருவேளை பார்க்கவில்லை  என்றல் உடனே பார்த்துவிடுங்கள்  .இது இயக்குனர் kim-ki duk கின் காவியம் . கிம் கி டுக் பல படங்கள் எடுத்து இருக்கிறார் , அதில் அனைத்துமே அருமயாண  படங்கள்  3-iron  மட்டும் எந்த விதத்தில் சிறந்த படம் என்று நீ சொல்கிறாய் என்று நீங்கள் கேக்கலாம் . நான் அதற்கு சொல்லும் பதில் எனக்கு தெரியாது ஏன்னோ  இந்த படம் என் மனதை விட்டு அகலவே இல்லை. நான் இந்த பதிவை படம் பார்த்த உடனே போடுகிறேன் என்று எண்ண  வேண்டாம் , நான் இந்த படம் பார்த்து பல நாட்கள் கழித்து  தான் இந்த பதிவை எழுதுகிறேன்.இதை நான் சொல்வதருக்கு காரணம் இந்த படம் உங்கள் மேல் கொடுக்கும் பாதிப்பு அந்த அளவுக்கு இருக்கும்...

கதை :
Tae -suk  என்பவன் பகல் முழுவதும் தன்னுடைய பைக்கில் சுத்தி கொண்டு பூட்டி இருக்கும் வீடு கதவுகளில் தான் வேலை செய்யும் ஹோட்டல் லின் விளம்பரத்தை ஒட்டி வைப்பான், பின் இரவுகளில் எந்த வீட்டில் விளம்பரம் கிழிக்க படவிலையோ அந்த வீட்டுக்குள் நுழைந்து அந்த இரவை கழித்து  விட்டு மீண்டும் தன்  வேலை (?) யை தொடங்குவான். இப்படி ஒரு நாள் ஒரு வீட்டுக்குள் நுழையும் tae -suk  அங்கே ஒரு பெண்(Sun-hwa) இருப்பதையே  தெரியாமல் அந்த வீட்டுக்குள் அந்த வீட்டின் உரிமையாளர் போல் இருக்கிறான். அந்த பெண் தன்னுடைய கணவனால் சித்ரவதை செய்யப்பட்டு வாழ்க்கையே முடிந்து விட்டது என்று என்னும் பொழுது இந்த tae -suk  கின் carefree  வாழ்க்கை யை பார்த்து பொறாமை கொள்கிறாள் . Tae -suk  தன் தனிமையை முழுதாக அனுபவிக்கும் (!!) பொழுது அவன் Sun-hwaவிடம் மாட்டி கொள்கிறான் . அவன் வீட்டை விட்டு வெளியேரும் பொது அந்த பெண்ணும் ஒரு வலியோடு தான் அந்த வீட்டில் இருக்கிறாள் என்று புரிந்துகொள்கிறான் , இருந்தும் வீட்டில் விட்டு வெளியேறும் tae -suk  மனம் கேக்காமல் மீண்டும் அந்த வீட்டுக்கு வருகிறான் அவன் வரும் பொழுது Sun-hwa  குழித்து கொண்டு இருக்கிறாள் அப்பொழுது tae -suk  தனக்கு பிடித்த பாடலை play செய்து விட்டு அவள் வீட்டின் lawn இல் போய் கோல்ப் விளையாடிகிறான் . அந்த நேரம் Sun-hwa வின் கணவன் வருகிறான் எபோழுதும் போல் அவர்கள் இருவருக்கும் சண்டை வருகிறது அதை பார்க்கும் tae -suk  அவனை தாக்கி விட்டு Sun-hwa வை உடன் கூட்டி  செல்கிறான் . இதன் பின் இவ்விருவரும் பல வீடுகளுக்குசெல்கிறார்கள்  காதல்மெதுவாக மலர்கிறது , ஒரு பிரச்னையில் மாட்டுக்கிறார்கள்  ,tae -suk  ஜெயிலுக்கு போகிறான் , ஜெயில் இல் மனித கண்கள்ளிடம் இருது மறைவது என்னும் திறமையை வளர்கிறான். அந்த திறமையுடன் Sun-hwa வீட்டுக்கு வந்து அவன் கணவனுக்கு தெரியாமல் இருபதோடு இப்படம் முடிகிறது.

இந்த படம் முழுவதும் Kim ki -duk  கே சொந்தம் . இந்த படம் பெரும்பாலான கிம் கி டுக் கின் படங்களை போலவே இதிலும்  வசனங்கள்  கம்மி எந்த அளவுக்கு கம்மி என்றால் படத்தில் tae -suk  க்கு வசனமே கிடையாது , Sun-hwa வுக்கு ஒரே ஒரு வசனம் உண்டு அதுவும் படம் முடியும் பொழுது வருகிறது ,எனக்கு தெரிந்து நான் இப்படி வசனங்களே இல்லாத ஒரு காதல் படம் பார்த்ததே இல்லை அப்புடி இருந்து இந்த படத்தை கிம் கி-டுக்  நம்மளை  ரசிக்க வைக்கிறார் , உணர வைக்கிறார் . கிம் கி-டுக்கின் படங்கள் மனித வாழ்கையின் உணர்சிகள் பற்றி  பேசும். இந்த படமும் அதை பற்றியதே. இந்த படம் எத்தனை முறை பார்த்தாலும் ஒரு புது உணர்வை கொடுக்கும். 

3-iron  படத்தின் trailer  :


இந்த படத்தில் ஒரு அருமையன ஒரு அரபி பாடல் ஒன்று வருகிறது இந்த படம் பிடித்து போக அதுவும் ஓர் காரணம்  . அந்த பாடலின் link  அதையும் ஒரு முறை பார்த்துவிடுங்கள் ..



மிஸ் பண்ணாம பாத்துடுங்க ...
நன்றி 


  

No comments:

Post a Comment