8/02/2015

சோக நாயகர்கள்

  இவ்வுலகில் படைக்கப்பட்ட பாதிக்கு மேற்பட்ட ஃபாண்டஸி கதை காவியங்களில் இன்றி அமையாமல் இருக்கும் ஒரு அமைப்பு சோக நாயகர்களின் வடிவமைப்பு. அந்த டிராஜிக் ஹீரோக்களே கதையை முழுமைப் படுத்துகிறார்கள். கடைசி வரை வெறுக்கப்பட்டும் முடிவில் ரசிகர்களால் கொண்டாடப்படும் கதாபாத்திரங்களாக உருப்பெற்று நம் மனதில் தங்கி விடுகிறார்கள்.
 அப்படி என் மனதில் இருக்கும் சில காவிய சோக நாயகர்களை பற்றிய ஒரு சின்ன பதிவு.

1. கர்ணன்:

                                     மகாபாரதம் என்னும் மிகப்பெரிய நெடுங்காவியம் பல நாயகர்களைக் கொண்டதாக வடிவமைக்கப்பட்டது. கிருஷ்னன்,அர்சுனன், த்ரெளபதி, தர்மன் என கதை நெடுக பல காவிய நாயகர்களால் மூழ்கிக் கிடந்தாலும் ஒரு கதாபாத்திரம் நம் மனதில் ஆழமாக இடம் பிடித்தது என்றால் அது கர்ணன் தான்.

                                  பாண்டவர்களால் முதலில் அவமானங்களை சந்தித்து அவர்கள் மீது வெறுப்போடு வளர்ந்து, பின் அவர்கள் தன் தம்பிகள் என தெரிந்தும் அவர்களுக்கு எதிராக போர்க்களம் புகுந்து அவர்கள் கைகளாலேயே இறக்கிறான் கர்ணன்.
           
                                  
2. கோலும் :

                                     லார்ட் அஃப் தி ரிங்கிஸ் மற்றும் ஹாபிட் நாவல்களிலும், சினிமாக்களிலும் வரும் கதாபாத்திரம். சக்தி வாய்ந்த ஒற்றை மோதிரத்தால் மனம் பிறழப்பட்டு அதற்கு அடிமையாகப் போய்விடும் கோலும் கதாபாத்திரம் முதலாக ஹாபிட் நாவலில் வருகிறது.
           
                                   ஹாபிட் நாவலில் பில்போவிடம் அந்த மோதிரத்தை கோலும்  இழப்பதாக மட்டுமே வருகிறது, மோதிரத்தை பற்றியோ கோலுமை பற்றியோ ஹாபிட் நாவலில் மேற்க்கொண்டு எதுவும் சொல்லப்படவில்லை. லார்ட் ஆஃப் தி ரிங்கிஸின் முதல் நாவலான “The Fellowship of the Ring" இல் மோதிரத்தின் கதையும் கோலுமின் முன் கதையும் விளக்கப்படுகிறது.

                                 கோலும் மோதிரத்தை திருப்பி பெறுவதற்காகவே ஃப்ரோடோவை பின் தொடர்ந்தது என்றாலும்,ஃப்ரோடோவிடம் இடையில் ஏற்படும் நட்புணர்வு, பின் ஃப்ரோடா ஏமாற்றப்பட்டதாக கருதி அவனை பழிவாங்க வேண்டும் என்றே அவனுக்கு பின்னால் வந்து கதையின் ஸ்வாரஸ்யத்தை கடைசி வரை தக்க வைக்க பெரும் உதவியாக இருந்து மிக முக்கியமான கதாபாத்திரம்.
              
                                  கோலுமின் முன் கதையை பீட்டர் ஜாக்ஸன் மூன்றாம் பாகத்தில் தான் சொன்னது என்பது ஜாக்ஸனின் ஆழ்ந்த சினிமா அறிவு. (ஹாட்ஸ் ஆஃப் பி.ஜே).

3. செவெரஸ் ஸ்நேப்.:


                                  கொஞ்சம் டைம் டிராவல் பன்னி (ஞே..) என்னை நீங்க சந்திக்கிற வாய்ப்பு உங்களுக்கு கிடைச்சு. என்கிட்ட நீங்க உனக்கு பிடிக்காத ஒரு கதாபாத்திரம் சொல்லுனு சொன்னா, நான் யோசிக்காம “ஸ்நேப்”னு சொல்லி இருப்பேன்.
              
                                சந்தேகமே இல்லாம நான் ரொம்ப வெறுத்தது ஹாவ் பிளட் பிரின்ஸ் ‘ஸ்நேப்”ஐ தான். குறிப்பா ஆல்பஸ் டம்புல்டோரை கொலை செஞ்சதுக்கு அப்புறம் வோல்டமோர்டுக்கு முன்னாடி இவனை போட்டுத் தள்ளனும் தான் நினைச்சேன்.

                                என் ஒட்டு மொத்த வெறுப்பையும் காதலாக மாற்றிவிட்டது “deathly hallows"இல வரும் ஸ்நேப்பின் முன்கதை. படிக்கும் போதும் சரி, படம் பார்க்கும் போதும் சரி நான் அதிகம் அழுத இடம்(ஹ்ம்ம்) அது தான். அதுவும் நாம ஸ்நேப் கதையை அப்படியே பின்னோக்கி பார்த்தா ஒவ்வொரு இடத்துலயும் அவர் எப்படி ஹாரியை காப்பாத்தி இருக்காருனு பார்க்கும் போது சான்ஸே இல்ல.. தாங்க்ஸ் ஜே.கே.ரெள.

சரி இந்த மூன்று கதாபாத்திரங்களும் இந்த மூன்று கதைகளின் மூலம் தெரிந்தவர்களுக்கு மிகவும் பிடித்தமான கதாபாத்திரங்கள் அதுக்க என்ன காரணமாக இருக்கும். எனக்கு தெரிந்த ஒவ்வொன்றாக பார்க்கலாம்.

1. மூவருக்கும் இருக்கும் யாருக்கும் தெரியாத சோகக் கதைகள்.

2. அவர்களின் இறப்புக்கு பின்னாலே அனைவராலும் அறிப்படுவது, வாழும் பொழுது அனைவராலும் அவமானப்படுத்தபடுவது, இவ்விரு விசயங்களை நாம நம் வாழ்க்கையோடு ஒன்றாகப் பார்க்கிறோம். நாமே அந்தக் கதாபாத்திரங்களோ என்ற உணர்வை சோக நாயகர்கள் நமக்குள் மிக எளிதாக உருவாக்கிவிடுகிறார்கள்.

3. அவர்கள் செய்யும் தவறுகளும் பின்னால நன்மையாக முடியும். இது நாம ஆசைப் படும் விசயம்.

4.வெற்றியிலிருந்து விரட்டப் படுகிறார்கள். நமக்கு  இப்படி நடக்கிறதோ என

தோன்றும் எண்ணங்களில் இதுவும் ஒன்று,

5. அவர்களுக்குள் இருக்கும் ஒரு ரகசியம்.

கிட்டதட்ட நம்மை ஒற்றுப் படைக்கப்பட்ட கதாபாத்திரங்களாக இவர்கள் உருப்பெற்று நிலைப்பதே இவர்களை அனைவருக்கும் மிகவும் பிடித்துப்போக காரண்மாக இருக்கிறது.

கடைசியாக...

ஜான் ஸ்னோ சோக நாயகனா....

கேம் ஆஃப் த்ரோன்ஸில் வரும் ஜான் ஸ்னோ கதாபாத்திரம் ஒரு சோக நாயகனா. இந்த சந்தேகம் எனக்கு முதல் அத்தியாயத்தை பார்க்கும் போதே வந்துவிட்டது. அதற்கு காரணம் முதல் அத்தியாயத்திலேயே அவன் மேல் வைக்கப் பட்டிருக்கும் ரகசியம். அந்த ரகசியமே கதையின் முடிவுக்கு காரணமாகவும் இருக்கலாம்.. பொறுத்திருந்து பார்ப்போம்...

No comments:

Post a Comment