11/13/2013

Mad Detective (San taam) [2007] -- Hong kong

Mad Detective

பைத்தியக்கார துப்பறிவாளன்.


Mad Detective (2007) on IMDb


           

புலனாய்வு, தடயவியல் போன்றவைகள் எல்லாம் 20ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலிருந்துதான் வளர்ச்சி பெற ஆரம்பித்தன. அதற்கு முன் நமது உலகத்தில் கொலை, கொலையை பற்றி ஆராய்வதில் பெரிய அறிவியல் கோட்பாடோ, கண்களோ யாரும் செலுத்தியதில்லை. அதாவது மிக எளிமையாக சொல்லுனும்னா ஒரு கொலை முடிந்தபின் காவல் துறை இரண்டு விடயங்களை மட்டும் தான் தேடும். ஒன்னு மோட்டிவ், இரண்டு கொலைக்கருவி.

இதில் ஒன்னு சரியா கிடைச்சிட்டா போதும். கைது செய்தவனை அடிச்சாவது வாக்குமூலம் வாங்கி கோர்ட்ல ஆஜர் செய்துவிடுவார்கள். அவ்வுளவு தான். அதாவது ஒரு எ.கா. க்கு இன்னைக்கு காலையில நீங்க ஒருத்தர்க்கிட்ட சண்டை போடுறீங்க அவர் மாலை நேரத்தில இறந்து கிடந்தா போலிஸ் நேரா உங்களைத் தான் கைது செய்யும். பின் உங்க கிட்ட எப்படியாவது ஒரு வாக்குமூலத்தையும் வாங்கிடுவாங்க. இது தான் 20ஆம் நூற்றாண்டுக்கு முன்னாடி நடந்துக்கிட்டிருந்த விசயம். இந்த மாறி சரியான் மோட்டிவும் கிடைக்காம, தடயவியல் எனும் அறிவியல் வளராதக் காரணத்தாலும் கண்டுப்பிடிக்க முடியாமல் போன பல வழக்குகள் உண்டு, லண்டைனையே கலக்கிய ஜாக் தீ ரிப்பர் கொலைகளும் கூட அப்படியே தான். ஒரு 20 வருடங்கள் தள்ளி ஜாக் தி ரிப்பர் கொலைகளை செய்ய முன்பட்டிருந்தால் அவன் போலிசிடம் மாட்டிருக்க வாய்ப்புகள் அதிகம்.

இப்படி இருந்த ஒரு உலகத்தையே மாற்றியது ஆர்தர் கொனான் டோயிலின் ஷெர்லாக் ஹோம்ஸ் என்று சொல்லாம். ஏன்னென்றால் அது உண்மையும் கூட. நான் மேலே சொன்ன விசய்ங்களை கவனிங்க 19ஆம் நூற்றாண்டுல யாரும் கொலை நடந்த இடத்திலிருந்து ஆதாரங்களை தேட மாட்டார்கள். அப்படி இருந்த  பொழுது தான் ஷெர்லாக் வந்தார் ஷூ பிரிண்ட்ஸ், சிகரட் துகள்கள், இரத்த மாதிரிகள், துப்பாக்கிகள் பற்றிய ஆய்வு, ஃபிங்கர் பிரிண்ட்ஸ் என பல விசயங்களை அறிமுகம் செய்த்தார். துப்பறிவதை ஒரு அறிவியலாக மாற்றினார் கொனான் டோயில். இப்படி ஒரு அறிவியலை கதைகளில் படித்தவர்கள் நேரில் புலனாய்வதை பார்த்த போது தான் கண்டுபிடித்தார்கள் இன்னும் புலனாய்வுத் துறை வளரவில்லை என்பதை. அதன் பின் ஷெர்லாக்கின் விசிறிகளால் வளர்க்கப்பட்டதே இந்த புலனாய்வு துறை.

ஷெர்லாக் வரவுக்குப் பின் உலகமெங்கும் துப்பறிவு பற்றிய நாவல்கள், திரைப்படங்களிலும் பெரும் மாற்றங்கள் உருவாகின. கதையின் நாயகன் கிட்டத்தட்ட ஷெர்லாக்கின் வடிவிலிருந்தே உருவாக்கப்பட்டார்கள். ஷெர்லாக்கை போன்றே அறிவியல் காரணங்களோடு துப்பறிவதுதான் இவ்வகை புனைவுகளின் அடிப்படை விதியானது. ஆனால் ஷெர்லாக்கை எல்லையை மீறி துப்பறியும் ஸ்டைலைக்கொண்டவன் ஆனால் லாஜிக்கைவிட மனித என்னங்களை நம்பும் ஒரு துப்பறிவாளன் தான் மேட் டிடக்டிவ் படத்தின் நாயகன் முன்னாள் இன்ஸ்பெக்டர் பன்.

இன்ஸ்பெக்டர் பன் ஹாங் காங்கின் மிகச் சிறந்த டிடக்டிவ்ஆனால அவர் ஒரு மன் நேயாளி. தனது சீஃப் ஆபிசர் பனி ஓய்வின் போது அனைவரும் பரிசுப் பொருட்களை தந்துக்கொண்டிருக்க பன் தன் காதை அறுத்து தருகிறான். இப்படிப்பட்டவரை காவல் துறை விலக்கி விடுகிறது, மனைவியும் அவரைவிட்டு போய்விடுகிறாள் ஆனாலும் அவர் மனைவியுடனே இருப்பதாக கற்பனை செய்துக் கொள்கிறார். இது மட்டும் இல்லாமல் இவருக்கு ஒரு சக்தியும் இருக்கிறது ஒவ்வொரு மனிதனின் உள்ளே இருக்கும் அவனது குனங்களை (personalities) இவரால் பார்க்க முடியும். அதாவது ஒருவர் சாதரணமாக இருக்கும் பொழுது ஒருவர், பயப்படும் போது ஒருவர், கோவப்படும் போது ஒருவர் என இவர் கண்களுக்குத் தெரிவார்கள்.

இப்படிப்பட்ட பன் தனது வேலையை விட்டு விலகி ஐந்து வருடங்களுக்குப் பிறகு அவரிடம் இரண்டு நாட்கள் வேலை செய்த இன்ஸ்பெக்டர் ஹோ சந்தித்து இரண்டு வருடங்களாக தீர்க்க முடியாமல் இருக்கும் ஒரு வழக்கில் உதவுமாறு கேட்க. இத்தணை நாள் அடைந்திருந்த பன் அந்த வழக்கை விசாரிக்க ஒத்துக்கொள்கிறார். இது தான் Mad detective படத்தின் கதைச் சுருக்கம்.


மேலோட்டமாக பார்க்கும் பொழுது இது மிகச் சாதரணமானக் கதை தான். பல வருடங்களாக சும்மா இருக்கும் ஒரு அதிகாரியை ஒரு ரூக்கி வந்து தனக்கு உதவுமாறு கேட்ப்பது. இதை நிறைய ஆங்கிலப் படங்களிலும், தமிழ் படங்களிலும் கூட நாம் பார்க்கலாம். ( இதை அப்படியே டிடக்டிவ்வைமாத்தி இசைக் கலைஞர், நாட்டியக் கலைஞர் அப்படி போட்டு பார்த்தீங்கனா நிறைய தமிழ் சினிமா கையில கிடைக்கும்). அப்படிப் பட்ட மாமூலான கதைக்களம். ஆனாலும் இந்த படத்தை ரசிக்க வைப்பது இன்ஸ்பெக்டர் பன்னின் கதாபாத்திரம் தான்.

இந்தக் கதாபாத்திரத்தை புரிந்து கொள்வதற்கே நமக்கு நேரம் பிடிக்கும். இவர் வெறும் மன நோயாளியா, இல்லை இவர் செய்வதற்க்கெல்லாம் எதாவது காரணம் இருக்கானு நாம் சில நிமிடங்கள் ஒரு குழப்ப நிலையில் இருக்கும் பொழுதுதான் தானாகவே இவரின் கதாபாத்திரம் அவரின் செயல்பாடுகளை விளங்கச் செய்யும். இவரின் செயல்பாடுகளை சீக்கிரம் புரிய வைக்க வேண்டும் என்பதற்காக எந்தவித முட்டாள்தனமான விளக்க காட்சிகளை போடாமல் தானாகவே நமக்கு புரிய வைத்திருப்பது மிகப் பெரிய ப்ளஸ்.பன்னாக நடித்திருப்பது சிங் வாங் லு புல்லட் வேனிஸஸ் படத்தில் டிடக்டிவா வருவார்ல அவரே தான், இதுலயும் கலக்கிறுக்கார்.

படம்  ஒரு வித அமைதியான வேகத்தில் செல்கிறது. படம் எந்த நேரத்திலும் தனது வேகத்தையும் குறைக்காமலும் ஒரு நல்லப் படத்தை பார்க்கும் அமைதியையும் தருகிறது. இது இந்த மாறியான வகைப்படங்களில் மிக அரிதாகவே கிடைக்கும். படத்தை இயக்கியது ஜானி டோ மற்றும் கா வே வாய் என்னும் இரட்டையர்கள்.  ஹாங் காங் சினிமா உலகிலிருந்த வந்த சிறந்த இயக்குனர்களின் இந்த இரட்டையருக்கு ஒரு தனி இடம் உண்டு. இவர்களின் படங்கள் அனைத்தும் ஒரு கல்ட் ஸ்டேடஸ் அடைந்தவை.. இந்த இரட்டையர்கள் ஆரம்பித்த தயாரிப்பு குழுமம் தான் “Milkyway Image", ஹாங் காங்கிலிருந்து வரும் இண்டிபெண்டண்ட் படங்களில் பெரும்பாலனவை இந்த குழுமத்திலிருந்து வருபவை தான்.

இந்தப் படத்தை முழுமையான சிறந்தப் படம் என்றெல்லாம் சொல்ல முடியாது. ஏனென்றால் பன்னும் ஹோவும் விசாரிக்கும் வழக்கு பெரிய வித்யாசமான வழக்கென்றெல்லாம் சொல்ல முடியாது. பன் அரை மனி நேரத்திலேயே வழக்கை கிட்டத் தட்ட முடித்து விடிகிறார். இது போன்ற விசயங்கள் வெளிப்படையாகவே இருந்தாலும் இந்தப் படம் கண்டிப்பாக பார்க்க வேண்டியப் படைப்பு. அமைதியான் வேகம் சிலப் படங்களில் மட்டுமே நம்மால் உணரமுடியும் , அதை இந்தப் படம் கண்டிப்பாக உணர்த்தும் என்று நான் நம்புகிறேன்.

படத்தின் முன்னோட்டம்




10/10/2013

12 ANGRY MEN

 நான் சினிமாவை மிக சீரியசாக என்னோட சிறு வயதிலிருந்தே பார்த்துவருகிறேன் ஆனால் அதில் பெரும்பான்மையானது தமிழ் படங்கள் தான் அப்போ அப்போ தெலுகு,மலையாளம், ஹிந்தி படங்கள் குறுக்கே வரும்.ஆங்கிலப் படங்களை பொருத்தவரை எங்க ஊர்ல ரீலிஸ் ஆகுற படங்கள் மட்டும் தான் பார்த்துக்கிட்டிருந்தேன்  அதுக்குப்புறம் டிவிடிக்கள் வந்தது, அதுலையும் நான் ஆங்கிலப் படங்களை வாங்க ஆரம்பிச்சதுனா 2007ல தான்.இதுலையும் ஒரு பிரச்சனை இருந்துச்சு ரொம்ப ஆக்சன், கமெர்சியல் ஹிட் போன்றவை தான் கிடைக்கும்.

இது தான் என்னோட நிலைமை ஆனா இது மாற ஆரம்பிச்சது 2010ல.இதுக்கு முன்னாடி நான் கிட்டதட்ட  தமிழ் அல்லா பிற மொழிகள் பார்க்கிறதையே தவிர்த்திட்டேன்னு சொல்லலாம்( ஹாரி பாட்டரை தவிர).இப்படி இருந்தப்போ தான் ஒரு நாள் தியேட்டர்ல இன்செப்ஷன் பார்க்க நேர்ந்து.அந்த படம் ஏற்படுத்துன பாதிப்பு எதோ என்னை கட்டிபோட்டுட்டு இந்தப் படத்தை போட்டாக்கூட நான் எதை பத்தியும் கவலை படாம பார்ப்பேன் அப்படி ஒரு மாய வலையில சிக்கிக்கிட்டேன்.இதுக்கு பிறகு எனக்கு புரிந்த விடயம் என்னன்னா சினிமா என்பதுலயும் ஒரு தேடல் அவசியம்.நல்ல படங்கள் தவறவிடக் கூடாது என்பது தான் அது.

இந்த சமயத்தில தான் நான் ஒரு லேப்டாப்பும் வாங்க, என் ரூம்ல இருந்த ப்சங்களும், பக்கத்து ரூம்ல இருக்கிற பசங்க கிட்ட இருந்த ஹார்ட் டிஸ்கிலிருந்து பல பல்கான படங்களை நான் பார்க்க ஆரம்பிச்சேன், அதுக்கு பிறகு பதிவிறக்கம் முலம் சினிமாக்கள் பார்க்க ஆரம்பிச்சேன்.அப்படி என் நன்பன் எனக்கு கொடுத்த படம் ஒரு முறை பார்த்துவிட்ட வச்சிருந்தப் படத்தை நான இப்போ மீண்டும் ஒரு முறை திரும்ப பார்த்தேன்.ஒரு சிலப் படங்கள் என்ன தான் முதல் தடவை படு வேகமா,விறுவிறுப்பா இருந்தாலும் இரண்டாம் தடவை நம்மால் முழுதாலாம் பார்க்க முடியாது ஆனா இந்தப் படம் இரண்டாம் முறை பார்க்கும் போதும் விறுவிறுப்பும் குறையாம இருந்தது.அந்த படம் தான்,

12 ANGRY MEN


வழக்காடு மன்றத்தை பற்றி வரும் படங்கள் பெரும்பாலும் சில வகைகளுக்குள் பிரிக்க இயலும்.அதுல அடிக்கடி நாம பார்க்கும் வகைகள் 2. தீர்க்க முடியாத வழக்கை கதா நாயகர் தீர்த்து வைப்பதாகவும் இல்லை தோத்துக்கொண்டிருக்கும் ஒரு வழக்கில் கடைசி நொடியில் கதா நாயகர் ஜெய்பதாகவும் வரும். இதிலும் பல மாதிரியான வழக்கமான (!!) காட்சிகள் வேறு இருக்கும். எதிர் தரப்பு வக்கீல் தன் பிரம்மாஸ்திரமான ஒரு சாட்சியை வைப்பார் குழம்பி போயிருக்கும் நம்மாள் அவர் ஆழ்மனதில் சருட்டென்று ஒரு பொறி தட்டும் அதை வைத்து அந்த பிரம்மாஸ்திரத்தையே பொடியாக்கிவிடுவார். இது போன்று பல காட்சிகள் இருந்தும் அவ்வகைப் படங்கள் கூட சுவாரஸ்யத்துக்கு குறைவில்லாமல் இருக்கும். ஆனால் இந்த மாதிரி எதுவும் இல்லாமலும் சுவாரஸயத்துக்கும் குறைவில்லாமல் வந்தப் படம் தான் 12 Angry men.

படத்தின் ஆரம்பமே வழக்காடி முடித்திவிட்டு நீதிபதி வழக்கின் தீர்ப்பை ஒருவருக்கு ஒருவர் அறிமுகம் இல்லாத 12 ஜூரர்கள் கையில் ஒப்படைப்பதாகத் தான் ஆரம்பமே. அதாவது இதற்கு முன் நாம் பார்த்த இனி பார்க்க போகும் வழக்காடு மன்ற திரைப்பட்ங்களிலிருந்து இது முற்றிலும் மாறுபட்டது என்பதற்கு இதைவிட வேற விடயம் தேவை இல்லை.

வழக்கு என்ன வெனில் நியுயார்கின் சேரி பகுதியில் கொலை நடக்கிறது, அதில் குற்றவாளியாக சொல்லப்படுவது கொலைய செய்யப்பட்டவரின் 18 வயது மகன். கிட்டதட்ட வழக்கு முடிவுடைகிறது. இனி வழக்கின் முடிவு இந்த 12 ஜுரிகளின் கையில் தான். இவர்கள் அந்தப் பையனை குற்றவாளி என்று ஒத்துக்கொண்டால் அந்த பையனுக்கு மரணதண்டனை உறுதி. இனி அவன் குற்றவாளியா இல்லையா என்று இவர்கள் தான் தீர்மாணிக்க வேண்டும்.

அந்த பையன் தான் குற்றவாளி என்பதற்கு சொல்லப்படும் ஆதாரங்கள் யாவெனின், 1. அந்த சிறுவன் கொலை செய்ததை பார்த்தாக சொல்லும் அவன் வீட்டிற்கு எதிர் வீட்டில் தங்கி இருக்கும் பெண்.

2. அந்த பையன் தங்கியிருக்கும் குடியிருப்பில் அவன் வீட்டிற்கு கீழே தங்கியிருக்கும் பெரியவர் , கொலை நடக்கும் பொழுது அச்சிறுவனின் சத்தத்தை கேட்டதாகவும் சில நொடிகளுக்கு பிறகு அவன் கீழே ஓடுவதை பார்த்ததாகவும் கூறுகிறார்.

3. கொலை செய்யப்பட உதவிய கத்தியை அச்சிறுவன் என்னிடம் தான் வாங்கியதாக ஒப்புக்கொள்ளும் கடைகாரர்.

இது தான் அந்த மூன்று முக்கிய ஆதாரங்கள். இதை அந்த 12 நபர்களும் ஒரு மனதாக ஏற்றுக்கொண்டனரா இல்லையா, அச்சிறுவனுக்கு தண்டனை கிடைத்ததா இல்லையா என்பதுதான் மிதீ கதை.

கதாபாத்திர வடிவங்கள் :

 நாம் வெறுமனே உக்கார்ந்து எப்படி ரஜினி,எம்.ஜி.ஆரால் தொடர்ந்து பல வெற்றிப் படங்களை கொடுக்க முடிந்தது என்று யோசித்தால்  நமக்கு தெரியும அதற்கு முக்கிய காரணம் அவர்களின் கதாபாத்திரம் தான். அவர்களுக்கு என்று ஒரு கதாபாத்திரம் எப்பொழுதோஅமைந்துவிட்டது அது அவர்களின் பெரும்பாலான படங்களில் ஒருமாதிரியாகவே வரும். ஒரு ரசிகனாக அவர் படத்தை பார்க்க ஆரம்பித்தால் கதாபாத்திர அமைப்புக்கென்று மிகச் சிரமம் பட வேண்டியிருக்க தேவையில்லை, நம் மனதில் ரஜினி,எம்.ஜி,ஆர்னா இப்படி தான் நமக்கு தெரியும் அதனால நமக்கு அந்த கதாபத்திரத்தின் செய்கையோ அல்லது முடிவுகளுக்கோ தனியாக பல காட்சிகள் அமைக்க வேண்டும் என்று அவசியம் இல்லை.ஆனால் இது மற்ற நடிகர்களுக்கு ஒத்துவராது. கதாபாத்திரம் எவ்வாறானது என்பது மிகச் சீக்கிரம் நமக்கு தெரிய வேண்டும், அப்படியானால் தான் நமக்கு கதாபாத்திரத்தின் நோக்கம் நமக்கு வெளிப்படும்.

கதாபாத்திரங்களின் நோக்கம் நமக்கு எவ்வுளவு சீக்கிரம் தெரியவருகிறதோ நம்மால் மிக வேகமாக கதையிலும்,கதாபாத்திரங்கள் கிட்டையும் ஒரு நெருக்கத்தை அடைய முடியும். அந்த நெருக்கம் தான் கதையை சுவாரஸ்யமாக இட்டுச் செல்லும், அப்படி நெருக்கமான கதாபாத்திரம் கொலை செய்தால் கூட நீங்கள் அவன் பக்க நியாயத்தை தான் உணர்வீர்கள்.அதாவது ஒரு bondஐ நீங்கள் அந்த கதாபாத்திரதும் ஏற்படுத்திக்கீட்டீங்க.

ஆக இந்த மாதிரி சுவாரஸ்யத்தை தீர்மாணிப்பது முக்கிய கதாபாத்திரங்களின் வடிவங்கள் தான்.இந்தப் படத்தை பொறுத்தவரை ஒரு முக்கிய கதாபாத்திரம் என்று யாரையும்சொல்ல முடியாது, இதில் வரும் 12 கதாபாத்திரங்களும் முக்கியகதாபாத்திரங்கள் தான். அனைத்து கதாபாத்திரங்களும் படம் முழுக்க வருகிறது.
ஆனாலும் இந்தக் கதாபாத்திரங்களின் இடையே ஒரு மாற்றத்தை விதைப்பது   ஹென்றி வோண்டாவின் கதாபாத்திரம். மத்த கதாபாத்திரங்களை காட்டிக்கொண்டே காமரா நகரும் பொழுது அது முதல் முறையாக வோண்டாவை காட்டும் போதே நமக்கு புலப்பட்டுவிடும் அவர் குழப்பத்தில் உள்ளார் என்பது. இவ்ளவவு தான் இந்த ஒரு ஷாட்டிலேயே நமக்கு அவர் கதாபாத்திரத்தின் நோக்கமும் புலப்பட்டுவிட்டது. அவருக்கு இந்த வழக்கு நடந்த விதத்திலும்,குற்றவாளி இவன் தானா என்ற சந்தேகம் இருக்கிறது அதை இவர் தான் மற்றவர்களிடம் இந்தக் கேள்வியை எடுக்கபோகிறார் என்பதும் நமக்கு முதல்லயே தெரிந்திருச்சு. ஏன்னா நாம மத்தக் கதாபாத்திரங்களை முதல் தடவை பார்க்கும் பொழுதே அவர்களுக்குள் இருக்கும் களைப்பும், இவன் தான் குற்றவாளி என்பதில் அவர்கள் தீர்கமாக இருப்பதாகவுமே நமக்கு தெரிந்துவிடுகிறது, எப்படியாவது இதை முடிச்சிட்டு போனா போதும் அளவில் தான் அவர்களின் செயல்பாடும் இருக்கிறது,

வோண்டாவின் கதாபாத்திரம் மத்த  11 கதாபாத்திரத்திலிருந்து மாறுபட்டிருந்தாலும் அந்த 11 கதாபாத்திரங்களும் சிறப்பானவையே.இந்த 12 நபர்களையும் நாம் தனியா சிந்திச்சி பார்த்தோம்னா அது எல்லாமே நாம தான் தெரியும்.  நாம பல்வேறு சூழ் நிலைகளில் எப்படி இருப்பமோ அப்படி தான் இந்த 12 பேர்களும் இருக்கிறார்கள்.

கல்லூரிக்கு பரீட்சை எழுத போயிருப்பீங்க ஆனாலும் உங்க மனசு மதியம் நடக்க போகும்  கிரிக்கட் மேட்ச் மேல தான் இருக்கும். எப்படியாவது தப்பிச்சி போயிடாலாம்னு நினைப்பீங்க, பரீட்சைய 1 மணி நேரத்தில் முடுச்சிட்டு கூட ஒடிருவீங்க.  இது எதுக்காக போறீங்க என்பதில் மாற்றம் வரலாம் ஆனாலும் எல்லாருக்கும் இந்த மாறி ஒரு அவசரம் கருதி நாம் செயல்படுவது வாழ்க்கையில் நடப்பதே. இந்த மாதிரி கதாபாத்திரமும் இப்படத்தில் இருக்கிறது. எப்படியாவது இந்த வழக்கை முடிச்சிட்டு இரவு நடக்கும் பேஸ் பால் மேட்ச் போகுறது தான் அவணோட குறிக்கோள். இதை அவன் மேல் தப்பும் நம்மால சொல்லமுடியாது ஏன்னா அது நாம தான்,ஒரு சில நேரங்களில்.

இது ஒரு கதாபாத்திரம் தான் மீதி இருக்கும் 11 கதாபாத்திரங்களும் இது போலவே நமக்குள் ஒரு தொடர்பை ஏற்படுத்திக்கொள்ளும். அது தான் இப்படத்தின் சிறப்பு.

இதில் இன்னொறு விசயம், இங்க  யாருக்கும் இங்கே மற்றவரின் பெயர் தெரியாது அதனால் அவர்களூக்கு வழங்கப்பட்ட ஜுரர் எண்கள் படியே அழைத்துக் கொள்கின்றனர்.

மேலும் இந்தக் கதாபாத்திரங்கள் தங்களுக்குள் பேசிக்கொள்ளும் சில வசனங்களும் செமையாக இருக்கும். அதில் நான் கவனித்த சில..

Juror #10: Bright? He's a common, ignorant slob. He don't even speak good English.
(அந்தச் சிறுவன் சேரியை சேர்ந்தவன் என்பதால அவன் ஒழுங்காக ஆங்கிலம் பேச மாட்டான் என்று ஒருவர் சொல்கிறார்)
Juror #11: [looking up] He *doesn't* even speak good English.

Juror #3: That business before when that tall guy, what's-his-name, was trying to bait me? That doesn't prove anything. I'm a pretty excitable person. I mean, where does he come off calling me a public avenger, sadist and everything? Anyone in his right mind would blow his stack. He was just trying to bait me.
Juror #4: He did an excellent job.

மற்ற விடயங்கள்


படத்தின் மிகப் பெரிய பலம் நடிகர்கள் வோண்டா, ஒரு அமைதியான பெரியவர், கோவப்படும் ஒருவர் என அனைவரும் அவர்களின் கதாபாத்திரத்தின் வடிவத்தை பூர்த்தி செய்யும் விதமாகவே நடித்துள்ளனர். 

இந்தப் படம் ஒரு மேடை நாடக் செட்டப் போலவே இருக்கும், ஒரு அறைக்குள் நடக்கும் கதை அது மேடை நாடகமா இருந்தா ஓகே ஆனா சினிமா ஒளிப்பதிவுனு வரும் பொழுது ரொம்ப கஸ்டம்.இந்தப்படத்தின் ஒளிப்பதிவு கண்டிப்பாகவே அந்த கால கட்டத்திலிருந்து முன்னோடியாக இருந்திருக்கும். டாப் ஆங்கிளில் முதல் சாட்டாக இருக்கட்டும், அதுக்கப்புறம் ரூம்ல நல்லா அகலமா எல்லா கதாபாத்திரங்கள் தெரிகிற மாறி இருக்கும் அது கொஞ்சம் கொஞ்சமா படம் உச்ச நிலைஅடைகிறப்போ எல்லா கிளோசப் காட்சிகளாக மாறியிருக்கும். படம் முழுக்க ஒரு சின்ன ரூமில் வேறு நடக்கிறது. அதுவே மிகவும் கஸ்டமான விசயம்.

இது என்னோட ALL TIME FAVORITEல கண்டிப்பா இந்தப் படம் இருக்கும். வித்யாசமான் முயற்சி மட்டும் இல்லாம இது நல்ல விறுவிறுப்பான வித்யாசமான படம். இந்தப் படமும் வெளிவந்த காலத்தில பெருசா விருதுகளைலாம் வாங்கலை ஆனால் இப்போ இது பல பத்திரிக்கைகளின் சிறந்த 100 படங்கள்ல இது ஒரு இடத்தில கண்டிப்பாக இருக்கு. அது தான் ஒரு சிலப் படங்கள் ஒரு காலக் கட்டத்துக்கானது ஆனா இது எல்லா காலக் கட்டதுக்கும் ஏத்த திரைப்படம்.


//*** இதை பல் பேர் பார்த்திருப்பீங்க பார்க்காதவங்க உடண்டியா பார்த்திருங்க...ஆங்...**//








9/04/2013

ஹாரி பாட்டர். உங்களை குழப்பும் சில கோட்பாடுகள்.

 [ ஹாரி பாட்டர் படிச்சவுங்க, பார்த்தவுங்க, இல்ல ஹாரிய பிடிச்சிவங்க மட்டும் படிங்க]

ஹாரி பாட்டருக்கு உலகம் எங்கும் ரசிகர்கள் அதிகம். அதிலும் என்னை மாறி ஹாரியோட சேர்ந்தே வளர்ந்தவங்களுக்கு ஹாரிய ரொம்ப பிடிக்கும். ஹாரி பாட்டர் புத்தகம் வெளிவரும் போதெல்லாம் உலகம் பூரா திருவிழாவா மாறிரும். ஒரு தடவை ஃபிர்ஞ்ச்ல அஃபிசிய்லான புத்தகம் மொழிமாற்றம் செய்றதுக்கு முன்னாடியே யாரோ ஒரு பையன் எழுதி வெளியிட்டுடான் அப்புறம் என்ன பதிப்பகம் சும்மா இருக்குமா, எப்படியோ அந்த மொழிமாற்த்தை தடை பன்னிடாங்க.



என்னன்னா ஹாரி புத்தகமாவும்,சினிமாவவும் வர வரைக்கும் ரொம்ப ஜாலியா இருந்துச்சு, இப்ப முடிஞ்சிடுச்சு அதுக்காக ஹாரிய சும்மா விட முடியுமா ஹாரிய வச்சு பல fan fictionகள் வெளியாய்க் கொண்டே இருக்கு. ஹாரிப் பாட்டர் புத்தகங்கள் முடிவடையரதுக்கு முன்னாடியே fan fiction கதைகள் வெளிவரும் அதுவும் படு சுவாரஸ்யமா இருக்கும்.இப்போ ஹாரியோட இரண்டாவது மகனான அல்பஸ் பாட்டர வச்சு நிறைய fan fiction வருது.ஹாரியோட கதை முடிஞ்சு 5 வருசத்துக்கு மேல ஆனாலும் ஹாரியப் பத்தி இன்னமும் பேசி கிட்டுதான் இருக்காங்க.

இந்த மாறி fan fictionகள் ஒரு வகைனா இன்னொரு வகை வந்து fan theories. கதைல வர சில விசயங்கள் ஜெ.கே.ரொவ்லிங் சொன்னது மட்டும் இவுங்களுக்கு போதாது அதனால இவுங்களா ஒரு சில கோட்பாடுகளை ஹாரி பாட்டர் புத்தகங்களை வச்சு சொல்றாங்க. அதுல இப்போ நெட்ல அதிகம் பேசப்படுற மூனு கோட்பாடுகளைத் தான் பார்க்கப் போறோம்.


1. எல்லாம் ஹாரியோட கனவு:


அதாவது ஹாரி சின்ன வயசுல இருந்தே தன்னோட சித்தி சித்தப்பாவோட மோசமான வளர்ப்புல பாதிக்கபடுகிறான் அதனால அவுங்க கிட்ட தப்பிக்கிறத்துக்காக ஒரு மாயாஜால உலகத்தை இவனே உருவாக்கிறான். அதனால தான் அவன் அந்த உலகத்தில ஒரு ஹீரோவாக இருக்கிறான்.ஹாரி ஹாக்வார்ட்ஸ்ல அடிக்கடி அடிபடுற மாறி வர காட்சிகள்லாம் அவன் நிஜ வாழ்க்கையில இன்னும் அடிபட்டிகிட்டே இருக்கிறதால வருகிறதாம்.

லிங்க் : http://www.cracked.com/quick-fixes/why-hogwarts-was-all-in-harrys-head-conspiracy-theory/ 

எனக்கு இந்த தியரி பிடிக்கல, நாங்க 7 புத்தகம்,8 படம் முடிச்சு வருவோம் நீங்க அது எல்லாம் கனவுனு சொல்லிவீங்களா. எதோ தமிழ் சீரியல கொடுக்கிற டிவிஸ்ட் மாறி இருக்கு, ஆனா இது ஒரு பாப்புலரான தியரி.

2.ஹாரிக்கு மரணமே கிடையாது...:

 " In the prophecy it states that one must die at the hand of the other...which means Harry potter can never die because Voldemort is no longer around to kill him."

இந்த தியரிய சொன்னது நெட்ல ஹாரிப்பாட்டரோட தீவிர ரசிகரான W.O.M.B.A.T.. அதாவது ஹாரிக்கும் டார்க் லார்டுக்கும் சேர்த்து ஒரு பிராபசி எழுதப் பட்டிருக்கும், அதுல என்ன சொல்லிருப்பாங்கனா ரெண்டு பேர்ல யாராவது ஒருத்தர் இன்னொருவர் கையில இறந்தே ஆக வேண்டும், அதுதான் வோல்டமோர்டை ஹாரி கொனுட்டானேஅப்புறம் ஹாரிக்கி ஏது சாவு ,அப்படி சொல்றதுதான் இந்த தியரி.

லிங்க் :http://imgur.com/gallery/QsXxDWg

இதுவும் படிக்க நல்லாயிருக்கும் ஆனா ஹாரியோட 5ஆவது பாகத்திலதான் இந்த பிராபசிங்கிற மேட்டர சொல்லிருப்பாங்க. அதப் பத்தி சொல்லும் போதே டம்புல்டோர் அதுலாம் உண்மையா இருக்கனும் அவசியம் இல்லைனு சொல்லிருப்பாரு. வோல்டமோர்ட் இந்த பிராபசிய நம்பாம இருந்திருந்தா ஹாரி வோல்டமோர்ட எதிர்த்திருக்கவே மாட்டான். 

ஆனாலும் பிராபசி சொன்ன மாறி தான் நடந்தது, அதனால இந்த தியரியும் ஒரு நல்ல சுவாரசியமான தியரிதான்.


3. ஹெர்மாய்னியும் ஹாரியும் அன்னன் தங்கை...!!!:



நீங்க முதல் இத படிச்சிருங்க...:http://www.cosforums.com/showpost.php?p=2111289

இது வெறும் கோட்பாடுலாம் சொல்ல முடியாது , இது ஒரு ஆராய்சிக் கட்டுரை. இத எழுதின merlin455 உண்மையிலே பாராட்ட வேனும். அவுங்க கொடுத்திருக்கிற விசயத்தில வச்சு பார்க்கும் போது இதுவும் சாத்தியம் தான் தோணுது.

ஆனா என்ன ஒரு விசயத்தை யார் எப்படி வேனும்னாலும் மாத்திரமுடியும்கிறது தான் இந்தக் கோட்பாடோட முக்கியமான் அம்சம். ஹாரிக்கும் ஹெர்மாய்னிக்கும் சகோதர பாசம் இருக்கு ஆனா இந்த தியரி கொஞ்சம் அதிகமாகவே ஆராய்ச்சு பன்னிடுச்சு. ஜெ.கே.வுக்கு ஒரு வேளை இந்த யோசனை இருந்திச்சுசானு அவுங்க கிட்டதான் கேட்கணும்..

எனக்கு இந்த மூனு கோட்பாடுகள்ல பிடிச்சது வந்து இதுதான்.

 சரி இதுல எதுலாம் சரி தப்புனு நீங்களே முடிவு பன்னிடுங்க...

 

9/03/2013

The Shining

சினிமா என்பது ஒரு கலை அல்ல அது பல கலைகளின் ஒன்று சேர்தல் அது நம்மில் எல்லா விதமான பாதிப்புகளையும் மிக இயல்பாகவும வேகமாகவும் பாதிக்க வைத்து விடும். அதனால் தான் சினிமா என்பதன் தாக்கம் உலகம் எங்கும் சாமானியனின் மனதில் ஆனந்தத்தையும் அதிகாரகிள் மீது பயத்தையும் அதனால் செலுத்த முடிகிறது. கலையின் உன்மத்த நிலையாக சினிமாவை பயன்படுத்தியவர்கள் வெகு சிலர். அவர்களில் உலகம் எங்கும் தன் பாதிப்பை அழுத்தமாக விட்டுச் சென்றவர் இயக்குனர் ஸ்டான்லி குப்ரிக்.

அவர் இயக்கிய 16 படங்களில் 14ஐ மாஸ்ட்ர் பீஸ்கள் என்று அமெரிக்க சினிமாவுலகமும், சினிமா ரசிகர்களும் ஏற்றுக்கொண்டுள்ளனர். அவரின் ஒவ்வொரு படங்களும் அவர் எடுத்த மற்ற படங்களிலிருந்து பலவகைகளில் வித்யாசம் படும். அவரின் பேரை சொன்னதும் இவர் இந்த வகை படங்கள் எடுப்பவர் என்றோ, அவர் இந்த மாறி எடுத்தப் படங்கள் தான் சிறந்தது என்றோ யாராலும் சொல்ல இயலாது. மிகச் சுருக்கமாக சொல்லனும் என்றால் அவர் சினிமா இயக்குனர்களில் காட் ஃபாதர்.

ஸ்டான்லி குப்ரிக் இயக்கி 1980களில் மொத்த அமெரிக்காவயும் ஆட்டிப்படைத்த திரைப்படம் தான் தி ஷைனிங்.  இதற்கு முன் வந்த எல்லா ஹாரர் சினிமாக்களிலிருந்து வேறுபட்டு மனித பயத்தையும், மேட்னஸ்யும் அப்படியே பதிவு செய்த படம் தி ஷைனிங்.


இந்தப் படம் ஸ்டீபன் கிங் எழுதிய “தி ஷைனிங்” என்ற நாவலில் இருந்து தழுவப் பட்டது.தி ஷைனிங் நாவலை பற்றி கிங் குறிப்பிடும் பொழுது இப்படி சொல்லுகிறார்.

“Sometimes you confess. You always hide what you're confessing to. That's one of the reasons why you make up the story. When I wrote The Shining, for instance, the protagonist of The Shining is a man who has broken his son's arm, who has a history of child beating, who is beaten himself. And as a young father with two children, I was horrified by my occasional feelings of real antagonism toward my children. Won't you ever stop? Won't you ever go to bed? And time has given me the idea that probably there are a lot of young fathers and young mothers both who feel very angry, who have angry feelings toward their children. But as somebody who has been raised with the idea that father knows best and 'Ward cleaver' on 'Leave it To Beaver,' and all this stuff, I would think to myself, Oh, if he doesn't shut up, if he doesn't shut up. . . . So when I wrote this book I wrote a lot of that down and tried to get it out of my system, but it was also a confession". 

                                        இந்தக்கதையை ஸ்டீபன் கிங் தன் மன நிலை மீது அவரே கொண்டக் கோவத்தை எப்படியாவது விட்டு தள்ளிவட வேண்டும் என்பதால் அவர் தன் கோவத்தை முழுக்க இந்த நாவலில் எழுதிவிட்டார். ஆனால் ஸ்டான்லி குப்ரிக்கு அந்த மாறியான மன நிலையில் இல்லை கிங்கின் கதையிலிருந்து இந்தப் படத்தை பல இடங்களை மாற்றியிருக்கிறார். அதை குப்ரிக் ஸ்டீபன் கிங்கிடிம் இந்தப் படத்தில் வழியாக ஒரு மிகச் சுவாரசியாமகவே சொல்லியிருப்பார், நாவலில் கதையின் நாயகன் ஜாக் டோரண்ஸ் சிவப்பு நிற செவ்ரோலே கார் ஓட்டுவதாக இருக்கும் ஆனால் குப்ரிக் முதல் ஷாட்டிலேயே நாயகன் மஞ்சள் நிற செவ்ரோலே கார் ஓட்டுவதாக காட்டியிருப்பார், அதோடு இல்லாமல் படத்தின் ஒருக் கட்டத்தில் ஒரு சிவப்பு நிற செவ்ரோலே கார் ஒரு லாரியில் அடியில் சிக்கி நஞ்சிருக்கும் அது 20 நொடிகளாவது நம் பார்வையில் இருக்கும். இது குப்ரிக் கிங்கிடும் இது உன் படம் இல்லை என் படம் என்பதை  நக்கலாக காட்டிய விதம்.

படம் ஜாக் டோரண்ஸ் ஒவர் லுக் ஹோடலின் குளிர் கால காப்பாளராக வேலை செய்வதற்காக வரும் பொழுது ஆரம்பமாகிறது.  ஓவர் லுக் ஹோட்டல் குளிர் காலங்களில் அதிக பனி பொழிவதால் அந்த காலத்தில் யாருமே இல்லாமல் மூடி வைக்கப்படும். அந்த இடைப்பட்ட காலத்தில் ஹோட்டலை மேற்பார்வை செய்வதற்காக டோரண்ஸ்,அவர் மனைவி,மகனோடு ஹோட்டலுக்கு வருகிறார். ஜாக் டோரண்ஸ்க்கு நாவல் எழுத வேண்டும் என்று பல நாட்கள் ஆசை அதை இந்த தனிமையில் செய்துவிடலாம் என்று ஆசைப் படுகிறார்.

கதைக்கு மேலும் செல்லும் முன் இந்த ஹோட்டலுக்கு வரும் முக்கியக் கதாபாத்திரங்கள் எப்படி பட்டது என்று பார்ப்போம்.
ஜாக் டோரண்ஸ்:
 ஆசிரியராக இதற்கு முன் வேலை பார்த்தவர். தன் மகனை குடித்து விட்டு ஒரு நாள் அடித்திருக்கிறார். பின் ஒரு நாவலை எழுதியேயாக வேண்டும் என்று நினைப்பவர். இதற்கு அவர் குடும்பமும்,வாழும் சூழ் நிலையும் காரணம் என்று நினைப்பவர்.இதிலிருந்து தப்பிப்பதற்காகத் தான் இவர் ஹோடலுக்கு வருகிறார்.

டானி டோரண்ஸ்:
ஜாக்கின் மகன். இவனுக்கு ஒரு வித சூப்பர் பவர் இருக்கிறது அது தான் “ஷைனிங்”. ஷைனிங் என்பது ஒரு சில மனிதர்கள் தங்கள் மனதின் மூலமே தொடர்பை ஏற்படுத்தும் ஒரு சக்தி. குழப்பாம சொல்லனும்னா, ஷைனிங் சக்தி உள்ள இருவர் தங்கள் மனதின் மூலமே பேசிக் கொள்ளமுடியும், மற்றவரின் மனதை புரிந்துக் கொள்ள முடியும். இது மட்டும் இல்லாமல் ஒரு இடத்தில் ஏற்கனவே நடந்ததையும் அறிய முடியும். மேலும் இவனுக்கு டோனி என்ற கற்பனை நன்பன், இவன் டானியின் எதிர்காலம், எதிர்காலத்தில் என்ன நடக்கும் அவன் என்ன பார்க்கபோகிறான் என்பதை முன்கூட்டியே டோனியின் மூலம் டானி அறிந்து கொள்வான்.

வெண்டி டோரன்ஸ்:
ஜாக்கின் மனைவி, கனவனை மிகவும் நேசிப்பவள், கொஞ்சம் பயந்தவள், அவளுக்கு ஒரு நடுக்கம் எப்பொழுதும் இருந்துக்கொண்டே இருக்கும்.

டிக் ஹாலரண்ட்:
ஓவர் லுக் ஹோட்டலில் சமையல் கலைஞராக பனிபுரிபவர், இவருக்கும் சைனிங் திறன் உண்டு. படத்தின் ஒரு பகுதியில் டானியின் மூலம் இவர் அங்கே தவறு நடப்பதை உணருகிறார்..சரி கதைக் குள் மீண்டும் நுழைவோம்.

இங்கே வரும் ஜாக் டோலரண்ட் மற்றும் குடும்பம் தனிமையில் சிக்கிக் கொள்கிறது. அதுவும் ஜாக் இதனால் அதிகம் மாறுபடுகிறார். மனைவியிடம் எரிந்து விழுகிறார். இது போல் இவர் மன நிலை மாறும் பொழுது டானிக்கு ரூம் 237ல் ஏதோ தவறு இருப்பது போல அவனுக்கு தெரிகிறது பிறகு அவன் கன் முன் இரண்டு சகோதிரிகள் (இந்தக் ஹோட்டலில் இதற்கு முன் வேலை செய்த காப்பாளர் தனிமையில் பைத்தியமாகி கொன்றவற்களின் ஆவி(?)) அடிக்கடி தோண்றுகிறார்கள். இதற்கு பின் அந்த ஹோட்டலில் மதியிழந்த ஜாக் அந்த ஹோட்டலில் பழைய ஆவிகளை சந்திக்கிறான் பின் அவர்கள் சொல்வது போல் வெண்டியையும் டானியையும் கொல்ல முடிவெடுக்கிறான். பின் டானியும், வெண்டியும் எப்படி தப்பிக்கிறார்கள் என்பது தான் கதைச் சுருக்கம்.

இதை சாதரனமான ஹாரர் சினிமாவாக நம்மால் வகைப்படுத்த இயலாது ஏன்னென்றால் சூப்பர் நேசுரல் காட்சிகள், தலைவிரி கோலமாக பேய் பின்னாடி நிற்பது, நாற்காலிகள் ஆடுவது போன்ற மாமூலான காட்சிகள் இதில் கிடையாது.அந்த மாறி காட்சிகளை மிக நேர்தியாக கிண்டலும் செய்வார். உதாரணமாக சொல்ல வேண்டும் என்றால் வெண்டி தன் கனவர் ரொம்ப நேரமாக வேலைப் பார்க்கிறாரே என்று அவனிடம் பேச வருவாள், அப்பொழுது ஜாக் அவளை மெதுவாக பேச ஆரம்பித்து தாலித்து விடுவார், இதில என்ன ஹாரர் இருக்குனா ஜாக்கோட முகமே ஹாரர் தான் இருந்தாலும் இந்த சீன்ல முதல்ல ஜாக் வெண்டிட பேசுற சாட் நல்ல நீளமா வரும் அப்போ பின்னாடி ஒரு நாற்காலி இருக்கும், அப்புறம் ஷாட் வெண்டிட போயிட்டு ஜாக்கிட்ட வரும் போது அந்த நாற்காலி இருக்காது.இத காட்டும் போது இதுக்கு முன்னாடி வந்தப் படங்களில் ஒரு கீரிப்பி இசையாவது போட்டிருப்பாங்க ஆனா இந்தப் படத்துல அது மாறி எதுவும் இருக்காது ரொம்ப யதார்தமா அந்த சீன் இருக்கும். அதாவது இந்த ஹோட்டலில் ஒரு கெட்டது இருக்கு ஆனா அதை இந்தக் கதாப் பாத்திரங்கள் உணரலை.



இன்னொறு காட்சியில் டானி ஒரு ஹெக்சகன் டிசைன் கார்பெட்டில் உக்கார்ந்து விளையாடுவான், அப்பொழுது ஒரு பந்து எங்கிருந்தோ அவனை நோக்கி வரும், அதன் பின் டானி எந்திரித்தவுடன் அந்த டிசைன் மாறியிருக்கும்.


இது எனக்கு தெரிஞ்சு குப்ரிக் இதுக்கு முன் வந்த ஹாரர் படங்களில் இருக்கும் மாமூலான காட்சிகளை கேலி செய்வதாக உள்ளது. மற்ற படங்கள் மக்களை பயமுற்த்த வேண்டும் என்பதற்காக ஒரே காட்சிகளை திரும்ப திரும்ப பயன்படுத்துகிறது என்பதை காட்சியாக்கம் செய்திருக்கிறார். 

இந்தப் படத்தில் கிடைக்கும் ஒரு திரில் ஃபீல் எத்தனையோ பேய் படங்களில் கிடைப்பதில்லை. குறிப்பாக ஜாக் கோடாரியை வைத்து கதவை உடைக்கும் காட்சி அப்பொழுது அடுத்த அறையிலிருந்து வென்டி கத்தும் பொழுது கிடைக்கும் ஒரு திரில் . சான்ஸே இல்ல.

குறிப்பாக நிக்கல்சனின் நடிப்பும், நூவாலின் நடிப்பும் மட்டுமே நம்மை பயத்தில் மூழ்கடிக்க செய்துவிடும். மனிதனின் மேட்னசை நிக்கல்சனைப் போல் வேறு யாராலும் காட்ட முடியுமா என்று தெரியவில்லை.மணிதர் நிஜ வாழ்க்கையிலும் இப்படிதான் இருப்பாரோ..


மேலும் படம் ஆரம்பத்தில் ஹெலிகாப்டர் ஷாட்ல ஜாக்கோட காரை அப்படியே தொடர்வது  மாறி சீன் அப்போ ஒரு இசை,எதோ நாம் ஒரு வித மாய உலகத்திலிருந்து இதில் பயனச் செய்பவனுக்கு என்ன தான் ஆகிறது என்று பார்போமே என்ற உணர்வைத  தரும்.படத்தில் பல இடங்களில் திரில் தருவது இசை தான்.

 இந்தப் படுத்துல வர காட்சிகளுக்காக முதல் முதலாக ஸ்டெடி(steady)  கேமரா தயாரிக்கப் பட்டு உபயோகிப்பட்டது. இது மத்த குப்ரிக்கின் படம் போலவே இதுவும் டெக்னிக்கலான அந்தக் காலத்தில் ஒரு முன்னோடி.


மேலும் நன்பர்கள் மூலம் தெரிந்துக்கொண்டது இந்தப் படம் முழுவதும் CENTER FRAME COMPOSITION  என்னும் முறையை முழுக்க பயன் படுத்தப் பட்டுள்ளது. 


ஒரு விதமான மாய உலகில் சிக்க தயாரானால், நீங்கள் கண்டிப்பாக இந்தப் படத்தை பார்க்கலாம். ஆனால் இந்தப் படத்தில் அதோ பாரு பேய், பின்னாடி பிசாசு நிக்குதுனு எந்த ஒரு காட்சியும் இருக்காது.






8/31/2013

இரண்டாம் உலகம். படம் எதை பற்றியதாக இருக்கும்?

 இது நான் கடல் படத்துக்கு பிறகு ஒரு படம் எப்படி இருக்கும் என்று எழுதவிருக்கிறேன். நான் கடல் படத்தின் முன்னோட்டத்தை பார்த்து எழுதிய ஒரு சில விசயங்கள் அந்தப் படத்தில் இருந்தது எனக்கு சந்தோசம் .அதற்கு பிறகு நான் இப்பொழுது செல்வராகவனின் “இரண்டாம் உலகம்”. செல்வாவை பாராட்ட வேண்டும், இதற்கு முன் ஒரு ஃபாண்டஸி எடுக்கிறேன் என்று சூடு போட்டுக்கொண்டாலும் மீண்டும் அதே வகையில் மிண்டும் ஒரு படம் எடுத்திருக்கிறார். அதனால் அவரோட முந்தியப் படத்தின் தவறுகளை நிவர்த்தி செய்திருப்பார் என்ற நோக்கில் எந்தவொரு prejudice இல்லாமல் இந்தப் படத்தின் முன்னோட்ட காட்சியையும், நிழற்படங்களையும் அனுகுவோம்.


இந்த ரெண்டு போஸ்ட்ர் வச்சு பார்த்தா இந்தக் கதை எதோ இரண்டு வெவ்வேறு காலக் கட்டத்தில் நடக்கும் இருவரின் கதை என்பது போல இருக்கும். ஆனால் இந்தப் படத்தின் முன்னோட்டக் காட்சி இந்த சாத்தியத்தை  முழுமையாக தவிர்கிறது. 
இந்தப் படத்தின் முன்னோட்டம் :இரண்டாம் உலகம் டிரைலர்

 முன்னோட்டத்தில் காட்டப் பட்டிருக்கும் காட்சிகளில் ஒரு சில இடங்களில் ஆர்யாவின் நடிப்பு கொஞ்சம் தேவைக்கு தூக்கலாகவே இருக்கிறது. அது நாம் படத்தை முழுமையாக பார்த்தபின்பு விவாதிக்க பட வேண்டிய ஒன்று என்பதால் அதை இப்படியே விட்டு விடுகிறேன்.இந்தப் படத்தின் முன்னோட்டத்தை பார்த்தப் பின் இரண்டு விதமாக இந்தக் கதை இருக்கலாம் என்ற சாத்தியக்கூறுகள் இருக்கு . இவை வெறும் சாத்தியமே அது அப்படியே அந்தப் படத்தில் வரும் என்பதற்க்கு எந்த விதமான் உத்திரவாதமும் இல்லை. சரி எனக்கு தோன்றிய இரண்டு விசயங்கள் இதோ.

1. ஆர்யாவோ, அனுஷ்கா இருவரும் காதலித்து பிரியும் சூழ் நிலையில், இவர்கள் இருவரில் யாரேணும் ஒருவருடய ஃபாண்டஸி உலகத்தில் ஒருவர் நுழைந்து அந்தக் காதலை புரிய வைப்பது. ( Paprika, inception மாறி இருக்கலாம்) இந்த சாத்தியத்தை தவிர்க்க முடியவில்லை.ஏன்னென்றால் ஆர்யாவுடய கதாப் பாத்திரம் விஞ்ஞானியாகத் தான் தெரிகிறது.

2. வேற்றுகிரகம். இது என்னோட அபிமானம். ஆர்யாவும் அனுஷ்காவும் வேற்றுகிரகத்தில் இருக்கும் இன்னொரு காதல் ஜோடிகளுடன் காதலால் இனைக்கப் படுகிறார்கள். இதற்கு விஞ்ஞான் பூர்வமாக சாத்தியம் இருக்கிறது. ஐன்ஸ்டினின் தியரி ஆஃப் எவ்ரிதிங்,  அவர் இறந்த பின் ஐன்ஸ்டினால் நிருபனம் செய்ய் முடியாத அந்த தியரியை பலர் நிருபனம் செய்ய முற்படும் போது நம் உலகில் 11 dimensionகள் இருப்பது, நம் உலகை போண்ற ஒரு மாற்று கிரகம் இருப்பது முழுக்க சாத்தியம் என்று நிருபனம் செய்திருக்கிறது. ஆனால் இந்த இரண்டு உலகத்துக்கும் இடையில் எது பாலமாக இருக்கிறது, எப்படி இந்த இருவரும் அந்த உலகத்தில் இருக்கும் இருவருடன் பினைப்பு ஏற்படுகிறது.எல்லாம் அந்தப் படத்தை பார்த்த பின் தான் வெளிச்சம்.

இதற்கு மேல் பல சாத்தியங்கள் இருக்கு ஆனால் அது தேவையில்லாமல் ஒரு அதீதமான எதிர்ப் பார்ப்பை அதிகரிக்கும் என்பதாலும், உங்கள் மனதில் இதைவிட பல நல்ல அபிமானங்கள் இருப்பதாலும் நான் இத்தோடு முடித்துக் கொள்கிறேன்.



7/21/2013

Mariyaan -- Movie Review

மரியான் 

 

இந்த படத்தோட டிரைலர் நமக்கு கொடுத்த உணர்வைக்  கூட  இந்தப் படம் தறவில்லை என்பது தான் உண்மை. டிரைலர் சுவார்சயம்மா இருப்பதற்க்கு எவ்ளோ உழைச்சாங்களோ அந்த அளவுக்குகூட  திரைக்கதைல உழைக்கலைங்கிறது தான் உண்மை.மிக அழகான ஓளிப்பதிவு,இசை இருந்தும் படத்தோட திரைகதைல ஒசோன்ல இருக்கிறத விட பெரிய ஓட்டை இருக்கிறதுனால படம் பெரும்பான்மையான மக்களுக்கு மனதில் ஒட்டாமல் இருக்கிறது.

படத்தோட கதை இது தான். தமிழ் நாட்டுல இருக்கிற கடலோர கிராமமான நீராடில மீனவனா சந்தோஸமா வாழ்க்கையா கழிக்கிறாரு மரியான், அந்த மரியானயே சுத்தி சுத்தி வர அவரோட காதலி பனிமலர் (பார்வதி). முதலில் தன் மனதில் காதல் இருந்தும் அதை பனிமலரிடம் ஒத்துக்கொள்ளாமல் இருக்கும் மரியான், பின் அவளோட காதலை உணர்ந்து(!!!) ஒத்துக்கொள்கிறார். இதன் இடையே பனிமலரை விரும்பும் வில்லன் தீக்குரிசி, பனிமலரின் தந்தை இவனிடம் வாங்கின பனத்திற்க்கு பதிலாக பனிமலரை தனக்கு கல்யானம் செய்து தரும் படி கேக்கிறான். பனிமலரை தீக்குரிசியிடம் இருந்து காப்பாத்துவதற்க்காகவும், இதற்கு இடையில் இலங்கை கடற்ப்படையால தன் நன்பன் சுட்டுக்கொல்லப் படுவதாலும் ஏற்படுகிற விரக்த்தியால் ஆப்பிரிக்காவில் உள்ள் எண்ணெய்க் கிடங்கில் வேலைக்கு செல்கிறார் மரியான். பின் ரெண்டு வருடம் கழித்து ஊருக்கு ஒரு வாரத்தில் திரும்பி வர இருக்கும் நேரத்தில் சூடான் தீவிரவாதிகளால் கடத்த்ப்படுகிறார் , அவர்களிடம் இருந்து மரியான் எப்படி தப்பித்தார் என்பது தான் கதை.

படத்தின் மிகப்பெரிய பிரச்சனை படம் திரைக்கதை அமைப்புத் தான். கதை அருமையான  ஒன்று, படத்தில் பல பிரச்சனைய அலசுவதற்க்கு ஏற்றமாறி  பல வாய்ப்புகள் இருக்கு. மீனவர் பிரச்சனை இருக்கு, வெளி நாட்டில் வேலைப் பார்க்கிறவுங்களோட பிரச்சனை இருக்கு, சூடான் நாட்டுல பல பிரச்சனைகள இருக்கு தெற்கு சூடான் ரெண்டு வருடத்துற்க்கு முன் தான் விடதலை பெற்றது அந்த பிரச்சனை இருக்கு. ஆனா இதுல ஏதாவது ஒரு பிரச்சனையை மையப்படுத்தி இருந்திருந்தாலே படம் நன்றாக இருந்து இருக்கும்.ஆனால் படத்தில் எதுவும் சொல்லப் படவில்லை.

படத்தின் முதல் பகுதி முழுவதும் மரியான் பனிமலர் காதலை சொல்கிறது. நாம் பல முறை பார்த்த தமிழ் சினிமாவோட ஃபார்முலா காதல் காட்சிகள் (குறிப்பா விஜயகாந்த் படத்துல வரும்) , அதனால் இந்த படத்துக்கு வந்து இருக்கக் கூடாதோனு நினைக்கிற அளவுக்கு ரொம்ப தொய்வா இருக்கு படத்தோட முதல் பகுதி. இடைவேளைக்கு ஐந்து நிமிடம் முன்னாடி சூடான் நாட்டு தீவிரவாதிகள் வந்து தனுஸ் அண்ட் கோவ கடத்திட்டுப்போறாங்க.

படத்தோட கதை ரெண்டாம் பகுதில தான் ஆரம்பிக்குது ஆனால் அதுலயும் ஒரு தெளிவு இல்லாமலே படம் நகர்கிறது. ஆப்பிரிக்கா தீவிரவாதிகள் எதுக்கு கடத்துகிறார்கள், அவர்களின் நோக்கமென்ன என்று எதுவும் சொல்லப்படவில்லை.படத்தின் ஒரே ஆறுதல் கடைசி இருபது நிமிடங்கள் தான். 

படத்தை பார்த்துட்டு படத்துல இசை, ஓளிப்பதிவு எல்லாம் சூப்பரா இருக்குனு சொல்றாங்கனா படத்தோட இயக்குனர் தன்னோட வேலையை ஒழுங்கா செய்யலைனு தான் அர்த்தம். எனக்கு ஒரு படம் ரொம்ப பிடிச்சிடிச்சுனா முதல் முறை நான் இசை, ஓளிப்பதிவு இன்னப் பிற விசயங்களை கவணிக்க மாட்டேன், ஆனால் இந்த படத்துல நான் முதல் தடவை பார்க்கும் போதே மார்க் கோனிக்க்ஸோட ஓளிப்பதிவை பார்த்துட்டு படத்தை கவனிக்க மறந்துட்டேன். மார்க் கோனிக்க்ஸ் ஃப்ரேம்களில் கவிதைகள் வடித்து இருக்கிறார். இதில் இயக்குனர் பரத்துக்கும் பங்கு உண்டு என்றாலும் அவர் திரைக்கதையில் கோட்டை விட்டதால் அவரை பாராட்ட முடியவில்லை. ஏ.ஆர்.ரஹ்மானோட இசையில கடல் ராசாவும், நெஞ்சே எழு, ஒரு சில இடங்களில் பின்னனியை தவிர்த்து ஒகே ரகம் தான். யுவன் குரல்ல கடல் ராசா பாட்டு ஏ.ஆர்.ஆரோட பிரில்லியன்ஸ்.

மொத்த படமும் நடிகர்களோட நடிப்பில் தான் பயனிக்கிறது. இது தனுஸோட மிக சிறந்த நடிப்பில வந்தப் படம். படம் முழுக்க மரியான் எப்படி பட்டவன்கிறதுல சிறு பிசுகே இல்லாம செய்து இருக்கிறார், அதுவும் அவரோட ஸ்டைலில். தனுசுடன் சூடானில் மாட்டிக்கொள்ளும் ஜெகனும் நன்றாக நடித்து இருக்கிறார். பார்வதி கண்டிப்பாக தமிழ் சினிமாவில் ஒரு நடிகையாக இந்தப் படத்தின் மூலம் நின்றுவிட்டார். சலீம் குமாருக்கு பெரிதா ரோல் இல்ல மேலும் அவருக்கு குடுத்து இருக்கிற டப்பிங் கேக்கிற மாறி இல்ல.

படத்துல மிகவும் ரசிக்க கூடிய இடங்களும் இருக்கு. தனுஸும், ஜெகனும் பல நாட்கள் சாப்பிடாமல் இருந்து விட்டு சாப்பாடு இருப்பது போல  நினைத்துகொண்டு அவர்கள் சாப்பிடுவது, தனுஸ் தப்பித்துவிட்டு பல நாட்க்களாக சாப்பிடாததால் அவருக்கு வரும் hallucinations.      அந்த hallucinations தான் அவரின் காதலியாக வந்து அவரை காப்பாத்தும், மிக அழகான காட்சியது.இந்த இடங்களில் மட்டும் தான் இயக்குனர் தெறீகிறார்.

இயக்குனர் தவிற மத்த எல்லாரும் நல்லா வேலை செய்து இருந்தாலும் படத்துக்கு மிக முக்கியம் கதையும், இயக்கமும் தான் என்பதை உணர்த்தி உள்ளப் படம்(!!).

மரியான் -- கண்டிப்பா அனைவரின் உழைப்பிற்க்காக ஒரு முறை பார்க்கலாம்.

7/17/2013

Delhi Metro cctv shame....

டெல்லி மெட்ரோ cctv அவலம்.
எட்வர்ட் ச்நோவ்டேன் அமெரிக்க அரசு மக்களை இன்டர்நெட் மூலம் வேவு  பார்கிறது என்று அறிவித்தவுடன் அவரை கைது செய்ய அமெரிக்க அரசு துடித்தது அனால் அவர் அங்கே இருந்து ஹாங்காங் போய் இந்தியாவிடம் அடைக்கலம் கேட்டு இப்போ அவர் ரஷ்யாவிடம் அடைக்கலம்  கேட்டு இருக்கிறார்.

இது ஒரு புறம் இருக்க இத வச்சு நடந்த விவாதங்கள் மிகவும் வருத்ட்ப்படவைத்தது. ச்நோவ்டேன் செய்தது தவறு தான் என்று அமெரிக்க ஊடகங்களே சொன்னது மிகவும் வருத்தத்துக்கு உரியது. அனால் ஒரே சந்தோசம் இங்க்லாந்து மக்கள் இந்த maas surveillance க்கு எதிர்ப்பு தெரிவசச்சது தான்.



இந்தியா ச்நோவ்டேன் க்கு அடைக்கலம் குடுக்கல அது நம்ம நாட்டோட வெளியுறவு கொள்கைக்கு எந்த வித மாதிப்பும் செய்ய கூடாது என்பதற்கு அந்த முடிவை எடுத்து இருக்கலாம். ஆனால் விஷயம் அது இல்ல ஐந்து நாட்களுக்கு முன்னாடி டெல்லி மெட்ரோ ரயில்க் குள்ளே ஒரு ஜோடி யாருமே இல்லாத தனிமையில் முத்தம் இட்டுக் கொள்கின்றனர். அந்த தனிமையை டெல்லி மெட்ரோ ரயில் உள்ளே உள்ள கேமரா வழியாக cctvயில் பார்த்து அதை போர்னோ தளங்களில் வெளியிட்டு உள்ளனர்.

யோசிச்சு பாருங்க எது எவ்ளோ பெரிய அசிங்கம், ஒரு ஜோடி தனிமையில் இருப்பதை ஒரு அரசின் கேமரா வழியாகவே போர்னோ தளங்களில் வெளியுடுவது. இந்த செய்தி வெளியாகி ஐந்து நாள் ஆகியும் பெரிதாக ஒரு தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை, டெல்லி மெட்ரோ  எதிராக எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்  படவில்லை. இதை விட அசிங்கமாக மக்கள் அந்த ஜோடியை கிண்டல் செய்கிறார்கள்.

இங்கே அவர்கள் செய்தது தவறா இல்லையா என்றே பார்க்கிறார்களே தவிற அந்த மெட்ரோவில் வேலை செய்யும் அரசு ஊழியரின் தவறை யாரும் உணரவில்லை. நமது பாதுகாப்பிற்காக ஏற்பட்தப்பட்ட ஒரு பொருளை நமக்கு எதிராகவே பயன்ப்  படுதப்பட்டுளது  என்பதை மக்கள் சரியாக உனராததைத் தான் இது உனர்த்துகிறது.
டெல்லியில் ஒரு பெண் பாலியல் பலாத்கார்ம் செய்யப்ப்ட்ட போது வந்த கோவம் இங்கே ஏற்படாதது மிகவும் வருத்ததுக்குரியது. தனி மணித ஒழுக்கம் என்கிற பெயரில் மக்கள் இங்கே நடந்த அவலத்தை கேள்விக் கேட்க மறுக்கின்றனர்.இந்த மாயையில் இருந்து மக்கள் வெளியே வர வேண்டும். இது நம்மை போன்ற மக்களுக்கு இந்த நாடு எந்த அளவுக்கு சுதந்திரம் அளி(ழி)த்து இருக்கிறது என்பதற்க்கான கேள்வியாகும் இது.இந்த கேள்விக்கு மக்களே தப்பா பதில் சொல்லும் போது தான் ரொம்ப வருத்தமாக இருக்கு.