கொரூரமான காட்சிகள், அருவாள் வெட்டு இது இருந்தால் அது வித்யாசமான படைப்பு என்று இருக்கும் தமிழ் சினிமாவின் பக்கத்தில் இருக்கும் மலையாளத்தில் உண்மையிலே வித்யாசமான படைப்புகள் வந்து கொண்டு இருக்கின்றன .அதற்கு ஒரு எடுத்துக்காட்டு இந்த chapters திரைப்படம். மிக எளிமையான ஒரு கதை களத்தை எடுத்துக்கொண்டு திரைகதையின் ஜாலத்தின் மூலம் அட போட வைக்கும் ஒரு நல்ல படம். NON -LINEAR என்னும் திரைக்கதை முறையை பயன்படுத்தி ஒரு அழகான படத்தை கொடுத்து இருக்கிறார் சுனில் இப்ராகிம். இது இவருடைய முதல் திரைப்படம் பார்த்தால் அப்படி தெரியாது.
படத்தின் திரைக்கதை preface மற்றும் 4 chapters என பிரிக்கப்பட்டுள்ளது.படத்தின் கதையை நான் சொல்ல போவதில்லை , சொல்லிட்டா அது படம் பார்க்கும் போது அதோட சுவாரசியத்தை குறைச்சிடும் . பெரும்பாலும் non -linearன அது ஆக்சன் கதைகள் தான் வரும்னு இதுவும் ஆக்சன் படம்னு நினைச்சுடாதீங்க இது ஒரு சின்ன டிராமா கதை அவ்ளோ தான் அனால் அதை சொல்லிய விதத்தில் தான் இந்த படம் தனித்து நிக்கிறது.
படத்தில் நடித்த நடிகர்கள் பற்றி சொல்லலும்னா ஸ்ரீனிவசானுகும்,நிவினுகும் தான் அதிக நேரம் ஸ்க்ரீன் டைமிங் அதனால அவங்கள பத்தி மட்டும் பாப்போம். முதல நிவின் தட்டத்தின் மறையது பட நாயகன் , தட்டத்தின் மறையத விட இதுல நல்ல நடிச்சு இருக்கார் இவரோட நடிப்பு படத்தோட கதைக்கும் காட்சிக்கும் தேவையான அளவை தாண்டவே இல்லை அவரோட திரை பயணத்திற்கு ஒரு நல்ல ஆரம்பம் . ரெண்டாவது ஸ்ரீனிவாசன் திலகன் விட்டுட்டு போன இடத்தை மலையாளத்தில் நிரப்புற நடிகர், நடிப்பு மிக இயல்பா அவருக்கு வருது. பிறகு தெரிந்த முகம்னு பார்த்தா கௌதமி நாயர் அவருக்கு பெருசா ஒன்னும் ரோல் இல்ல.
படத்தோட உண்மையான ஹீரோ படத்த எழுதி இயக்கின சுனில் இப்ராஹிம்தான் கிட்ட தட்ட படத்துல முக்கியமான கதபாதிரான்கள்னு இருபது பேர் வராங்க அந்த அத்தன பேரோட காதாபாதிரங்களுயும் நல்ல எழுதி அத இயக்கம் மூலமா நன்றாக திரையில கொண்டு வந்து இருக்கார்.படத்தோட ஒளிப்பதிவு கிருஷ் , இசை மேஜோ ரெணடுமே நன்றாக இருந்துச்சு, காத கிழிக்கிற இசை இல்லாம,அழகான மலைகள் backgroundல படம் பாக்றது எப்பவுமே சூப்பராதான் இருக்கும்.
படத்தோட திரைக்கதை முன்னுக்கு பின் போய் வரும் நான்-லினியர் வகை, ஒரே ஒரு பாடல் என படத்தில் கமர்சியல் விசயம்கள் கொஞ்சமாக இருந்தாலும் திரைக்கதை மூலம் தன்னுடைய வெற்றியை நிலை நாடி இருக்கிறார் சுனில் இப்ராகிம்.
CHAPTERS - வித்யாசங்கள் இடையே ஒரு வித்யாசம்.

No comments:
Post a Comment