6/07/2014

HOUSE OF CARDS SEASON-1

நாம என்னதான் மறுத்தாலும் நம்ம எல்லோருக்கும் நம்ம நாட்டோட அரசியல் பதவிகள் மேல ஒரு ஆசை இருக்கும், நாம் இருந்தா எவ்ளோ நல்லது செய்யலாம், நான் மட்டும் பிரதம மந்திரியா இருந்தா பாக்கிஸ்தானை அழிச்சிடுவேன், பஞ்சத்தை தீர்த்திடுவேன்,எல்லோருக்கும் இலவச கல்வி கொடுப்பேன் அப்படி இப்படினு எல்லாரும் ஒரு வாட்டியாவது கனவு கண்டிருப்போம் (தினமும் ஒருவாட்டி) .. ஆனா நாம் என்னதான் நல்லவனா இருந்தாலும் அரசியல்னா அரசியல் தான் பன்னனும்,இன்னொருத்தனுக்கு கெடுதல் நடந்தா தான் நமக்கு நல்லது நடக்கும்.. ஹவுஸ் ஆஃப் கார்ட்ஸ் நான் பார்த்த அரசியல் சம்பந்தப்பட்ட படங்களில் மிகச்சிறந்தது (இது ஒரு நெட்விலிக்ஸ் சீரிஸ், இந்தியாவில் z-cafeஇல் ஒளிப்பரப்பானது).


இது முதலில் பிபிசி இல் சீரிஸாக எடுக்கப்பட்டது அதைப்பார்த்த டேவிட் ஃபின்ச்சர் அதை எடுக்க விருப்பப்பட்டு அமெரிக்காவில் தன் தயாரிப்பின் கீழ் இந்த சீரிஸை எடுத்தார்,முதல் இரண்டு எபிஸோடுகளை அவரே இயக்கவும் செய்தார்(இது போதும் நீங்க இந்த சீரிஸை ஸ்டார்ட் செய்ய).
அமெரிக்க காங்கிரஸ் சபையில் whipஆக இருப்பவர் frank underwood, அவருக்கு புதிய காங்கிரஸில் secretary of the state பதவி வழங்கப்பட இருந்தது அது கடைசி நேரத்தில் அவருக்கு மறுக்கப்படுகிறது..பின் எப்படி அவர் ஒவ்வொரு கார்டாக அடுக்கி தன் அரசியல் பாதையை மாற்றி அமைக்கிறார் எனபது தான் கதை சுருக்கம்..
இது அமெரிக்க அரசியலாச்சே நமக்கு இது புரியுமானு ஒரு சந்தேகத்துலயே நான்  இதை ரொம்ப நாள் கிடப்புல போட்டு வைச்சிருந்தேன், ஆனா ஏதோ ஒரு உள்ளுணர்வு இது எனக்கு இது பிடிக்கும்னு இதை பார்த்தே ஆகனும்னு சொல்லிக்கிட்டே இருந்துச்சு,முக்கியமா கெவின் ஸ்பேஸியோட போஸ்டர்கள் இதை என்னை பார்க்க வைச்சது.
முதல்ல சில பொதுவான அமெரிக்க அரசியல் விசயங்களை நாம தெரிஞ்சிக்கனும்.அமெரிக்காவிலும் நம்ம நாடாளுமன்றம் போல இரண்டு சபைகள் உண்டு. காங்கிரஸ் சபை,செனட் சபை. இதில் காங்கிரஸ் சபையின் பதவி காலம் இரண்டு ஆண்டுகள், செனட் சபையின் பதவி காலம் ஆறு ஆண்டுகள்.அமெரிக்காவில் இருக்கும் மாகானங்களின் மக்கள் தொகைக்கு ஏற்ப காங்கிரஸ் சபையில் அந்த மாகானங்களின் காங்கிரஸ் உறுப்பினர்கள் இருப்பர் ஆனால் செனட் சபையில் ஒரு மாகானம் எவ்வுளவு சிறியதாக இருந்தாலும் பெரியதாக இருந்தாலும் அதற்கு இரண்டு செனட் உறுப்பினர்கள் இருப்பர், இதன் மூலம் சிறு மாகானங்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும். காங்கிரஸ் சபையில் எந்த திட்டம் கொண்டுவந்தாலும் அதை நிறைவேற்ற செனட் சபையின் ஒப்புதல் அவசியம்.
இதில் கதையின் நாயகன் ஃப்ரான்க் அண்டர்வுட் காங்கிரஸ் சபையில் ஏற்றிருக்கும் பதவியின் பெயர் whip, காங்கிரஸ் சபையில் மிக முக்கியமான பதவி. தமிழ்ல இதுக்கு பேரு கொரடானு சொல்லுவாங்க. நம்ம மாநில அரசியலை மட்டும் கவனிச்சிக்கிட்டு வந்தோம்னா அந்த பதவி பத்தி பெரிசா நமக்கு தெரிய வராது ஆனா மத்தில மிக முக்கியமான ஒரு பதவி.ஒரு கொரடாவோட வேலை அந்தக் கட்சியோட மேனஜர் மாதிரி.ஒரு ஆளும் கட்சி கொரடா,ஆளும் கட்சி சபையில கொண்டுவர திட்டத்தை நிறைவேற்றதுக்கு என்ன தேவை,ஒட்டெடுப்பு நடந்தா பெருமான்மையா எப்படி கொண்டு வரனும் எல்லாத்தையும் அவர் தான் பார்த்துக்கனும்.கொரடாட்ட ஒப்புதல் வாங்காமா எதுவும் கொண்டு வரமாட்டாங்க. 
அமெரிக்க காங்கிரஸ் சபையில் கொரடாவாக இருக்கும் ஃப்ரான்க் அண்டர்வுட்டுக்கு இந்த முறை செக்ரட்டரி ஆஃப் ஸ்டேட் பதவி வழங்கயிருந்த நிலையில் புது ஜனாதிபதி ஃப்ரான்க்கின் சேவை காங்கிரஸுக்கு தேவைனு சொல்லி அவருக்கு செக்ரட்டரி பதவி வழங்க மறுக்கிறார். இதனால் ரொம்பவும் மனம் உடைந்து போகும் ஃப்ரான்க் தன்னோட அரசியல் விளையாட்டுகளை செய்ய ஆரம்பிக்கறார்.

புதிய ஜனாதிபதி தன்னோட முதல் திட்டமா கல்வியில் மாற்றம் கொண்டுவரும் ஒரு அரசியல் திட்டத்தை சபையில் நிறைவேற்ற நினைக்கிறார். இது முதலில் ஒருவருக்கு தரப்படுகிறது, ஃப்ரான்க்கின் மேற்ப்பார்வை நடக்க வேண்டும் என ஜனாதிபதி விரும்புகிறார். ப்ரான்க் அந்த திட்டத்தை தன் திட்டத்துக்குள் கொண்டு வந்து முழு பெயரையும் அவரே ஜனாதிபதியிடம் இருந்து பெறுகிறார். இதற்கு  அவருக்கு உதவியாக வாஷிங்டன் ஹெரால்டில் வேலை பார்க்கும் zoeyயும் பத்திரிக்கை உலகில் பெரியவளாக வேண்டும் என்பதற்க்காக ஃப்ரான்க்குக்கு உதவுகிறாள்.

இதற்கு இடையில் காங்கிரஸ் சபையில் இளம் உறுப்பினரான் பீட்டர் ரூஸோ குடித்துவிட்டு ஒரு விலைமாதுவுடன் கார் ஓட்டிச் செல்லும் பொழுது போலிஸிடம் மாட்டிவிட அவரை போலிஸிடம் இருந்து விடிவித்து ஃப்ரான்க்கிடம் மாட்டிக்கொள்கிறார் ஃப்ரான்கின் அரசியல் விளையாட்டுகள் முழுவதிலும் பகடைக்காயாக இருப்பவர் பீட்டர் ரூஸோ.

இந்தக் கதைகளைத் தவிர,ஃப்ரான்க் மற்றும் அவரது மனைவி கிளைரின் கதையும் ஒரு தனி டிராக்காக ஓடிக்கொண்டிருக்கிறது.அதுவும் ஒரு சுவாரஸ்யமான டிராக் தான். பிரான்க் மேல காதல்,அவருக்காக எல்லாம் செய்ய நினைக்கும் கிளைர் இருந்தாலும் அவர் மனசுல இருக்கும் சின்ன சின்ன கோபங்கள்,காதல்கள்,அவரது கம்பெனியில் நடக்கும் விசயங்கள் என ஃப்ரான்க்குக்கு பிறகு ரொம்ப சுவாரஸ்யமான,முக்கியமான கேரக்டர்.

அது எப்படி கெவின் ஸ்பேசியை பத்தி பேசாம இருக்க முடியும். மொத்த சீரிஸையும் தாங்கிப் பிடிக்கிறதே அவர் தானே. முதல் எபிஸோடுல முதல் காட்சில ஒரு நாய் கார்ல அடிப்பட்டு செத்துக்கிட்டிருக்கும் அதுக்கு உதவி செய்ய போகும் போது ஸ்பேசி கேமராவைப் பார்த்துக்கொண்டு நமக்கு வலிகளை பற்றிப் பாடம் எடுப்பார்.அதுல இருந்தே தூள் தான். ஒரு காட்சிக்கு நடுவுல லேசா கழுத்தை திருப்பி அவர் நம்மளைப் பார்த்துட்டு திரும்பவும் காட்சிக்குள்ள போவார், அந்த மாதிரி சின்ன சின்ன கேப்ல கூட கோல் அடிச்சிட்டு போயிடுவார் ஸ்பேசி.

சீரிஸ்கள் நான் பார்த்ததில்லைனு சொல்றவங்களூக்கு இதை என்னால ஒரு ஸ்டார்டரா உங்களுக்கு தெரிவு செய்ய முடியாது,ஆனா இதை அமெரிக்க அரசியலாச்சேனு சொல்லி தவிர்க்கிறவுங்களுக்கு- கொஞ்சம் கவனிச்சோம்னா எல்லா ஊர் அரசியலும் ஒரே மாதிரி தான். கண்டிப்பாக பார்க்க வேண்டியது.



( இடையில் சில பிரச்சனைகளால் இந்த பிளாக்கில் இருந்து விலகியிருந்தேன், என்னை மீண்டும் வரவைத்த ஆண்டிச்சாமிக்காக இந்த போஸ்ட்)

No comments:

Post a Comment