இது நான் கடல் படத்துக்கு பிறகு ஒரு படம் எப்படி இருக்கும் என்று எழுதவிருக்கிறேன். நான் கடல் படத்தின் முன்னோட்டத்தை பார்த்து எழுதிய ஒரு சில விசயங்கள் அந்தப் படத்தில் இருந்தது எனக்கு சந்தோசம் .அதற்கு பிறகு நான் இப்பொழுது செல்வராகவனின் “இரண்டாம் உலகம்”. செல்வாவை பாராட்ட வேண்டும், இதற்கு முன் ஒரு ஃபாண்டஸி எடுக்கிறேன் என்று சூடு போட்டுக்கொண்டாலும் மீண்டும் அதே வகையில் மிண்டும் ஒரு படம் எடுத்திருக்கிறார். அதனால் அவரோட முந்தியப் படத்தின் தவறுகளை நிவர்த்தி செய்திருப்பார் என்ற நோக்கில் எந்தவொரு prejudice இல்லாமல் இந்தப் படத்தின் முன்னோட்ட காட்சியையும், நிழற்படங்களையும் அனுகுவோம்.
முன்னோட்டத்தில் காட்டப் பட்டிருக்கும் காட்சிகளில் ஒரு சில இடங்களில் ஆர்யாவின் நடிப்பு கொஞ்சம் தேவைக்கு தூக்கலாகவே இருக்கிறது. அது நாம் படத்தை முழுமையாக பார்த்தபின்பு விவாதிக்க பட வேண்டிய ஒன்று என்பதால் அதை இப்படியே விட்டு விடுகிறேன்.இந்தப் படத்தின் முன்னோட்டத்தை பார்த்தப் பின் இரண்டு விதமாக இந்தக் கதை இருக்கலாம் என்ற சாத்தியக்கூறுகள் இருக்கு . இவை வெறும் சாத்தியமே அது அப்படியே அந்தப் படத்தில் வரும் என்பதற்க்கு எந்த விதமான் உத்திரவாதமும் இல்லை. சரி எனக்கு தோன்றிய இரண்டு விசயங்கள் இதோ.
இந்த ரெண்டு போஸ்ட்ர் வச்சு பார்த்தா இந்தக் கதை எதோ இரண்டு வெவ்வேறு காலக் கட்டத்தில் நடக்கும் இருவரின் கதை என்பது போல இருக்கும். ஆனால் இந்தப் படத்தின் முன்னோட்டக் காட்சி இந்த சாத்தியத்தை முழுமையாக தவிர்கிறது.
இந்தப் படத்தின் முன்னோட்டம் :இரண்டாம் உலகம் டிரைலர்
1. ஆர்யாவோ, அனுஷ்கா இருவரும் காதலித்து பிரியும் சூழ் நிலையில், இவர்கள் இருவரில் யாரேணும் ஒருவருடய ஃபாண்டஸி உலகத்தில் ஒருவர் நுழைந்து அந்தக் காதலை புரிய வைப்பது. ( Paprika, inception மாறி இருக்கலாம்) இந்த சாத்தியத்தை தவிர்க்க முடியவில்லை.ஏன்னென்றால் ஆர்யாவுடய கதாப் பாத்திரம் விஞ்ஞானியாகத் தான் தெரிகிறது.
2. வேற்றுகிரகம். இது என்னோட அபிமானம். ஆர்யாவும் அனுஷ்காவும் வேற்றுகிரகத்தில் இருக்கும் இன்னொரு காதல் ஜோடிகளுடன் காதலால் இனைக்கப் படுகிறார்கள். இதற்கு விஞ்ஞான் பூர்வமாக சாத்தியம் இருக்கிறது. ஐன்ஸ்டினின் தியரி ஆஃப் எவ்ரிதிங், அவர் இறந்த பின் ஐன்ஸ்டினால் நிருபனம் செய்ய் முடியாத அந்த தியரியை பலர் நிருபனம் செய்ய முற்படும் போது நம் உலகில் 11 dimensionகள் இருப்பது, நம் உலகை போண்ற ஒரு மாற்று கிரகம் இருப்பது முழுக்க சாத்தியம் என்று நிருபனம் செய்திருக்கிறது. ஆனால் இந்த இரண்டு உலகத்துக்கும் இடையில் எது பாலமாக இருக்கிறது, எப்படி இந்த இருவரும் அந்த உலகத்தில் இருக்கும் இருவருடன் பினைப்பு ஏற்படுகிறது.எல்லாம் அந்தப் படத்தை பார்த்த பின் தான் வெளிச்சம்.
இதற்கு மேல் பல சாத்தியங்கள் இருக்கு ஆனால் அது தேவையில்லாமல் ஒரு அதீதமான எதிர்ப் பார்ப்பை அதிகரிக்கும் என்பதாலும், உங்கள் மனதில் இதைவிட பல நல்ல அபிமானங்கள் இருப்பதாலும் நான் இத்தோடு முடித்துக் கொள்கிறேன்.


my suggestion
ReplyDeletewatcg The fountain movie starring hugh jackman.
it has a touch of 2 aam ulagams trailer.maybe its the otherway
yeah i have watched "The fountain", i too see some similarities but let just not compare a movie before it releases...but from trailer yeah it's possible... உங்களின் கருத்துக்கு நன்றி...
Delete